5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: ’ NGK படத்தில் நடிக்கவே முடியல’ நடிகை சாய் பல்லவி சொன்ன விஷயம்..!

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாகிவரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் சாய் பல்லவி. தமிழில் நடிகர் தனுஷ் நடித்த மாரி 2 திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகிய இவர் தற்போது இவரின் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு எனப் பல மொழி திரைப்படங்களை நடிகையாகப் பிரபலமாகி வரும் இவர் தற்போது ராமாயணம் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார்.

Cinema Rewind: ’ NGK படத்தில் நடிக்கவே முடியல’ நடிகை சாய் பல்லவி சொன்ன விஷயம்..!
நடிகை சாய் பல்லவி
barath-murugan
Barath Murugan | Updated On: 12 Nov 2024 16:08 PM

தமிழ்த் திரைப்படங்களில் 2018ல் இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி 2 திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் சாய் பல்லவி. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்து மிகவும் தமிழ் மக்களிடையே பிரபலமாகினார். மாரி 2 திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினாலும் 2015ல் வெளியான பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாகவே தென்னிந்திய மக்களிடையே நடிகையாகப் பிரபலமாகினார். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்குப் பல திரைப்படங்களில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடிவந்தன. தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்துவரும் நடிகை சாய் பல்லவி முன்னதாக ஒரு நேர்காணலில் நடிகர் சூர்யாவுடன் நடித்த NGK நடிக்கவே முடியவில்லை என்றும் படப்பிடிப்பு பகுதியிலிருந்து சென்றுவிடலாம் என்று நினைத்தேன் என்றும் பேசியிருப்பார் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாய் பல்லவி சொன்ன விஷயம்

நடிகை சாய் பல்லவி இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான என்.ஜி.கே திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த மூன்றாவது நாளில் திரைப்படத்திலிருந்து விலகிவிடலாம் என்று நினைத்ததாகவும், அப்படத்தில் என்னால் ஒழுங்காக நடிக்க முடியவில்லை என்றும் அந்த திரைப்படத்தின் நான் நடித்த கதாபாத்திரம் எனக்கு சரியாக எனக்குப் புரியவில்லை என்று கூறினார்.

ஏன் என்றால் செல்வராகவன் ஒரு திக்கிலே ஓக்கே சொல்லமாட்டார் என்று அந்த படத்தில் ஒரு டேக்கிற்காக ஒருநாள் முழுவதும் செலவழித்ததாகவும் அதில் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறினார். இதை நான் தனுஷ் சாரிடம் சொன்னபோது அவர் அப்படித்தான் நீ கண்டுக்காத என்றும் சொன்னார். பின் மறுநாள் எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் ஒரு டேக்கில் ஓக்கே சொன்னார் அது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது என்றும் அந்த காணொளியில் பேசியிருப்பார்.

இதையும் படிங்க :“ரேவதினு கூப்பிட்டா திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேன்” – நடிகை ரேவதி சொன்ன விஷயம்…

சாய் பல்லவியின் சினிமா அறிமுகம்

தனது சிறுவயதிலிருந்து திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய நடிகை சாய் பல்லவி 2005ல் வெளியான கஸ்தூரி மான் என்ற திரைப்படத்திலும் அதனைத் தொடர்ந்து 2008ல் வெளியான தாம் தூம் திரைப்படத்திலும் குழந்தை கதாபாத்திரங்களிலும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை அடுத்து தனது மருத்துவ படிப்பில் மிகவும் பிசியாக இருந்த நடிகை சாய் பல்லவி 2015ம் ஆண்டு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘பிரேமம்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தான் மூலமாக சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இந்த திரைப்படத்தில் ‘மலர்’ என்ற கல்லூரி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்த இவர் மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு எனத் தென்னிந்திய மக்களிடையே பிரபலமானார். இந்த திரைப்படம் இவருக்குப் பிரம்மாண்ட வெற்றியைத் தந்த நிலையில் இப்படத்தினை தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து காலி என்ற திரைப்படத்தில் முன்னணி நடிகையாக நடித்திருந்தார். இந்த திரைப்படமும் இவருக்கு ஹிட்டானதை அடுத்து இவருக்குத் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது.

இதையும் படிங்க :”மனோரமாவிற்கு பிறகு இவங்கதான்” – சசிகுமார் புகழ்ந்த நடிகை யார் தெரியுமா?

தெலுங்கு திரைப்பட அறிமுகம்

இதனைத் தொடர்ந்து ஃபீடா மற்றும் மிடில் கிளாஸ் அப்பாயி போன்ற திரைப்படங்களில் நடித்து தெலுங்கு மக்களிடையேயும் அறிமுகமாகினார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துவந்த நிலையில் தனது மருத்துவ படிப்பினை பாதியில் விட்ட இவர் பிறகு 2020ம் ஆண்டில் தான் தனது மருத்துவ படிப்பின் இருந்து தேர்வை முடித்து மருத்துவராக இந்தியாவில் பட்டம் பெற்றார். இவர் நடிகையாகப் பிரபலமானாலும் இவர் சிறந்த டான்ஸரும் ஆவார்.

இவர் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா மற்றும் தீ அன்லிமிடெட் போன்ற டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறந்த நடனமாடுபவராகப் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷுடன் மாரி 2 திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாக்கினார். இப்படத்தினை தொடர்ந்து என்.ஜி.கே.,பாவ கதைகள் மற்றும் தியா, கார்கி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவந்தார்.

இதையும் படிங்க :Cinema Rewind: ‘சரண்யா மீது காதல் வர இதுதான் காரணம்’.. பொன்வண்ணன் சொன்ன விஷயம்..

அமரன் திரைப்பட வெற்றி

இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் வெளியான இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தினை கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியினை தொடர்ந்து அடுத்ததாகப் பாலிவுட் இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் என்ற திரைப்படத்தில் சீதையாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2026ம் ஆண்டு தீபாவளியை ஒட்டி வெளியாகும் என்றும் அடுத்த பாகம் 2027 தீபாவளியில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க :Cinema Rewind: கமல் சாரின் பக்தன் நான்… நடிகர் மாதவன் சொன்ன விஷயம்

Latest News