5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: தயாரிப்பாளருக்கே பிடிக்காமல் போன சூர்யாவின் சூப்பர் பாட்டு!

நடிகர் சூர்யா: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்தோடு நேருக்கு நேர் படத்தில் அறிமுகமான அவர் இன்று தனக்கென தனியிடம் பிடித்து அசத்தியுள்ளார். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், கல்வி அமைப்பு நடத்தி வருபவர் என பல துறைகளிலும் முத்திரைப் பதித்து வரும் சூர்யா 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் த்ரிஷா, லைலா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் […]

Cinema Rewind: தயாரிப்பாளருக்கே பிடிக்காமல் போன சூர்யாவின் சூப்பர் பாட்டு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 24 Oct 2024 11:18 AM

நடிகர் சூர்யா: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்தோடு நேருக்கு நேர் படத்தில் அறிமுகமான அவர் இன்று தனக்கென தனியிடம் பிடித்து அசத்தியுள்ளார். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், கல்வி அமைப்பு நடத்தி வருபவர் என பல துறைகளிலும் முத்திரைப் பதித்து வரும் சூர்யா 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் த்ரிஷா, லைலா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தை இயக்குநர் அமீர் இயக்கியிருந்தார். இது அவரின் முதல் படமாகும். இந்த படம் சூர்யா, அமீர் இருவருக்கும் திரையுலகில் நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.

அதுமட்டுமல்லாமல் நந்தா, உன்னை நினைத்து, பிதாமகன் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து 4வது முறையாக மௌனம் பேசியதே படத்தில் சூர்யா, லைலா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் கவிஞர் காமகோடியன் எழுதி பாடகர் சங்கர் மகாதேவன் இயக்கிய “என் அன்பே என் அன்பே” பாடல் இடம் பெற்றிருந்தது. இப்பாடல் மிகப்பெரிய அளவில் இன்றளவும் ரசிகர்களிடம் பிரபலம். ஆனால் இந்த பாடல் முதலில் தயாரிப்பாளருக்கு பிடிக்கவே இல்லையாம். இதனை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் அமீர் பகிர்ந்திருந்தார்.

அதில், “மௌனம் பேசியதே படத்தின் அன்பே என் அன்பே பாடலின் காட்சிகளைப் பார்த்து விட்டு தயாரிப்பாளர் வேண்டாம் என சொல்லி விட்டார். இவ்வளவு அருமையான பாட்டை நீங்கள் சுமாரா எடுத்து வச்சிருக்கீங்க. நான் இன்னும் 15 லட்சம் வேண்டுமானாலும் தருகிறேன். ஆஸ்திரேலியாவில் போய் ஷூட் பண்ணிட்டு வாங்க என சொன்னார். நான் உடனே, இந்த பாடலை நீங்கள் ஆஸ்திரேலியாவில் ஷூட் பண்ணுங்கள் என சொல்வது சந்தோஷம் தான். ஆனால் உண்மையிலே நான் நல்லாதான் இந்த பாட்டை எடுத்திருக்கேன். எங்க எடுத்துருக்கீங்க, எடிட்டிங் டேபிளில் பார்த்தால் இல்லையே என தயாரிப்பாளர் சொல்கிறார். இதனால் எங்களுக்குள் சில அரசியலால் சண்டையே வந்து விட்டது. நான் அதன் பிறகு ஒருநாள் டைம் கேட்டு எடிட்டிங் ரூமுக்குள் சென்று இன்னொரு உதவியாளரை வைத்து அந்த பாட்டின் காட்சிகளின் தொகுப்பை எல்லாம் தேடி எடுத்து இப்போது நீங்கள் பார்க்கும் பாடலாக உருவாக்கினோம். மறுநாள் தயாரிப்பாளரிடம் பாட்டை காட்டினால் நல்லா இருக்கேப்பா என சொன்னார். இதைத்தானே நேற்று நான் சொன்னேன்” என அமீர் தெரிவித்திருந்தார்.

Latest News