Cinema Rewind: சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க முதல் தேர்வு ஜெய் இல்லை… சசிக்குமார் சொன்ன விஷயம் - Tamil News | cinema rewind director and actor sasikumar about Subramaniapuram movie casting | TV9 Tamil

Cinema Rewind: சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க முதல் தேர்வு ஜெய் இல்லை… சசிக்குமார் சொன்ன விஷயம்

Published: 

22 Sep 2024 13:45 PM

Sasikumar: 2008-ல் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே பெருமை தேடித்தந்த சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகராக அறிமுகமானார். சசிகுமாரின் அறிமுகப் படமே ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 1980-களின் மதுரையை அப்படியே திரையில் மறு உயிர் கொடுத்திருந்தார். அதோடு அரசியல் அதிகாரப் போட்டி, நட்பு, காதல், குடும்ப கெளரவம், அதுசார்ந்த வன்மம், துரோகம் ஆகியவற்றை வைத்து மனத்தைப் பதைபதைக்கச் செய்யும் கதையைக் கூறியிருந்தார்.

Cinema Rewind: சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க முதல் தேர்வு ஜெய் இல்லை... சசிக்குமார் சொன்ன விஷயம்

சுப்ரமணியபுரம்

Follow Us On

சுப்ரமணியபுரம் படத்தில் நடிகர் ஜெய் நடித்த கதாப்பாத்திரத்திற்கு முதலில் வேறு நடிகர்களை யோசித்து வைத்ததாகவும் பின்பு சில காரணங்களால் அவர்கள் நடிக்க முடியாமல் போன பிறகே அந்த கதாப்பாத்திரத்திற்கு ஜெய் தேர்வானதாக இயக்குநரும், நடிகருமான சசிக்குமார் முன்னதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. காதல் என்றால் இப்படி தான் உயிரை கொடுத்து உதவ வேண்டும் என்கிற மனப்பான்மையை நமக்கு மீண்டும் நியாபகம் செய்தவர் சசிகுமார் என்றே சொல்லலாம். இவர் இயக்கிய படங்கள் சிலதே என்றாலும், அவை ஒவ்வொன்றிலும் பல வகையான ஆழ்ந்த கருத்துக்களை தவறாமல் வைத்து மக்களை தன் பக்கம் கவர்ந்திருந்தார். இயக்குநரகா மட்டும் இன்றி நடிகராகவும் இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரின் பல வசனங்கள் நட்பு, காதல், பிரிவு என எல்லா சூழலுக்கும் பொருந்தும் விதமாக இணையத்தில் தற்போதும் பரவி வருகின்றது.

மதுரையில் பிறந்து வளர்ந்தவரான சசிகுமார் இயக்குநர் பாலாவின் சேது படம், அமீரின் மெளனம் பேசியதே மற்றும் ராம் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். அதே போல சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார். இயக்குநர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பலமுகங்களைக் கொண்டவர் சசிக்குமார். முதல் படமான சுப்ரமணியபுரம் படத்திலேயே மாஸ் வெற்றி, தரமான காதல் கதையை சொல்லி தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர்.

2008-ல் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே பெருமை தேடித்தந்த சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகராக அறிமுகமானார். சசிகுமாரின் அறிமுகப் படமே ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 1980-களின் மதுரையை அப்படியே திரையில் மறு உயிர் கொடுத்திருந்தார். அதோடு அரசியல் அதிகாரப் போட்டி, நட்பு, காதல், குடும்ப கெளரவம், அதுசார்ந்த வன்மம், துரோகம் ஆகியவற்றை வைத்து மனத்தைப் பதைபதைக்கச் செய்யும் கதையைக் கூறியிருந்தார்.

மதுரையை மையமாக வைத்தும், அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களின் சுயநலத்துக்காக பலியாகும் இளைஞர்களை மையமாக வைத்தும் உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. படத்தின் போஸ்டரை பார்த்து கிண்டல் செய்தவர்கள் எல்லாம் படத்தை பார்த்து வாயடைத்துப்போனார்கள். அந்த அளவுக்கு சசிக்குமாரின் மேக்கிங் அட்டகாசமாக இருந்தது. சிறப்பான எமோஷனல், சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் என பக்கா பேக்கேஜாக அமைந்தது சுப்ரமணியபுரம் திரைப்படம். ஜேம்ஸ் வசந்தன் இசையில் படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலும் மக்கள் மத்தியில் ஹிட் அடித்தது. ‘மதுர குலுங்க குலுங்க’ பாடல் இன்றைய நாள் வரையிலும் மதுரையின் பெயர் சொல்லும் ஆஸ்தான பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் தலைசிறந்த படங்களில் ஒன்று என்று கொண்டாடப்பட்டது சுப்பிரமணியபுரம். சுப்பிரமணியபுரம் படத்தில் பரமா என்கிற பாத்திரத்தில் நடித்திருந்தார் சசிக்குமார். இந்த படம் இன்று வரையிலும் பேசப்படும் படமாக இருந்து வருகிறது. தொடர்ந்து அடுத்த ஆண்டே சமுத்திரக்கனி இயக்கிய நட்பை மையமாகக் கொண்ட நாடோடிகள் படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவரின் யதார்த்தமான, அலட்டல் இல்லாத நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து நிறைய படவாய்ப்புக்கள் சசிக்குமாருக்கு வர துவங்கியது. அடுத்த ஆண்டில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்க ஈசன் என்னும் திரைப்படத்தை இயக்கினார் சசிகுமார். இதில் அவர் நடிக்கவில்லை. சுப்பிரமணியபுரம் அளவுக்கு இல்லை என்றாலும் இந்தப் படமும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

Also read… அட்டக்கத்தி டூ கெத்து… நடிகர் தினேஷின் வீடியோவை வெளியிட்ட ‘லப்பர் பந்து’ படக்குழு

இதனை தொடர்ந்து குறைந்த அளவில் படங்களை இயக்கி இருந்தாலும் வரிசையாக பல படங்களில் நடிகராக தன்னை சினிமாவில் நிலைநிறுத்தியுள்ளார் சசிக்குமார். கடந்த 20-ம் தேதி இயக்குநர் சரவணன் இயக்கத்தில் வெளியான நந்தன் படத்தில் வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சசிக்குமார். இவரின் தோற்றம், நடிப்பு என ரசிகர்களை அந்த படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் முதலில் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படம் குறித்து சசிக்குமார் முன்னதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் முதலில் ஜெய் கதாப்பாத்திரத்திற்கு நடிக்கவைக்க அவர் நினைத்தது நடிகர் நந்தாவைதானாம். அவரை தொடர்புகொள்ள முடியாமல் போனதால் அதனைத் தொடர்ந்து பிரபல நடிகர்கள், இயக்குநர்களாக திகழ்ந்த பாக்கியராஜ் மற்றும் பாண்டியராஜின் மகன்கள் சாந்தனு மற்றும் பிரித்வி என இவர்கள் இருவரையும் வைத்துதான் முதலில் யோசித்தேன். ஆனால் அது நடக்கவில்லை அதன் பிறகு தான் நடிகர் ஜெய் வைத்து அந்த படத்தை எடுத்ததாக சசிக்குமார் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நண்டில் இப்படி ஒரு விஷயம் இருக்கா? அறிந்திடாத மருத்துவ நன்மைகள்..!
மன அழுத்தம் குறைய வேண்டுமா? அப்போ இது ஒன்னே போதும்.
நடிகை ஹன்சிகா மோத்வானியின் ரீசென்ட் ஆல்பம்
அழகியே... மிருணாள் தாகூரின் அசத்தல் ஆல்பம்
Exit mobile version