5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: பாத்ரூமில் உட்கார்ந்து பாட்டு எழுதிய கண்ணதாசன்.. எது தெரியுமா?

Kannadasan: ஹீரோயின் இதே சிச்சுவேஷனில் அழுதுக்கொண்டே பாடுற மாதிரி காட்சி இருக்கும். அதைக்காட்டி இப்படித்தான் வேண்டும் என சொன்னேன். அதற்கேற்ற மாதிரி ட்யூன் பண்ணி விட்டார். இதற்கு வரிகளை எழுத கவிஞர் கண்ணதாசன் வந்தார். ட்யூனை பாடிக் காட்ட சந்தம் என் மனதில் இருக்கு, கொஞ்சம் டைம் கொடுங்க என கேட்டார்.

Cinema Rewind: பாத்ரூமில் உட்கார்ந்து பாட்டு எழுதிய கண்ணதாசன்.. எது தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 26 Jul 2024 13:06 PM

கவியரசர் கண்ணதாசன்: தமிழ் சினிமாவை பொறுத்தவரை கண்ணதாசன் இன்றைக்கும் அனைவருக்கும் ஒரு புரியாத புதிர் தான். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல செய்திகள் உலா வந்தாலும் அவரின் ஆளுமையும், பாடல் எழுதும் திறமையும் எல்லார்க்கும் ஒரு முன்னுதாரணம் தான். பிரமிக்க வைக்கும் வாழ்க்கையை வாழ்ந்த அவரின் பாடல்கள் எந்த காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகவே உள்ளது. சூழல் கேட்டு தானாக எழுதும் பாட்டாக இருந்தாலும் சரி, ட்யூன் கொடுத்து எழுத சொல்லும் பாட்டாக இருந்தாலும் சரி பின்னி விடுவார். அப்படிப்பட்ட கண்ணதாசனை பற்றி புகழாதவர் எவரும் இவ்வுலகில் இல்லை என சொல்லலாம். அந்த வகையில் ஏவிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த ஏவிஎம் குமரன் அவர் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

Also Read: Cinema Rewind: பாக்யராஜ் ஒரு வார்த்தை கூட பேசாமல் நடித்த படம் தெரியுமா?

பாத்ரூமில் வைத்து பாட்டு எழுதிய கவிஞர்

அதில், “நானும் ஒரு பெண் படத்தில் மனைவியை இழந்து தவிக்கும் மாமனார், அவளைப் போல அழகான பெண் ஒருவர் மருமகளாக வர வேண்டும் என நினைக்கிறார்.ஆனால் கருப்பு நிற பெண் மருமகளாக வர, மாமனார் வெறுக்கிறார். அந்த மாதிரி சூழலில் அப்பெண் கண்ணன் சிலைக்கு முன்னாடி நின்னு பாடுற மாதிரி சிச்சுவேஷன் சொல்லியாச்சு. அப்படத்தின் இசையமைப்பாளராக ஆர்.சுதர்சனன் பணியாற்றினார். அந்த பாடலில் கண்ணனுக்கு முன்னாடி நான் என்ன பாவம் செஞ்சேன் என விரக்தியில் துடிதுடித்து பாடுற மாதிரி பாட்டு வேணும்ன்னு சொன்னேன். ஆனால் சுதர்சனன் ஏதேதோ ட்யூன் போட்டும் எனக்கு திருப்தி வரவில்லை. அது எப்படி முடியும் என அவர் என்னிடம் கேட்டார். அப்போது ஒரு தியேட்டரில் ஜனக் ஜனக் பாயல் பாஜேன்னு ஒரு இந்தி படம் ஓடிக்கொண்டிருந்தது.

அதில் ஹீரோயின் இதே சிச்சுவேஷனில் அழுதுக்கொண்டே பாடுற மாதிரி காட்சி இருக்கும். அதைக்காட்டி இப்படித்தான் வேண்டும் என சொன்னேன். அதற்கேற்ற மாதிரி ட்யூன் பண்ணி விட்டார். இதற்கு வரிகளை எழுத கவிஞர் கண்ணதாசன் வந்தார். ட்யூனை பாடிக் காட்ட சந்தம் என் மனதில் இருக்கு, கொஞ்சம் டைம் கொடுங்க என கேட்டார்.

Also Read: Cinema Rewind: திருக்குறளை உருவி ட்யூன் போட்ட இளையராஜா.. என்ன பாட்டு தெரியுமா?

கொஞ்ச நேரம் கண்ணதாசனை காணவில்லை. எங்கே என பார்த்தால் கழிப்பறைக்கு சென்றிருந்தார். அதுவும் இசையமைப்பாளர்கள் பயன்படுத்தும் கழிப்பறைக்கு சென்றிருக்கிறார். அது கொஞ்சம் சுத்தமாக இருக்காது. அவர் கையில் சிகரெட் பாக்கெட்டும் இருந்தது. கழிப்பறையில் உட்காந்திருக்கும்போது பாட்டு வரிகளை எழுதினார். அப்படியாக கண்ணா கருமைநிற கண்ணா என பாட்டெழுதி விட்டார். உன் பாட்டு ரெடி என சுதர்சனனிடம் நீட்ட, எங்கே வச்சு சார் நீங்க எழுதுனீங்க என அவர் பதில் கேள்வி கேட்டார். அதெல்லாம் உனக்கு எதுக்கு நீ புடி, சரியா வருதான்னு மட்டும் பாருன்னு சொன்னார். ட்யூனும், பாடலும் சரியாக பொருந்தியது”ஏவிஎம் குமரன் தெரிவித்துள்ளார்.

Latest News