Cinema Rewind: பிதாமகன் படத்தில் நடிக்க இதுதான் காரணம்.. மனம் திறந்த நடிகை சங்கீதா!
Actress Sangeetha : தமிழ் சினிமாவில் துணை நடிகை மற்றும் வில்லி கதாபாத்திரம் போன்றவற்றில் பிரபலமானவர்தான் நடிகை சங்கீதா. 1997ல் 'கங்கோத்ரி' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படங்களில் நடிகையாக அறிமுகமாகிய இவர் தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களில் பிரபலமாகி வருகிறார். இந்நிலையில் இவர் முன்னதாக பேசியிருந்த நேர்காணலில் இயக்குநர் பாலாவின் பிதாமகன் திரைப்படத்தில் தான் நடித்தற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.
பிரபல நடிகை சங்கீதா நடிகை மட்டுமில்லாமல் பிரபல பின்னணி பாடகரான கிரிஷ் என்பவரின் மனைவியும் ஆவார். மலையாள திரைப்படமான 1997ல் வெளியான “கங்கோத்ரி” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானாலும் இவர் அதற்கு முன்னதாக தமிழில் ‘பூஞ்சோலை’ என்ற வெளிவராத திரைப்படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து முதன் முதலாகத் திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார். தொடர்ந்து நடிப்பின் மீது ஆர்வம் காட்டிய நடிகை சங்கீதா தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இவர் தமிழில் ‘காதலே நிம்மதி, உதவிக்கு வரலாமா, பகவத் சிங் மற்றும் கண்ணுல காசு கட்டப்பா’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து 2003 இவரின் முக்கியமான நடிப்பில் வெளியான திரைப்படம் பிதாமகன். இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் “கோமதி “என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
இந்த திரைப்படத்திற்காகச் சிறந்த துணைக் கதாபாத்திரத்திற்கான விருதையும் பெற்றார். இந்நிலையில் முன்னதாக இவர் பேசியிருந்த வீடியோ ஒன்றில் “பிதாமகன் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் இன்னொரு நடிகை நடிப்பதாகவும் அவர் சென்றதால் என்னை இப்படத்தில் நடிக்க வைத்தார்” என்றும் அதில் கூறியிருப்பார்.
காரணத்தைச் சொன்ன நடிகை சங்கீதா
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிதாமகன். இப்படத்தில் நடிகை சங்கீதா ‘கோமதி’ என்ற துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கூறிய இவர் “நான் முதலில் பாலாவிடம் உங்கள் திரைப்படத்தில் நடிக்க எதாவது வாய்ப்புகள் இருந்தால் சொல்லுங்க என்று கூறியதாகவும், உடனே இப்போதே மதுரைக்கு வா என்றும் கூறினார்.
முதலில் அவரிடம் கேட்டேன் சார் நீங்கச் சொன்ன கதாபாத்திரத்தில் வேற நடிகை நடிக்கிறாங்க அவர்களை விட்டுவிட்டு என்னை ஏன் கூப்புடுறீங்க என்று கேட்டேன். அதற்கு அவர் இதெல்லாம் உனக்கு தேவையில்லை என்று கூறினார். அதன் பிறகுதான் தெரிகிறது “கோமதி” கதாபாத்திரத்தில் முதல் நடித்த நடிகை நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டார் என்றும் அதற்காக தான் என்னை அழைத்தார் என்றும் எனக்குத் தெரியவந்தது என்று ஃபன்னாக கூறியிருப்பார்.
இதையும் படிங்க :’ NGK படத்தில் நடிக்கவே முடியல’ நடிகை சாய் பல்லவி சொன்ன விஷயம்..!
இயக்குநர் பாலாவின் திரைப்பட அறிமுகம்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் பாலா. தனது வித்தியாசமான கதைகளில் நாளும் மாறுபட்ட சித்தரிப்பினாலும் மிகவும் பிரபலமானவர் இவர். ஆரம்ப வாழ்க்கையில் பாடலாசிரியராக இருந்த இவர் தற்போது குழப்பமாகவும் ,ஆற்றும் எதார்த்த கதைகளின் அமைப்பிற்குப் பெயர்போனவர். இவர் முதலில் இயக்குநர் பாலுமகேந்திராவின் திரைப்படங்களில் பாடலாசிரியராக பணியாற்றிய இவர் பின் அவர் இயக்கம் திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்ற ஆரம்பித்தார்.
தொடர்ந்து திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் கட்டிய இவர் 1999ம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “சேது” என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகினார். இப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அபிதா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
மிகவும் வித்தியாசமான மாறுபட்ட திரைக்கதைகளுடன் அமைந்த இத்திரைப்படம் பல விருதுகளைப் பெற்றது. இயக்குநர் பாலா தனது முதல் திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் சினிமாவில் பேமஸ் ஆனார். இதனையடுத்து நடிகர் சூர்யா நடிப்பில் 2001ல் வெளியான நந்தா திரைப்படத்தை இயக்கினார் மிகவும் சாதாரணமாகவும், மாறுபட்ட கதைகளால் பிரபலமான இத்திரைப்படம் நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கைக்கும் மிகப் பெரிய மாற்றமாக அமைந்தது.
இதையும் படிங்க :‘சரண்யா மீது காதல் வர இதுதான் காரணம்’.. பொன்வண்ணன் சொன்ன விஷயம்..
பாலாவின் வெற்றி திரைப்படங்கள்
அடுத்தாக தனது முதல் திரைப்பட நடிகரையும் மற்றும் இரண்டாவது திரைப்பட நடிகரையும் இணைத்து உருவாக்கிய திரைப்படம் பிதாமகன். 2003ல் வெளியான இப்படத்தில் சூர்யா, விக்ரம், லைலா மற்றும் சங்கீதா போன்றவர்கள் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படமும் இவருக்கு வெற்றியைத் தரவே தொடர்ந்து திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார். இவர் ‘நான் கடவுள், அவன் இவன், பரதேசி மற்றும் தாரை தப்பட்டை’ போன்ற திரைப்படங்களை இயக்கினார்.
இதிலும் பரதேசி திரைப்படம் இவருக்குப் பயங்கர வெற்றியையும், பெயரையும் தந்தது. நாச்சியார், வர்மா போன்ற திரைப்படங்களை இயக்கி பின் தற்போது நடிகர் அருண் விஜய் நடிப்பில் “வணங்கான்” என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படம் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் தற்போது ஜனவரி மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது.