5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: திருக்குறளை உருவி ட்யூன் போட்ட இளையராஜா.. என்ன பாட்டு தெரியுமா?

Ilayaraaja: இளையராஜா இசையில் இடம்பெற்ற “பேர் வச்சாலும் வைக்காமல் போனாலும் மல்லி வாசம்” என்ற பாடலை மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி இணைந்து பாடியிருந்தனர்.  இளையராஜா அந்த பாடலுக்கான ட்யூனை போட்டு விட்டு வரிகளை எழுத கவிஞர் வாலியை அழைத்துள்ளார். அவரும் வர ஸ்டூடியோவில் அங்கு கமல்ஹாசன், அப்படத்தின் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் ஆகியோரும் இருந்துள்ளனர்.

Cinema Rewind: திருக்குறளை உருவி ட்யூன் போட்ட இளையராஜா.. என்ன பாட்டு தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 25 Sep 2024 15:28 PM

இளையராஜா: தமிழ் சினிமாவில் இசைஞானியாக கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவர் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கும் மேல் இசையமைத்த நிலையில் இன்று மேஸ்ட்ரோவாக திகழ்கிறார். பொதுவாக சினிமாவில் பாடல் தொடங்கி காட்சிகளும், அதற்கான சூழலும் எப்படி உருவானது என சொன்னால் அதற்கு நேரமே போதாது. இப்படியான நிலையில் இளையராஜா ஒரு நிகழ்வின் போது கமல்ஹாசன் நடித்த “மைக்கேல் மதன காமராஜன்” படத்தில் இடம் பெற்ற “பேர் வச்சாலும் வைக்காமல் போனாலும் மல்லி வாசம்” என்ற பாடல் உருவான விதம் பற்றி பேசியிருப்பார். 1990ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் கமல் 4 வித்தியாசமான வேடத்தில் நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் ஊர்வசி, ரூபிணி, குஷ்பூ, மனோரமா, நாசர், வெண்ணிற ஆடை மூர்த்தி, நாகேஷ், சந்தான பாரதி, டெல்லி கணேஷ், ஆர்.எஸ்.சிவாஜி, கிரேஸி மோகன், ஜெய பாரதி, எஸ்.என்.லட்சுமி என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர்.

Also Read: Cinema Rewind: ‘என் சினிமா வளர்ச்சிக்கு ரஜினியும் காரணம்’ – கமல்ஹாசன் பகிர்ந்த விஷயம்.. மீள்பார்வை!

பாடல் உருவான கதை

இதில் இளையராஜா இசையில் இடம்பெற்ற “பேர் வச்சாலும் வைக்காமல் போனாலும் மல்லி வாசம்” என்ற பாடலை மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி இணைந்து பாடியிருந்தனர்.  இளையராஜா அந்த பாடலுக்கான ட்யூனை போட்டு விட்டு வரிகளை எழுத கவிஞர் வாலியை அழைத்துள்ளார். அவரும் வர ஸ்டூடியோவில் அங்கு கமல்ஹாசன், அப்படத்தின் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் ஆகியோரும் இருந்துள்ளனர். வாலி இளையராஜாவிடம் என்னையா ட்யூன் என தனது பாணியில் கேட்டுள்ளார். அதற்கு “டட்டா டா டட்டா டா டாடாடா” என பாடி காட்டியுள்ளார். என்னய்யா இது, இதுக்கெல்லாம் எப்படி பாட்டெழுத முடியும் என வாலி கேட்டுள்ளார்.

Also Read: Cinema Rewind: விவேக்கிற்கு கமல் செய்த பாவம்? – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அதற்கு இளையராஜா ஏற்கனவே எழுதுனது தானே என சொல்ல, யார் எழுதுனது என வாலி ஆவலாக கேள்வி எழுப்பியுள்ளார்.உடனே வள்ளுவர் எழுதியிருக்காரே, “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” என்ற திருக்குறளை கூறி, அதனை பாட்டாகவும் பாடி காட்டியுள்ளார். இதன் பின்னர் அந்த வரிகளை பேர் வச்சாலும் வைக்காமல் போனாலும் மல்லி வாசம்” என எழுத அந்த பாடல் உருவானது. அந்த பாடல் எவர்க்ரீன் பாடல் வரிசையில் மிக முக்கிய இடம் பிடித்துள்ளது.

மறு உருவாக்கம் செய்யப்பட்ட பாடல் 

2022 ஆம் ஆண்டில் நடிகர் சந்தானம் டிக்கிலோனா என்ற படத்தில் நடித்தார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த நிலையில் இதில் “பேர் வச்சாலும் வைக்காமல் போனாலும் மல்லி வாசம்” என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. ஆனால் மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி ஆகியோர் குரலை அப்படியே பயன்படுத்தி இசையை மட்டும் சிறிதாக மாற்றி யுவன் மாஸ் காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News