Cinema Rewind: ’’கமல்ஹாசன் படத்தில் நடிக்க கஷ்டப்பட்டேன்..’’ ரம்யா கிருஷ்ணன் சொன்ன விஷயம்…

Actress Ramya Krishnan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். இவர் திரைப்படங்களில் நடிகையாக மட்டுமில்லாமல் துணை கதாபாத்திரமாக, வில்லியாக மற்றும் அம்மா கதாபாத்திரம் என இவர் நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது.

Cinema Rewind: ’’கமல்ஹாசன் படத்தில் நடிக்க கஷ்டப்பட்டேன்..’’ ரம்யா கிருஷ்ணன் சொன்ன விஷயம்...

நடிகை ரம்யா கிருஷ்ணன்

Published: 

28 Nov 2024 18:52 PM

நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துப் பிரபலமாகினாலும், இவர் நடிகையாக அறிமுகமாகியது மலையாள சினிமாவில்தான். 1986ம் ஆண்டு இயக்குநர் கே.பி.குமரன் இயக்கத்தில் வெளியான “நேரம் புலரும்போல்” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக்கினார். இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தமிழில் இயக்குநர் ஓய்.ஜி. மகேந்திரன் இயக்கத்தில் வெளியான “வெள்ளை மனசு” என்ற படத்தின் மூலம் அறிமுகமாக்கினார். இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்துத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணையாக அதிக நடித்துள்ளார்.

தமிழில் தொடர்ந்து பார்த்த ஞாபகம் இல்லையோ, படிக்காதவன், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு மற்றும் சொல்லும் பிள்ளை போன்ற திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டார். 1990ல் இருந்து தற்போதுவரை திரைப்படங்களில் சீனியர் ஆர்டிஸ்ட்டாக பல திரைப்படங்களில் லீட் தற்போது வரை நடித்து வருகிறார். ரஜினியுடன் இவர் நடித்த படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமான இவருக்கு இவர் நடிப்புக்கு என்றே தனி ரசிகர்களே உண்டு. இதுவரை இவர் நடித்ததில் பிரம்மாண்ட வெற்றி திரைப்படமாக அமைந்தது “பாகுபலி”.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் “சிவகாமி தேவி” என்று ராஜமாதா கதாபாத்திரத்தில் நடித்து உலகளாவிய மக்களிடையே பிரபலமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவர் முன்னதாக நடிகர் கமல் ஹாசனை பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:சூர்யாவுடன் படம் பண்ணும்போது எனக்குப் பயம்… இயக்குநர் ஹரி ஓப்பன் டாக்

நடிகர் கமல்ஹாசன் குறித்துப் பேசிய நடிகை ரம்யா கிருஷ்ணன்..

வீடியோவில் பேசிய நடிகை ரம்யா கிருஷ்ணன் கமல் சார் உடன் நடிப்பது என்றாலே தனி பயம்தான். அதிலும் அவருக்கு நேராக டயலாக் பேசி நடிப்பது என்றால் எந்த ஒரு நடிகருக்குப் பயம் வரும். அது போலப் பஞ்சதந்திரம் படத்தில் எனக்கு முதல் ஷாட் அவரோடதான். மேகி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்ததில் ஒரு அற்புதமான கதாபாத்திரம் என்றும் அதில் அந்த கேரெக்டருக்கு தனியா நளினமும் இருக்கணும் கமல் சார் அருமையா அவர் கதாபாத்திரத்தில் நடிச்சிட்டாரு எனக்கு அவர் முன்னாடி நடிக்கிறது பயமா இருந்துச்சி.

அந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்கிறதுக்கு நிறையக் கஷ்டப்பட்டேன்” என்றும் அந்த வீடியோவில் கூறியிருப்பார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:புதுப்பேட்டை படத்தில் நடிகை சினேகா நடிக்க யார் காரணம் தெரியுமா?

நடிகர் கமலின் சினிமா வாழ்க்கை

தமிழ் சினிமாவில் தனது பிரமாதமான நடிப்பின் மூலம் மக்களிடையேயும் சரி , திரைப்பட நடிகர்களிடையேயும் சரி மிகவும் பிரபலமானவர் கமல்ஹாசன். திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் பிரபல நடிகரானவர் இவர்.

1960ம் ஆண்டு வெளியான “களத்தூர் கண்ணம்மா” படத்தின் மூலம் திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்த இவர் 1973ம் ஆண்டு இயக்குநர் கே. பாலசந்திரன் இயக்கத்தில் வெளியான “அரங்கேத்ரம்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

இப்படத்தினை தொடர்ந்து மாபெரும் திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் அபூர்வ ராகங்கள். 1975ம் ஆண்டு இயக்குநர் கே. பாலசந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த  படத்தில் பிரமாதமாக நடித்துப் பிரபலமானார்.

மாபெரும் வெற்றியாக இப்படத்தினை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தது. இப்படத்தினை அடுத்ததாக மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் போன்ற திரைப்படங்கள் வெற்றியாக அமைந்தது.

இதையும் படிங்க:“எனக்கு பிடிச்ச வில்லன் கதாபாத்திரம் இவர்தான்” நடிகர் ஜெயம் ரவி ஓப்பன் டாக்!

இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து இந்தியில் சினிமாவில் நுழைந்த இவர் சத்மா மற்றும் சாகர் போன்ற திரைப்படங்களில் அடுத்து அடுத்து நடித்து இந்தி சினிமாவில் பிரபலமானார். இந்தி திரைப்படங்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து தெலுங்கில் சாகர சங்கமம், முத்யம் போன்ற போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானார்.

தமிழ் சினிமாவில் அன்புடன் உலகநாயகன் என்று அழைக்கப்பட்ட இவர் “தசாவதாரம்” என்ற படத்தில் பல கெட்டப்பில் நடித்து பெரும் வரவேற்புக்கு உள்ளானார்.. இப்படத்தினை தொடர்ந்து இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்குப் பல பெற்றுள்ளார்.

இவரை நடிகர் என்று சொல்வதைவிடத் தமிழ் சினிமாவே இவர்தான் என்றும் கூடச் சொல்லலாம் அந்த அளவிற்குத் திரைப்படங்களின் நடிப்பின் மூலம் பல ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ளார். இந்த அளவிற்குத் தமிழ் சினிமாவில் பிரபலமான கமல் சுமார் 230க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவை தற்போது நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக, எழுத்தாளர், பாடகர்,சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி எனப் பல வேலைகளைசெய்துவருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தக் லைப் மற்றும் இந்தியன் 3 போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

இதையும் படிங்க:மணிரத்னம் படத்தில் நடிக்காததற்குக் காரணம் இதுதான்.. நடிகர் மைக் மோகன் சொன்ன விஷயம்?

ஏன் நின்று கொண்டு பால் குடிக்க வேண்டும்..?
தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா?
கொய்யா இலை தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாவது எப்படி?