5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: ஷங்கர பாத்து சூடு போட்டுகிட்ட கதைதான்… கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன விஷயம்

அவ்வை சண்முகி’, ‘தெனாலி’, ’பஞ்சதந்திரம்’ என்று கமல் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி எல்லாமே ஹிட்டடித்தன. இந்த வரிசையில், மிகப்பிரமாண்டமான மிரட்டலாக பத்து வேடங்களில் கமல் நடித்த ’தசாவதாரம்’, இந்தியத் திரையுலகில் புதிய முயற்சி. இந்த உலகில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மூலைகளில் நடைபெறும் தொடர்பற்றதாகத் தோன்றும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டு என்னும் பட்டாம்பூச்சி விளைவுக் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தக் கதையை எழுதியிருந்தார் கமல்.

Cinema Rewind: ஷங்கர பாத்து சூடு போட்டுகிட்ட கதைதான்… கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன விஷயம்
கே.எஸ்.ரவிக்குமார்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Oct 2024 17:36 PM

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தை எடுத்தது இயக்குநர் ஷங்கரைப் பார்த்து சூடுபோட்டுகிட்ட கதைதான் என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். பாரதிராஜா, விக்ரமன், நாகேஷ், ரங்கராஜ் உள்ளிட்ட பலருடன் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமாவை ஒட்டுமொத்தமாக கற்றுக்கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார் கே.எஸ்.ரவிக்குமார். தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குநராக வலம் வந்தவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினி, கமல், அஜித், விஜய், பிரபு, சரத்குமார், சூர்யா, மாதவன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகர்கள் பெரும்பாலானோரை இயக்கி அதில் வெற்றி கண்டவர்.  நாட்டாமை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறி தமிழ்நாட்டு அரசின் சிறந்த திரைப்படம் மற்றும் இயக்குனர் விருதைப் பெற்றுத் தந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து முத்து, படையப்பா, லிங்கா போன்ற பல படங்களை இயக்கியவர் கே.எஸ். ரவிக்குமார்.

1990 ஆம் ஆண்டு புரியாத புதிர் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான கே.எஸ். ரவிக்குமார் சரத்குமாரை வைத்து சேரன் பாண்டியன் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றார். புத்தம் புதுப்பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்யம், சூரியன் சந்திரன், புருஷ லட்சணம், சக்திவேல் என வரிசையாக மூன்று ஆண்டுகளில் பல படங்களை இயக்கினார்.  இவர் இயக்கிய திரைப்படடங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்துள்ளார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், வில்லன், காமெடியன், குணச்சித்திர வேடம், நடனம் என அனைத்து ஏரியாக்களிலும் கலக்குவார்.

1994 ஆம் ஆண்டு வெளியான நாட்டாமை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறி தமிழ்நாட்டு அரசின் சிறந்த திரைப்படம் மற்றும் இயக்குனர் விருதைப் பெற்றுத் தந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து முத்து, படையப்பா, லிங்கா போன்ற படங்களை இயக்கினார். 2000மாவது ஆண்டில் வெளியான தெனாலி திரைப்படத்தை தயாரித்தார். 2014-ம் ஆண்டு சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியவர் கே.எஸ்.ரவிக்குமார்.

Also read… Cinema Rewind: என்னுடைய படைப்புகளுக்கு மூல காரணம் இயக்குநர் ராம் தான்… மாரிசெல்வராஜ் சொன்ன விஷயம்

ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, விஜயகாந்த், கார்த்திக், அர்ஜீன், விஜய், அஜித், சூர்யா, மாதவன் என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். கமலின் 5 படங்களை இயக்கியுள்ளார். அவ்வை ஷண்முகி வித்யாசமான கதைக்களம், குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்ற படம். தசாவதாரம் இவர்கள் கூட்டணியின் அடுத்த வெற்றி படம். 12ஆம் நூற்றாண்டின் சோழர் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த சைவ-வைணவ சச்சரவுகளில் தொடங்கி 2004இல் நிகழ்ந்த சுனாமி ஆழிப் பேரலை வரை பல நூற்றாண்டு கால இடைவெளியையும் இடையில் தமிழகம், அமெரிக்கா, ஜப்பான் என பூமிப்பந்தின் கண்டங்களையும் கடந்து பயணிக்கும் கதை ‘தசாவதாரம்’.

Also read… இந்த இயக்குநர்களுத்தான் நான் அதிகம் நன்றி சொல்லனும்… நடிகர் சத்யராஜ் சொன்ன விஷயம்

அவ்வை சண்முகி’, ‘தெனாலி’, ’பஞ்சதந்திரம்’ என்று கமல் – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி எல்லாமே ஹிட்டடித்தன. இந்த வரிசையில், மிகப்பிரமாண்டமான மிரட்டலாக பத்து வேடங்களில் கமல் நடித்த ’தசாவதாரம்’, இந்தியத் திரையுலகில் புதிய முயற்சி. இந்த உலகில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மூலைகளில் நடைபெறும் தொடர்பற்றதாகத் தோன்றும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டு என்னும் பட்டாம்பூச்சி விளைவுக் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தக் கதையை எழுதியிருந்தார் கமல்.

நாகேஷ், கே.ஆர்.விஜயா, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, சந்தானபாரதி, பி.வாசு, ரேகா, ஆகாஷ், சிட்டிபாபு, மல்லிகா ஷெராவத், ஜெயப்பிரதா, அஸின் என படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். ஆனால் அத்தனைக்கும் அழகாக முடிச்சுப் போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு காட்சியும் கட்டமைப்பும் அத்தனை பிரமாண்டப்படுத்தப்பட்டிருக்கும். இந்த நிலையில் இந்தப் படத்தை எடுத்த கதையை குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முன்னதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான பிரமாண்ட படமான இது இயக்குநர் ஷங்கரைப் பார்த்து சூடு போட்டுகிட்டமோனு தோனுச்சு முதல்ல. பெரிய பட்ஜெட் பிரமாண்டம் பெரிய செலவு என்பதால் ஷங்கரைப் பார்த்து சூடு போட்டுக்கிட்ட கதையாகிடுச்சோனு தோனுச்சு என்று தெரிவித்துள்ளார்.

 

Latest News