5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: பொல்லாதவன் படத்திற்கு நான் யோசிச்ச டைட்டில் வேற… வெற்றிமாறன் சொன்ன விஷயம்

தனுஷின் சினிமா வாழ்க்கைக்கு அண்ணன் செல்வராகவன் ஆரம்ப புள்ளி என்றால் இயக்குநர் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி அவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான ’பொல்லாதவன்’ படம் தனுஷின் சினிமா வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது.

Cinema Rewind: பொல்லாதவன் படத்திற்கு நான் யோசிச்ச டைட்டில் வேற… வெற்றிமாறன் சொன்ன விஷயம்
வெற்றிமாறன்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Sep 2024 15:40 PM

தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்திற்கு தான் வேறு டைட்டில் யோசித்து வைத்திருந்ததாகவும் அதனை தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இந்த டைட்டிலை வைத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் முன்னதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் இப்போது இயங்கிக்கொண்டிருக்கும் இயக்குநர்களில் எல்லோராலும் மதிக்கப்படும் விரும்பப்படும் இயக்குநர் என்று யார் என்று கேட்டால் யோசிக்காமல் வெற்றிமாறன் என்று சொல்லிவிடலாம். தமிழ் சினிமாவில் தரமான இயக்குநராக ஒவ்வொரு படத்தையும் உணர்வுபூர்வமாகவும் உலகத்தரத்துடனும் கொடுத்து வருகிறார். மகத்தான இயக்குநர்களில் ஒருவரான பாலுமகேந்திராவிடம் திரைப்படங்களிலும், அவர் இயக்கிய தொலைக்காட்சித் தொடர்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிமாறன் 2007-ல் வெளியான ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.  தனுஷ் நடிப்பில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் தற்போது வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

பொல்லாதவன் படத்தில் தனுஷுடன் இணைந்து ரம்யா, டேனியல் பாலாஜி, கிஷோர், பானுப்ரியா, சந்தானம், கருணாஸ் எனப் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர். பொல்லாதவன் படத்தின் மூலம் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி 1 7 ஆண்டுகள் கடந்தது.

Also read… Cinema Rewind: பருத்திவீரன் படத்துல அந்த சீன் இன்னும் மறக்க முடியல – பிரியாமணி சொன்ன விஷயம்

முதல் படத்தின் கமர்ஷியல் வெற்றி வெற்றிமாறனுக்கு அடுத்தடுத்த படங்களின் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால் வழக்கமான கமர்சியல் பாதையில் செல்லாமல் திரைப்படங்களில் கதை சொல்வதில் எதார்த்தத்தையும் ஆழமான உணர்ச்சிகளையும் முக்கியமாக கருதினார் வெற்றிமாறன் . ஆடுகளம் , விசாரணை , உள்ளிட்டப் படங்களுக்கு அடுத்தடுத்து தேசிய விருதுகளை வென்ற வெற்றிமாறன் வனிக ரீதியாகவும் வெற்றிகரமான இயக்குநராக இருந்து வருகிறார்.

பொல்லாதவன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் உடன் இணைந்து வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தது. சிறந்த திரைக்கதை ஆசிரியர் மற்றும் சிறந்த இயக்குநர் என 2 தேசிய விருதுகளை வெற்றிமாறன் அந்த படத்திற்காக வென்றார். விசாரணை சிறந்த படமாக தேசிய விருதை வென்றது. காக்கா முட்டை படத்தை தயாரித்து தேசிய விருதை பெற்றார் வெற்றிமாறன். அசுரன் படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை அவருக்கு பெற்றுத் தந்தது.

Also read… Cinema Rewind: சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க முதல் தேர்வு ஜெய் இல்லை… சசிக்குமார் சொன்ன விஷயம்

தனுஷின் சினிமா வாழ்க்கைக்கு அண்ணன் செல்வராகவன் ஆரம்ப புள்ளி என்றால் இயக்குநர் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி அவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான ’பொல்லாதவன்’ படம் தனுஷின் சினிமா வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது. இப்படத்தில் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் சண்டைபோட வேண்டும் என்பதற்காக வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறினார் தனுஷ். அவரை சிக்ஸ் பேக்ஸ் உடன் பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்உ புரூஸ் லீ போல இருப்பதாக சிலாகித்தனர். பல்சர் பைக்கை வைத்து பக்காவான கேங்ஸ்டர் படத்தைக் கொடுக்க முடியும் என பொல்லாதவன் படத்தில் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன் அசத்தியிருப்பார்.

அதனை தொடர்ந்து வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வந்த ’ஆடுகளம்’, ’வட சென்னை’, ’அசுரன்’ என வெளியான அனைத்துப் படங்களும் சொல்லி அடித்தது போல சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணிக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் தனது முதல் படத்திற்கு வேறு பெயரை வைக்க தான் யோசித்து வைத்திருந்ததாகவும் ஆனால் தயாரிப்பாளர் அதனை ஏற்றுக்கொள்ளாததால் ‘பொல்லாதவன்’ என்று பெயர் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் வைக்க நினைத்த பெயர் எழுத்தாழர் பாலகுமரனின் ‘இரும்பு குதிரை’ என்ற நாவலின் பெயரைத்தான் அந்த படத்திற்கு டைட்டிலாக தான் வைக்க நினைத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News