Cinema Rewind: ஃபஹத் ஃபாசில் வரட்டும்.. ஒரு மாதமாக காத்திருந்த ரஜினி!
தமிழ்த் திரைப்படங்களை தற்போது முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் ஞானவேல். இவர் தமிழில் 2017ல் வெளியான கூட்டத்தில் ஒருத்தன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இவர் முதலில் தெலுங்கு திரைப்படங்களில் உதவி இயக்குநராக ரக்த சரித்ரா 2 மற்றும் பயணம் போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது வேட்டையன் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெறவுள்ள நிலையில் நடிகர் பாஹத் ஃபாசில் இத்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ரஜினியே காத்திருந்தார் என ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
வேட்டையன் திரைப்படத்திற்காக பஹத் ஃபாசில் நடித்த கதாபாத்திரத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு மாதத்திற்கு மேல் அவருக்காகக் காத்திருந்தார் என இயக்குநர் ஞானவேல் கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் ஞானவேல் சென்னை லொயோலா கல்லூரியில் தனது படிப்பை முடித்தவர். இவர் முதலில் பத்திரிக்கையாளராக பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து முதல் முதலில் தெலுங்கு திரைப்படங்களில் உதவி இயக்குநராக ரத்த சரித்திரம் 2 மற்றும் பயணம் போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இவர் தமிழில் 2017 நடிகர் அசோக் செல்வன் மற்றும் ப்ரியா ஆனந்த் இருவரின் முன்னணி நடிப்பில் உருவான கூட்டத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தை இயக்கி தமிழில் அறிமுகமானார்.
இவருக்கு இந்த திரைப்படமானது ஓரளவு வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. ஆனால் அவர் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது திரைப்படமான ஜெய் பீம் தான் ஞானவேலை முன்னணி இயக்குநராக உயர்த்தியது. இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யா,ஜோதிகாவின் 2டி எண்டெர்டைமென்ட் நிறுவனம் தயாரித்தது. ஜெய் பீம் படத்தில் நடிகர்கள் சூர்யா, மணிகண்டன் , பிரகாஷ் ராஜ், ராவ் ராஜேஷ் மற்றும் லிஜிமோல் ஜோஸ் எனப் பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இது தமிழ்நாட்டில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டு கடந்த 2021ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பழங்குடியினரின் உண்மை வாழ்க்கை முறையை மக்களுக்குத் தெரிவிக்கும் விதத்தில் அமைந்த இத்திரைப்படம் இயக்குநர் ஞானவேலிற்கு ஒரு மிக பிரம்மாண்டமான வெற்றியை தந்தது. இந்த திரைப்படத்திற்காக பல முன்னணி விருதுகளை வென்று இப்படம் மக்கள் மத்தியில் தற்போதுவரை பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க :Cinema Rewind: “மார்வெல்ஸ் படம் போலதான் பிளான்” இயக்குநர் ஷங்கர் சொன்ன விஷயம்
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த திரைப்படமாக வேட்டையன் திரைப்படத்தை இயக்கினார். நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் அவரது 170வது திரைப்படமாக அமைந்தது இந்த வேட்டையன் திரைப்படம். கொலை, என்கவுண்டர் மற்றும் ஆக்ஷ்ன் கதைக்களத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த அக்டோபர் 10ல் திரையரங்குகளில் வெளியாகியது. ஆயுத பூஜை விடுமுறைகளை ஒட்டி வெளியான இத்திரைப்படம் ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வேட்டையன் படத்தில் ரித்திகா சிங், மஞ்சு வாரியர்,கிஷோர், அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரக்ஷன் என தமிழ். தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழி சார்ந்த பிரபலங்களும் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க :Cinema Rewind: என்னுடைய படைப்புகளுக்கு மூல காரணம் இயக்குநர் ராம் தான்… மாரிசெல்வராஜ் சொன்ன விஷயம்
வேட்டையன் திரைப்படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த பாத்திரத்திற்காகத் தமிழ் மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளார். மலையாளத்திலும் தமிழிலும் தொடர்ச்சியாக வித்தியாசமான பல வேடங்களில் ஃபஹத் ஃபாசில் நடித்து வருகிறார். அடுத்ததாக வடிவேலுவுடன் மாரீசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க :Cinema Rewind : நான் சினிமாவில் நுழையக் காரணமே சுந்தர் சி தான்..! ஹிப் ஹாப் ஆதி சொன்ன விஷயம்..
வேட்டையன் திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து இயக்குநர் ஞானவேல் பல நேர்காணலில் பங்கேற்றுவருகிறார். அதில் ஒரு நேர்காணலில் நடிகர் ஃபஹத் ஃபாசில் பற்றிக் கூறிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் ஃபஹத் எப்போது அவரை சந்தோஷப்படுத்தும் கதாபாத்திரத்தில் மட்டும்தான் நடிப்பார். அவர் நடிக்கும் காட்சிகளில் அவர் நன்றாக நடித்தால்தான் அடுத்த காட்சியை எடுக்க செல்வார் என்றும் தெரிவித்துள்ளார். அவருக்குப் பிடிக்காத கதையில் நடிக்க எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் நடிக்க மாட்டார் என்றும் வேட்டையன் திரைப்படத்தில் நடிக்க நான் கேட்ட போது அவர் உடனே நடிக்க சரியென்று சொல்லி விட்டார். ஆனால் இதில் நடிக்க அவருக்குப் கால்ஷூட் சரிப்பட்டு வரவில்லை, ஆனால் இப்படிப் பட்ட நல்ல கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைக்க எவ்வளவு நாள் என்றாலும் காத்திருக்கலாம் என்று நான் நினைத்தேன். அதற்கு நடிகர் ரஜினிகாந்த்தும் ஒத்துக்கொண்டார் என அந்த நேர்காணலில் இயக்குநர் ஞானவேல் கூறியிருப்பார்.