Cinema Rewind: எம்.எஸ்.விஸ்வநாதன் தினமும் கேட்ட சீரியல் பாட்டு எது தெரியுமா?
MS Viswanathan: சின்னத்திரை சீரியல்கள் எப்போதும் மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறுபவை. குறிப்பாக பழைய சீரியல்கள் மீண்டும் மறுஒளிபரப்பு செய்தாலும் டிவி முன் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சீரியல்களின் பெயர்களை சொன்னாலும் அதில் வரும் டைட்டில் பாடல் தொடங்கி, கேரக்டர்கள், குறிப்பிட்ட சீன்கள் என எல்லாமே கதையாக சொல்லி விடுவார்கள்.
சினிமா ரீவைண்ட்: சினிமா மட்டுமல்ல எந்தவொரு தொழிலை எடுத்தாலும், அது அந்த துறையில் மேல்மட்டம் மற்றும் கீழ்மட்டத்தில் இருப்பவர்களால் தொடர்ந்து எங்கேயாவது இருந்து கண்காணிகப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பது இயற்கை நியதி. அப்படிப்பட்ட நிலையில் சின்னத்திரை சீரியல்கள் எப்போதும் மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறுபவை. குறிப்பாக பழைய சீரியல்கள் மீண்டும் மறுஒளிபரப்பு செய்தாலும் டிவி முன் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சீரியல்களின் பெயர்களை சொன்னாலும் அதில் வரும் டைட்டில் பாடல் தொடங்கி, கேரக்டர்கள், குறிப்பிட்ட சீன்கள் என எல்லாமே கதையாக சொல்லி விடுவார்கள். அப்படி ஒரு மறக்க முடியாத நிகழ்வு இசையமைப்பாளர் இமான் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.
இதையும் படிக்க: Cinema Rewind: அந்த கடனை அடைக்க 15 வருஷம் ஆச்சு…. செல்வராகவனின் வேதனை வார்த்தைகள்
2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் படம் மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார். இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜெயா டிவியில் ஒளிபரப்பான சீரியல்களுக்கு டைட்டில் பாடல் இசையமைத்துள்ளார். குறிப்பாக 2003 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆண்டு வரை கிட்டதட்ட 1533 எபிசோடுகள் ஓடிய கோலங்கள் சீரியலை யாராலும் மறக்க முடியாது. திருச்செல்வம் இயக்கிய தேவயானி, அபிஷேக், அஜய் கபூர், தீபா வெங்கட், மஞ்சரி என ஏகப்பட்ட பேர் நடித்த அந்த சீரியலில் டைட்டில் பாடல் இன்றைக்கு மக்கள் மத்தியில் பிரபலம். அந்த பாடலுக்கு இசையமைத்தது இமான் தான் என்பது பலருக்கும் தெரியாது.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய டி.இமான், “சன் டிவியில் கோலங்கள் சீரியல் ஒளிபரப்பானது. அதில் டைட்டில் பாடலுக்கு நான் தான் இசையமைத்தேன். மாலையில் ஒளிபரப்பாகும் அந்த சீரியல் மறுநாள் காலையில் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படுவது வழக்கம். அதாவது இரவு 7.30 மணிக்கு முதலில் ஒளிபரப்பாகி, மறுஒளிபரப்பு அடுத்த நாள் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் என நினைக்கிறேன். அந்த நேரத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இந்த பாட்டை கேட்டு விட்டு அந்த பாட்டின் ராகம், யார் இசையமைத்திருக்கிறார் என்பதை எல்லாம் தெரிந்து வைத்திருந்துள்ளார்.
இது எனக்கு தெரியாது. நான் சம்பந்தமே இல்லாமல் இசையமைப்பாளர் சங்கத்தின் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அப்போது எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்தேன். அவர் தூரத்தில் இருந்து இங்க வா, இங்க வா என்னை கைகாட்டி அழைத்தார். நான் என்னவோ ஏதோவென்று போய் பார்த்தேன். கிட்டப்போன என்னிடம், கோலங்கள் சீரியலுக்கு நீதானே இசையமைத்தாய் என கேட்டார். நானும் ஆமா என சொன்னேன். தினமும் காலையில் அதை கேட்பேன். ரொம்ப அழகா பண்ணியிருக்க எனவும் சொன்னார். எனக்கு அதை கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என தெரிவித்திருந்தார்.