5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: தன் படத்தின் காட்சியை பார்த்து கதறி அழுத பா.ரஞ்சித்!

Pa Ranjith: 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தனக்கென தனியிடம் பிடித்தார். தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என அடுக்கடுக்கான சமூக நிகழ்வுகளை மையப்படுத்தி படம் இயக்கி முன்னணி இயக்குநராக உயர்ந்தார். இப்படியாக சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தை இயக்கினார்.

Cinema Rewind: தன் படத்தின் காட்சியை பார்த்து கதறி அழுத பா.ரஞ்சித்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 23 Aug 2024 12:39 PM

இயக்குநர் பா.ரஞ்சித்: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தனக்கென தனியிடம் பிடித்தார். தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என அடுக்கடுக்கான சமூக நிகழ்வுகளை மையப்படுத்தி படம் இயக்கி முன்னணி இயக்குநராக உயர்ந்தார். இப்படியாக சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தை இயக்கினார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்த இப்படத்தில் பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. தன்னுடைய அடுத்த படம் தொடர்பான விவாதத்தில் இருக்கும் பா. ரஞ்சித் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தான் அட்டகத்தி படத்தை எடுக்கும்போது அழுததாக தெரிவித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Also Read: TVK Vijay: அடுக்கடுக்கான புகார்கள்.. த.வெ.க கொடியால் சிக்கலில் விஜய்!

அதாவது, “அட்டகத்தி படத்தில் ஒரே ஒரு காட்சியை எடுக்க நான் ரொம்ப சந்தோசப்பட்டேன். அப்படத்தில் தினேஷ் வீட்டின் உள்ளே உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பதாக காட்டியிருப்போம். வெளியே அவரது அப்பா குடித்து விட்டு வந்திருப்பார். அவரை வாசலில் உட்கார வைத்து அம்மா சாப்பாடு ஊட்டிக் கொண்டிருப்பார். இது என் வாழ்வில் நடந்த சம்பவம் தான். குடிச்சிட்டு வந்த என் அப்பாவுக்கு அம்மா சாப்பாடு ஊட்டிக் கொண்டிருப்பார். ஒரு பக்கம் அப்பா குடிச்சிட்டு போதையில் கத்திக்கொண்டிருப்பார்.

இன்னொரு பக்கம் அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் தினேஷ், நான் படிச்சிட்டு இருக்கேன். நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க என கேட்பான். அப்ப அம்மா வந்து பையனை திட்டுவாங்க. நீ படிச்சி ஒன்னும் கிழிக்க போறதுல்ல என சொல்வார். உடனே அதைக் கேட்டு அப்பா அம்மாவை அடிக்கப்போவார். பையன் படிக்கிறான். அவனை எதுவும் சொல்லக்கூடாது. படிச்சா தான் கடவுள் என வசனம் பேசுவார். எங்க அப்பா அடிக்கடி என்னிடம் இந்த வார்த்தையை சொல்லுவார். அந்த காட்சியை எடுத்த பிறகு நான் உட்கார்ந்து அழுதேன்” என பா.ரஞ்சித் தெரிவித்தார்.

Also Read: ‘என் உச்சபட்ச கண்ணீரும், கதறலும் தான் வாழை’ – மாரி செல்வராஜின் உணர்வுபூர்வ பதிவு

அட்டக்கத்தி படத்தில் தினேஷ், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ், கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்தனர். இப்படம் அனைவருக்கும் முதல் படமாகும். மேலும் இப்படத்தின் மூலம் தான் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக எண்ட்ரீ கொடுத்தார். வடசென்னையை மையப்படுத்திய வித்தியாசமான படமாக வெளியாகி அட்டகத்தி அனைவருக்கும் பிடித்த படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

 

Latest News