Cinema Rewind: சில்க் ஸ்மிதா கிட்டக்கூட நெருங்க முடியாது.. ராதிகா பகிர்ந்த ஆச்சர்ய தகவல்!

Actress Radhika Sarathkumar : தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ராதிகா சரத்குமார். நடிகர் எம்.ஆர். ராதாவின் மகளான இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சீரியல் நடிகையாகவும் நடித்த இவர் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் முன்னதாக அளித்திருந்த பேட்டி ஒன்றில் நடிகை சில்க் சுமிதாவை பற்றிச் சொன்ன விஷயம் இணையத்தை வைரலாகி வருகிறது.

Cinema Rewind: சில்க் ஸ்மிதா கிட்டக்கூட நெருங்க முடியாது.. ராதிகா பகிர்ந்த ஆச்சர்ய தகவல்!

நடிகை ராதிகா சரத்குமார்

Published: 

13 Nov 2024 09:32 AM

நடிகை ராதிகா சரத்குமார் 1978ல் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “கிழக்கே போகும் ரயில்” என்ற  படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படத்திற்காகவே சிறந்த நடிகைக்கான “ஃபிலிம் பேர்” விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இனிக்கும் இளமை, நிறம் மாறாத பூக்கள், முகத்தில் முகம் பார்க்கலாம் மற்றும் வேலும் மயிலும் துணை போன்ற திரைப்படத்தை ஒரே ஆண்டில் நடித்தார். இந்த திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக வலம்வந்தார். 80,90களின் காலகட்டத்தில் சிறந்த நடிகையாக இருந்த இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார்.

தற்போது படங்களில் அம்மா மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகை ராதிகா சில்க் ஸ்மிதாவை பற்றி முன்னதாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

சில்க் சுமிதா பற்றி ராதிகா சொன்ன விஷயம்..

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. தற்போது இவரைப் பற்றி நடிகை ராதிகா சொன்ன விஷயம் என்னவென்றால் ” நடிகை சில்க் ஸ்மிதா திரைப்படங்களில் பார்ப்பதுபோல அவர் நிஜவாழ்க்கையில் இல்லை என்றும், அவர் மிகுந்த மரியாதைக்குரிய நடிகை என்றும், அவர் ஷுட்டிங் வரும்போது ஒரு இடத்தில் கால்மேல் கால் தூக்கிப்போட்டு ஸ்டைலாக அமருவார், சுத்தி இருந்த அனைவரும் அவரை பார்த்து ஜொள்ளு விடுவார்களே தவிர யாரும் அவர் பக்கத்தில் கூடப் போகமுடியாது. அவர் மிகவும் குழந்தைத் தனமாகப் பேசுவார் என்றும் அவர் பேசுவதைக் கேட்டால் நமக்குச் சிரிப்புதான் வரும். அவர் மிகுந்த மரியாதைக்கு உரியவர் என்றும் அந்த நேர்காணலில் கூறியிருப்பார்.

இதையும் படிங்க : கிளைமேக்ஸ் காட்சி.. சுப்பிரமணியபுரம் ஷூட்டிங்கில் நடந்த சண்டை!

நடிகை சில்க் சுமிதாவின் சினிமா பயணம்

தமிழ் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சில்க் ஸ்மிதா. 1970களில் மேக்கப் ஆர்டிஸ்ட்டாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர் பின் 1979ம் ஆண்டு இயக்குநர்க் கே.விஜயன் இயக்கத்தில் வெளியான “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில் நடிகர் வினுசக்கரவர்தியால் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு அந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் “சிலுக்கு” என்ற பெயரும் வந்தது. தனது நடிப்பில் வெளியான முதல் திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் மக்களின் மனதில் பிரபலமான இவருக்குத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்காக வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது.

இதையும் படிங்க :பிதாமகன் படத்தில் நடிக்க இதுதான் காரணம்.. மனம் திறந்த நடிகை சங்கீதா!

நடிகை சில்க் ஸ்மிதா ஆந்திர மாநிலத்தில் பிறந்திருந்தாலும் இவருக்குப் பூர்விகம் தமிழ்நாட்டில் உள்ள கரூர் மாவட்டம் தான். வெறும் நான்காம் வகுப்பு வரை படித்த இவர் குடும்ப வறுமையின் காரணத்தால் தனது படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

சிறுவயது முதலே வசீகரமான தோற்றத்தை கொண்ட இவருக்குப் பலரும் தொல்லை கொடுத்துள்ளனர். இதன் காரணமாக இவரின் பெற்றோர் இவருக்குச் சிறுவயதிலே திருமணம் செய்துள்ளனர்.

பின் திருமண வாழ்க்கையின் கஷ்டத்தால் சென்னை வந்த இவர் அதன் பிறகுதான் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து இவருக்குப் பல மொழி திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளில் தேடி வந்தது. இதனையடுத்து 1979 ஆண்டு “இணையே தடி” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து மலையாள சினிமாவில் அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து அவர் முதல் திரைப்படத்திலே கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானதால் இதையடுத்து அவருக்கு வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதற்குக் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க :NGK படத்தில் நடிக்கவே முடியல’ நடிகை சாய் பல்லவி சொன்ன விஷயம்..!

சில்க் டான்ஸ்

இதனைத் தொடர்ந்து ’80ஸ் காலத்தில் வெளியான திரைப்படங்களில் இவரின் நடனம் இல்லாத திரைப்படமே கிடையாது’ என்று கூறும் அளவிற்குத் திரைப்படங்களில் முன்னணி நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் வலம் வந்தார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்த இவர், சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளாராம்.

தனது திரைப்படங்களின் மூலம் பிரபல நடிகையாக இருந்து வந்த சில்க் ஸ்மிதா 1996ம் ஆண்டு சென்னையில் தனது வீட்டில்   தற்கொலை செய்துக் கொண்டார். இந்நிலையில் இவரின் இறப்பு குறித்துபல சர்ச்சைகளும் இன்றளவும் எழுந்து வருகிறது. இதனை அடுத்து சில்க் ஸ்மிதாவின்  வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு 2011ம் ஆண்டு “தி டர்டி பிக்சர்” என்ற இந்தி திரைப்படமும் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!