ஆனந்தம் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான வடிவேலு… கால்ஷீட் பிரச்சினையால் உள்ளே வந்த மற்றொரு நடிகர்..! - Tamil News | comedy actor vadivelu about anandam movie missed character -bava lakshmanan | TV9 Tamil

ஆனந்தம் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான வடிவேலு… கால்ஷீட் பிரச்சினையால் உள்ளே வந்த மற்றொரு நடிகர்..!

தமிழ் சினிமாவில் குடும்பத்துடன் ஒன்றாக பார்க்கும் திரைப்படங்களின் பட்டியலில் ஆனந்தம் திரைப்படத்திற்கு தனி இடம் உண்டு. அந்த வகையில் படம் வெளிவந்து 21 ஆண்டுகள் ஆனாலும், இன்றளவும் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பெற்றுள்ளது. அந்த திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்களில் பலர் இன்று மிகப்பெரிய நடிகர்களாக உள்ளனர். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடிப்பதற்கு ஒப்பந்தமானதாகவும், சில பிரச்சினைகளால் அவர் நடிக்க முடியாமல் போனதால், பாவா லட்சுமணன் அந்த கதாபாத்திரத்தில் நடித்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆனந்தம் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான வடிவேலு... கால்ஷீட் பிரச்சினையால் உள்ளே வந்த மற்றொரு நடிகர்..!
Updated On: 

09 Jul 2024 23:25 PM

குடும்ப உறவுகளுக்கும், அண்ணன் மற்றும் தம்பிகளுக்கு இடையில் நடைபெறும் பாசத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவான ஆனந்தம் திரைப்படம் வெளிக்காட்டியது. இத்திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாக மாறியது. இயக்குநர் லிங்குசாமி தனது வாழ்க்கையை படமாக மாற்றியதாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும் விதமாக உருவாக்கிய இயக்குநர் லிங்குசாமிக்கு ஆனந்தம் திரைப்படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. காதல், அன்பு, சண்டை காட்சிகள், பிரிவு, என பல்வேறு பரிமாணங்களையும் ஆனந்தம் திரைப்படத்தில் இயக்குநர் காட்சிப்படுத்தியிருந்தார்.

Also Read: Viral Video : ரிஷிகேஷில் பிகினி அணிந்து நீராடிய வெளிநாட்டவர்கள்.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ!

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில், ஆர்.பி. சவுத்திரி தயாரிப்பில் என்.லிங்குசாமி இயக்குநராக அறிமுகமான திரைப்படமான ‘ஆனந்தம்’ 2001 மே 25 அன்று வெளியானது. மிகப்பெரிய வெற்றிதிரைப்படமாக மாறியது. கும்பகோணத்தை சுற்றி கதைக்களம் வடிவமைக்கப்பட்ட நிலையில், அரசு கலைக்கல்லூரி, திருபுவனம் கோயில், தாரசுரம் மார்க்கெட் போன்ற பெரும்பாலான இடங்களில் திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருந்தது. மம்மூட்டி, முரளி, அப்பாஸ், ஷ்யாம் கணேஷ், இளவரசு, தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கணேஷ் மற்றும் ஸ்ரீவித்யா என திரைப்பட நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்தனர். எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இன்று வரை பலரது ப்ளே லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.

Aslo Read: கேன் வாட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

காமெடி நடிகர் பாவா லட்சுமணன் வீட்டிற்கு திருடுவதற்காக வருவார். அவரை பிடித்த அண்ணன், தம்பிகள் அவருக்கு சோறுபோட்டு வேலையும் தருவார்கள். அப்படி மம்முட்டி வீட்டிற்கு செல்லும் பாவா லட்சுமனன் வீட்டுவார். இந்த காட்சிகளில் நடிக்க முடில் ஒருவராகவே மாறிவிதலில் வடிவேலுவிடம் தான் பேசப்பட்டது என்று பாவா லட்சுமணன் பேசியிருக்கிறார். இவரது சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளதாவது, நான் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் வடிவேலு. பின்னர் கால்ஷீட் பிரச்சினை காரணமாக நடிக்க முடியாமல் போனது, பின்னர், விவேக், சார்லி போன்றவர்களை இயக்குநர் நாடிய நிலையில், அவர்களும் நடிக்க முடியாமல் போனது. பின்னர் என்னையே நடிக்கும் படி கூறிய இயக்குநரிடம் நான் முதலில் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். நான் தானே தயாரிப்பாளர் என்னுடைய பணத்தை போட போறேன் நானே சொல்லுறேன் நீ போய் நடி என்று கூறியதாக பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார். பாவா லட்சுமணன் நடிக்க போவதாக இயக்குநர் லிங்குசாமி கூறியதும், கூடுதலாக ஒரு காட்சி வைக்கும்படி மம்முட்டி கூறியதாகவும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

 

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!