Cinema Rewind: என்னுடைய படைப்புகளுக்கு மூல காரணம் இயக்குநர் ராம் தான்… மாரிசெல்வராஜ் சொன்ன விஷயம் - Tamil News | Cinema Rewind Director Mari selvaraj talks about director Ram | TV9 Tamil

Cinema Rewind: என்னுடைய படைப்புகளுக்கு மூல காரணம் இயக்குநர் ராம் தான்… மாரிசெல்வராஜ் சொன்ன விஷயம்

ராமின் படங்கள் வெளியாகும் போது அவரைக் குறித்து பேசப்படுவது போல இயக்குநர் மாரி செல்வராஜின் படங்கள் வெளியாகும் போதும் இயக்குநர் ராம் குறித்த பேச்சு வருவது வழக்கம். ஏன் என்றால் ஊரைவிட்டு ஓடி வந்த மாரி செல்வராஜ் என்பவரை இயக்குநராக உருவாக்கியது ராம் தான். இதனை மாரி செல்வராஜ் பல இடங்களில் பேசியிருப்பார்.

Cinema Rewind: என்னுடைய படைப்புகளுக்கு மூல காரணம் இயக்குநர் ராம் தான்... மாரிசெல்வராஜ் சொன்ன விஷயம்

இயக்குநர் ராம், மாரிசெல்வராஜ்

Published: 

11 Oct 2024 16:49 PM

என்னுடைய படைப்புகளுக்கு மூல காரணம் இயக்குநர் ராம் தான் என்று இயக்குநர் மாரிசெல்வராஜ் முன்னதாக பேசிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவரான ராம் சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். சினிமா மீது இருந்த ஆர்வத்தால் ஒளிப்பதிவாளர்-இயக்குநர் தங்கர்பச்சானிடம் சில படங்களில் பணியாற்றினார். பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷியின் ‘புகார்’, ‘லஜ்ஜோ’ உள்ளிட்ட இந்திப் படங்களின் திரைக்கதை உருவாக்கத்தில் ராமின் எழுத்துப் பங்களிப்பு இருந்தது. தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைசொல்லி இயக்குநர் ராம் . கற்றது தமிழ் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இயக்குநர் ராம் தொடர்ந்து தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இன்று ராம் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் அவரைப் பற்றி முன்னதாக மாரிசெல்வராஜ் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எளிமையான கதை, வலுவான காட்சிகள், கூர்தீட்டிய வசனங்கள் என தன்னுடைய படங்களின் மூலம் எளிய மக்களின் அன்பை ரெளத்திரமாக திரையில் வடித்ததன் மூலம் கவனம் ஈர்த்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ராமின் 50வது பிறந்தநாள் இன்று.

2007 அக்டோபர் 6 அன்று வெளியான ‘கற்றது தமிழ்’ விமர்சன ரீதியான பாராட்டுகளைத் தாண்டி தமிழ்ச் சூழலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. உலகமயமாக்கலால் குறிப்பாக அப்போது வளர்ந்துவந்த தகவல் தொழில்நுட்பத் துறைக்குக் கிடைத்த அளவு கடந்த முக்கியத்துவத்தால் சமூகத்தில் நிகழ்ந்த ஏற்றத்தாழ்வுகளை விரிவாகவும் ஆழமாகவும் பேசிய அந்தப் படம் மிக அழகான காதலையும் அன்புக்கு ஏங்கும் மனங்களின் பரிதவிப்பையும் உள்ளடக்கியிருந்தது.

கற்றது தமிழ் படம் உலகமயமாக்கல் என்கிற போக்கு தன்னுடைய நிலத்தில் தன்னுடைய மொழியில் வேறுன்றி  இருந்த ஒரு மனிதன் எப்படி தன்னுடைய  நிலத்தில் அந்நியப்பட்டு போகிறான் என்பதே இந்தப் படத்தின் கதை. இந்த கதையை மக்களுடன் ஏதோ ஒரு வகையில் மக்களால் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது என்றால் அது இந்தப் படத்தில் இருக்கும் ராம் என்கிற ஒரு தனிப்பட்ட மனிதனின் நேர்மையான கோபத்தினால் தான்.

ராமின் இரண்டாம் படமான ‘தங்கமீன்கள்’ பொருளாதாரம் சார்ந்த உலகியல் நோக்கங்களுக்கும் அன்பு, பாசம் போன்றவற்றை முதன்மைப்படுத்தும் மனநிலைக்கும் இடையிலான மோதலால் ஒரு குடும்பத்தில் ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசியது. அதனை தொடர்ந்து வெளியான தரமணி மற்றும் பேரன்பு படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ராம் இயக்கியிருக்கும் படம் ஏழு கடல் ஏழு மலை. நிவின் பாலி , அஞ்சலி  , சூரி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் பல திரைப்பட விழாக்களில் வெளியாகி பல விருதுகளைப் பெற்றுள்ளது.

Also read… Cinema Rewind: இந்த இயக்குநர்களுத்தான் நான் அதிகம் நன்றி சொல்லனும்… நடிகர் சத்யராஜ் சொன்ன விஷயம்

ராமின் படங்கள் வெளியாகும் போது அவரைக் குறித்து பேசப்படுவது போல இயக்குநர் மாரி செல்வராஜின் படங்கள் வெளியாகும் போதும் இயக்குநர் ராம் குறித்த பேச்சு வருவது வழக்கம். ஏன் என்றால் ஊரைவிட்டு ஓடி வந்த மாரி செல்வராஜ் என்பவரை இயக்குநராக உருவாக்கியது ராம் தான். இதனை மாரி செல்வராஜ் பல இடங்களில் பேசியிருப்பார். தமிழ் திரையுலகில் இளம் இயக்குநர்களில் நம்பிக்கைத்தரும் இயக்குநர்களில் ஒருவராக சமூக கதைகளை அடித்தட்டு மக்களின் வலிகளை தெளிவாகச் சொல்லும் படங்களை கொடுத்த மாரி செல்வராஜுக்கு இன்னொரு முகம் உண்டு. இயக்குநர் ராமிடம் துணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். அதைத் தொடர்ந்து கர்ணன், மாமன்னன் என அடுத்தடுத்த வெற்றிப்படத்தை கொடுத்த மாரி செல்வராஜ், தனது வாழ்க்கை திரைப்படமான வாழை படத்தை இயக்கினார்.

இந்த நிலையில் இன்று ராம் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் ராம் தனது வாழ்வில் எப்படி பட்டவர் என்பது குறித்து முன்னதாக மாரிசெல்வராஜ் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ராம் என்ற ஆளுமை இல்லைனா நான் என்ன ஆகியிருபேனு எனக்கே தெரியாது. என்கிட்ட இருக்க படைப்புகளின் மூல காரணம் அவர்தான். நான் எதை படமாக்க வேண்டும் என்று அவர்தான் எனக்கு கற்றுக்கொடுத்தார் என்று ராம் குறித்து மாரி செல்வராஜ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
தங்க நிற உடையில் ஜொலிக்கும் ஜான்வி போட்டோஸ் இதோ
குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வெற்றி படிநிலைகள்!
Exit mobile version