5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: ’குஷி’ படத்தில் நடிக்க இதுதான் காரணம்… நடிகர் விஜய் சொன்ன விஷயம்

1999ம் ஆண்டு வாலி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவரது மாறுபட்ட திரைக்கதையும், அவரது படங்களும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அஜித் திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமான வாலியையும், விஜய் திரைப்படத்தின் முக்கியமான படமான குஷியையும் இயக்கி ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் திரும்பி பார்க்க வைத்தார் எஸ்.ஜே.சூர்யா.

Cinema Rewind: ’குஷி’ படத்தில் நடிக்க இதுதான் காரணம்… நடிகர் விஜய் சொன்ன விஷயம்
நடிகர் விஜய், எஸ்.ஜே.சூர்யா
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Sep 2024 14:15 PM

கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி படத்தில் நடிக்க காரணம் இதுதான் என சுவாரஸ்யமாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சிறுவயதில் இருந்தே சினிமா மீது ஏற்பட்ட ஆசையால் தன்னை ஒரு ஸ்டாராகவே கருதி வந்தார் எஸ்.ஜே. சூர்யா. ஆனால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடும்போது, நாம் இயக்குநர் ஆனால் மட்டும்தான் நமது கனவான நடிகர் என்ற கனவை அடைய முடியும் என புரிந்துகொண்டு, இயக்குநர் ஆவதற்கான வேலைகளில் ஈடுபடத்தொடங்கினார். 1999ம் ஆண்டு வாலி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவரது மாறுபட்ட திரைக்கதையும், அவரது படங்களும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அஜித் திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமான வாலியையும், விஜய் திரைப்படத்தின் முக்கியமான படமான குஷியையும் இயக்கி ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் திரும்பி பார்க்க வைத்தார் எஸ்.ஜே.சூர்யா.

அதன்பின் குஷி படத்தினை தெலுங்கிலும் எடுத்தார். அங்கும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஆனால் இந்த படத்தின் ஹிந்தி ரிமேக் மட்டும் வெற்றிப் படமாக மாறவில்லை. அதன் பின்னர் தானே நடிகனாக களம் இறங்க முடிவு செய்து நியூ படத்தினை தானே இயக்கி நடிக்கவும் செய்தார். அந்த படம் ஓரளவுக்கு இவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வெற்றியைக் கொடுக்க, தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் இயக்கிய நியூ, அன்பே ஆரூயிரே, இசை படங்கள் வித்தியாசமான கதைக்களம் கொண்டது ஆகும், இயக்குனராக குறைந்த படங்களே இயக்கியிருந்தாலும் தற்போது நடிகராக கோலிவுட்டை மிரட்டி வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயக பிம்பம் இல்லாமல் நடிப்புக்காக மட்டுமே ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்கள் வெகு சிலரே. அந்த வகையில் சமீபகாலமாக ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நடிகராக உலா வருபவர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பு அரக்கன் என்று செல்லமாக கோலிவுட்டில் அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யாவின் இசை படத்தின் விழாவில் நடிகர் விஜய் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் இயக்குநர் விக்ரமன் என்னிடம் கேட்டார் ஏன் விஜய் நீங்க குஷி படத்தில நடச்சீங்க… அதுல என்ன கத இருக்குனு? அப்போ நான் அவர்கிட்ட சொன்னேன் சார் உங்களுக்கு எஸ்.ஜே.சூர்யா… எஸ்.ஜே.சூர்யானு ஒருத்தர் இருக்காரு சார். அவர் கதை சொல்லி நீங்க கேக்கனும் சார். அதுல அவர் கிங் அதனாலதான் குஷி படத்தில் நடித்தேன் என்று நகைச்சுவையாக அந்த வீடியோவில் தெரிவித்திருப்பார்.

Also read… ”ஆள்வதற்கு அதிகாரம் தேவை நினைச்சோம், இங்க வாழ்றதக்கு அதிகாரம் தேவை” – நந்தன் ட்ரெய்லர் இதோ

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், விஜய் – ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் தற்போது நிறைவடைகிறது. இந்தப்படம் ரொமாண்டிக் காமெடி படமாக உருவானது. விஜய் – ஜோதிகா இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். அவர்கள் நட்புடன் பழகி வருவார்கள். அப்போது இருவரிடையேயும் காதல் மலரும். ஆனால், அதை யார் முதலில் கூறுவது என்பதில் இருவரிடமும் ஈகோ மோதல் ஏற்படும். இதனால் அவர்களிடையே நிறைய புரிதலின்மைகள் மற்றும் சண்டைகள் ஏற்படும். இறுதியாக அவர்கள் எப்படி சேர்கிறார்கள் என்பது படத்தின் கதை. பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த இந்த படம் நடிகர் விஜய் கேரியரில் ஒரு மைல்கல்லாகவே அமைந்தது என்று கூறலாம்.

படத்தின் மேகம் கருக்குது, மேக்கரீனா மேக்கரீனா, ஒரு பொண்ணு ஒண்ணு நான் பாத்தேன், மொட்டு ஒன்று மலர்ந்தி மறுக்கும், கட்டிப்புடி கட்டிப்புடிடா, ஓ வெண்ணிலா ஆகிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் பாடல்களுக்கு 90ஸ் கிட்ஸ்களின் மத்தியில் பல நாஸ்டாலஜிகள் உள்ளது குறிப்பிடதக்கது.

Latest News