“ரேவதினு கூப்பிட்டா திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேன்” – நடிகை ரேவதி சொன்ன விஷயம்…
Actress Revathi Cinema : பழைய தமிழ்த் திரைப்படங்களில் பிரபல நடிகைகளில் ஒருவர் நடிகை ரேவதி. இயக்குநர் பாரதி ராஜாவின் மண்வாசனை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் இவர் உச்ச நட்சத்திர நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பழைய திரைப்படங்களில் பல வெற்றி படங்களை தந்த பிரபலமான நடிகை ரேவதி. இவரை நாம் ரேவதி என்ற பெயரால் அறியப்பட்டாலும் இவரின் உண்மையான பெயர் ஆஷா கெலுன்னி. இவர் கேரளா மொழியைத் தாய் மொழியாகக் கொண்டாலும் இவரை நடிகையாகப் பிரபலமாக்கியது தமிழ் சினிமா. சிறுவயது முதலே மேடை நிகழ்ச்சிகளில் ஆர்வம் கொண்ட இவர் கேரளா பத்திரிக்கைகளில் வெளியான புகைப்படத்தின் மூலம் பிரபலமானார். இந்த நிகழ்வினால் தான் 1983ல் தமிழில் பிரபல இயக்குநரான பாரதிராஜா கண்ணுக்கு தென்பட்ட இவர் அவரின் இயக்கத்தில் உருவான மண் வாசனை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாக்கினார் .
ரேவதி சினிமா அறிமுகம்
இந்த திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்பினால் தமிழ் மக்களிடையே பிரபலமான இவர் பின் அதே ஆண்டில் கிளிக்கூடு என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து மலையாள திரையுலகிலும் அறிமுகமானார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முக்கியமாக அம்மா கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவர். சினிமாவில் இவர் நுழையும் போது இவரின் பெயர் மாற்றத்தைப் பற்றி ஒரு நேர்காணலில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
நடிகை ரேவதி இயக்குநர் பாரதிராஜாவின் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானாலும் பின் 1986ல் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “மௌன ராகம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இதைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். பல மொழி திரைப்படங்களில் நடித்து 80களில் உச்ச நடிகையாக இருந்த இவருக்கு 1986ல் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த “புன்னகை மன்னன்” என்ற திரைப்படத்தில் தனது அசாதாரணமான தரமான நடிப்பினால் மிகவும் சிறப்பான நடிகை என்ற பெயரை வாங்கினார்.
இதையும் படிங்க :Cinema Rewind: எம்டன் படத்தில் ஈரல் சீன் இப்படிதான் நடிச்சேன்… பரத் சொன்ன விஷயம்
பாலிவுட் பயணம்
தமிழ் மலையாளம் எனத் தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் 1991ல் இயக்குநர் கிருஷ்ணா என்பவரின் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். “லவ்” என்ற திரைப்படத்தில் இந்தி பிரபல நடிகர் சல்மான்கானுடன் இணைந்து நடித்து இந்தி திரைத்துறையில் பிரபலமானார்.
இவர் நடிகை மட்டுமல்ல பிரபல பரதநாட்டிய நடனக் கலைஞரும் ஆவார். 80கள் மற்றும் 90களில் சிறந்த நடிகையாக வளம் வந்த இவருக்கு கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், உன்னை நான் சந்தித்தேன் கன்னி ராசி மற்றும் பகல் நிலவு போன்ற திரைப்படங்களில் வெற்றியைத் தொடர்ந்து பல திரைப்படங்களை நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது.
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் உச்ச நட்சத்திர நடிகையாக இருந்த இவர் இந்தியில் சுமார் 40க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்தி பிரபலங்களான அமிதாப்பச்சன், சல்மான் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் பல திரைப்படங்களை இயக்கியும் உள்ளார் இவர் 2002ல் நடிகை ஷோபனா நடிப்பில் வெளியான மித்ர், மை ஃப்ரெண்ட் என்ற ஆங்கில திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தைத் தொடர்ந்து பிர் மிலேங்கே. மும்பை கட்டிங் மற்றும் சலாம் வெங்கி என்ற இந்தி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். நடிகையாக மட்டுமில்லாமல் இயக்குநராக, நடனக் கலைஞராக ,டப்பிங் ஆர்டிஸ் எனப் பல துறையில் பிரபலமாகிய இவர் தற்போது திரைப்படங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துவருகிறார்.
இதையும் படிங்க :Cinema Rewind: ஃபஹத் ஃபாசில் வரட்டும்.. ஒரு மாதமாக காத்திருந்த ரஜினி!
இந்நிலையில் நடிகை ரேவதி முன்னதாக ஒரு பேட்டியில் தனது ரேவதி என்ற பெயர் எப்படி வந்தது என அதைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதில் தொகுப்பாளர் ரேவதி என்று உங்கள் பெயர் மாற்றும்போது உங்களுக்கு எப்படி இருந்தது என்று கேட்டிருப்பார் அதற்கு ரேவதி எனக்கு அந்த பெயரை வைக்கும் போது நிறைய எழுத்தாகவும், எனக்கு அந்த பெயர் பிடிக்கவில்லை என்றும் எனக்கு எங்க அம்மா அப்பா வைத்த பெயரே போதும் என்றும் கூறினார்.
முதன் முதலில் ரேவதி என்ற பெயர் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை, யார் என்ன ரேவதியென்று கூப்பிட்டா திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேன், அதன் பிறகு தமிழ் மக்கள் என்னை ரேவதி என்று கூப்பிட்டுக் காலப்போக்கில் அதவாகப் பழகியது என்று அதில் கூறியிருப்பார். அவர் பேசி வெளியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க :Cinema Rewind: “மார்வெல்ஸ் படம் போலதான் பிளான்” இயக்குநர் ஷங்கர் சொன்ன விஷயம்