Cinema Rewind: சினிமாவில் எனக்கு இந்த நடிகைகள் தான் பிடிக்கும்… த்ரிஷா சொன்ன விஷயம்!
பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களை ரொம்பவே கவர்ந்த சில கதாபாத்திரங்களில் குந்தவையும் ஒன்று. எனவே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் திரிஷா அந்த வெயிட்டேஜை தாங்குவாரா என ரசிகர்களில் சில கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்விக்கு அவர் தனது நடிப்பால் பதில் சொல்லியிருந்தார். இரண்டு பாகங்களிலுமே அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது. த்ரிஷா நடிப்பில் கடைசியாக லியோ படம் வெளியானது. அடுத்ததாக விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களும் வரவிருக்கின்றன.
தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகைகள் என நடிகை த்ரிஷா லிஸ்ட் போட்டு முன்னதாக பேட்டி ஒன்றில் சொன்ன நடிகை த்ரிஷாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சென்னையை பூர்வீகமாக கொண்ட திரிஷா 1983 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி பிறந்தார். சர்ச் பார்க் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், எத்திராஜ் கல்லூரியில் பயின்றார். அப்போது மாடலிங்கில் ஆர்வம் உண்டாகவே அதில் தீவிரமாக களமிறங்கினார். இதன் விளைவாக 1999 ஆம் ஆண்டு நடந்த மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார். மேலும் 2001ல் மிஸ் இந்தியா போட்டியில் ப்யூட்டிஃபுல் ஸ்மைல் விருதை வென்றார். அதனைத் தொடர்ந்து நடிகர்கள் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி என்ற படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரே ஒரு காட்சியில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை த்ரிஷா.
அதன் பிறகு இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் நாயகியாக உருவெடுத்தார். அதைத்தொடர்ந்து விக்ரம் உடன் சாமி, விஜய் உடன் கில்லி, மாதவன் உடன் லேசா லேசா, திருப்பாச்சி, சூர்யாவுடன் ஆறு, சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா என தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து தமிழில் தவிர்க்க முடியாத முன்னணி நாயகியாக முன்னேறினார். அதன் பிறகு ரசிகர்களால் சவுத் குயின் என அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் தான் த்ரிஷா.
இந்திய சினிமாவை பொறுத்தவரை, தொடக்க காலம் முதலே நடிகர்கள் எத்தனை வயது வேண்டுமானாலும் ஹீரோவாக நடிக்கலாம். ஆனால் நடிகைகள் அதிகபட்சம் 5 ஆண்டுகள் ஹிரோயினாக நடிப்பது அரிதான ஒன்று. அதன் பிறகு அக்கா, அண்ணி, கவுரவ வேடங்கள்தான். தமிழில் இந்த வழக்கத்தை உடைத்தவர்கள் ஒரு சிலரே. அதில் த்ரிஷாவும் ஒருவர்.
Also read… Cinema Rewind: ஷங்கர பாத்து சூடு போட்டுகிட்ட கதைதான்… கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன விஷயம்
முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அஜித், விஜய், ரஜினி, கமல், ஆர்யா,சூர்யா என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் திரிஷா.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நாயகியாக கலக்கி வருகின்றார் த்ரிஷா. இதற்கிடையில் த்ரிஷா ஒரு சில தொடர் தோல்வி படங்களில் நடித்திருந்தாலும் அவ்வப்போது மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்து தரமான கம்பேக் கொடுத்து வருகின்றார்.
இவருடைய நடிப்பில் வெளியான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ’96’ போன்ற திரைப்படங்கள், ஆண்டுகள் பல கடந்தும் இவருடைய நடிப்புக்காக வெகுவாக பாராட்டப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. த்ரிஷாவுக்கு ஒரு மாபெரும் கம்பேக் ஆக அமைந்த படம் ‘96’. அதில் இடம்பெற்ற ஜானு கதாபாத்திரம் மிகப் பெரிய பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது. தமிழ் சினிமாவின் மிக மூத்த நடிகையாக இன்றளவும் அதே புகழோடு வலம் வருகிறார் இவர் என்றால் அது மிகையல்ல. 2000க்குப் பிறகு தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹீரோயின்களில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக நடித்து வருகிறார் என்பதே மிகப்பெரிய சாதனை தான்.
Also read… Cinema Rewind: என்னுடைய படைப்புகளுக்கு மூல காரணம் இயக்குநர் ராம் தான்… மாரிசெல்வராஜ் சொன்ன விஷயம்
பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களை ரொம்பவே கவர்ந்த சில கதாபாத்திரங்களில் குந்தவையும் ஒன்று. எனவே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் திரிஷா அந்த வெயிட்டேஜை தாங்குவாரா என ரசிகர்களில் சில கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்விக்கு அவர் தனது நடிப்பால் பதில் சொல்லியிருந்தார். இரண்டு பாகங்களிலுமே அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது. த்ரிஷா நடிப்பில் கடைசியாக லியோ படம் வெளியானது. அடுத்ததாக விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களும் வரவிருக்கின்றன.
இந்த நிலையில் முன்னதாக த்ரிஷா ஒரு பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. அதில் தமிழ் சினிமாவில் அவருக்கு பிடித்த நடிகைகள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறிய நடிகைகள் யார் என்றால் அனுஷ்கா, நித்யாமேனன், இவானா, துஷாரா விஜயன், சாய்பல்லவி, ராஷ்மிகா ஆகிய நடிகைகளை பிடிக்கும் என்று முன்னதாக த்ரிஷா பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.