5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vettaiyan: அரசு பள்ளி குறித்து சர்ச்சை வாசகம்.. வேட்டையன் இயக்குநர் மீது போலீசில் புகார்!

வேட்டையன் படத்தில் குறிப்பிட்டுள்ள கோவில்பட்டி காந்திநகரில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த காட்சிகள் அந்தப் பள்ளியை சித்தரிப்பதாக கூறி அதை நீக்க வேண்டும் என கோவில்பட்டி சமூக ஆர்வலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா என்பவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vettaiyan: அரசு பள்ளி குறித்து சர்ச்சை வாசகம்.. வேட்டையன் இயக்குநர் மீது போலீசில் புகார்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 11 Oct 2024 11:36 AM

வேட்டையன் படம்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டை படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. நேற்று வெளியான இந்தப் படம் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. அந்த படத்தின் இயக்குநரான த.செ.ஞானவேல் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. வேட்டையன் படம் நேற்று வெளியான நிலையில் முதல் நாள் காட்சி பார்க்கச் சென்ற கோவில்பட்டி மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் தொடக்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தொடர்பான சில காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதில் கோவில்பட்டி காந்திநகரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் பெண் ஆசிரியரை ஆபாசமாக பதிவு செய்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதால் சர்ச்சை என்ற வாசகம் அடங்கிய செய்தி வாசிக்கும் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.  இந்த காட்சி தான் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Also Read: Hardik Pandya Birthday: பிறப்பு முதல் விவாகரத்து வரை.. ஹர்திக் பாண்டியாவின் 30 ஆண்டுகால வாழ்க்கை!

காரணம் வேட்டையன் படத்தில் குறிப்பிட்டுள்ள கோவில்பட்டி காந்திநகரில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த காட்சிகள் அந்தப் பள்ளியை சித்தரிப்பதாக கூறி அதை நீக்க வேண்டும் என கோவில்பட்டி சமூக ஆர்வலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா என்பவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், “கோவில்பட்டி காந்திநகரில் நகராட்சி உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி தொடர்ந்து 10ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்து வருகிறது. இப்படியான நிலையில் கடந்த 2009-2010 ஆண்டில் தமிழகத்தின் சிறந்த அரசு பள்ளி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் பெற்றுள்ளது . இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேட்டையின் திரைப்படத்தில் அந்த பள்ளியை சித்தரிக்கும் வகையில் தவறான காட்சி இடம் பெற்றுள்ளது அதனை நீக்க வேண்டும்” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், “பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி என்பதால் அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாமல் பல பகுதிகள் உள்ள மாணவர்களும் காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு ஆர்வமுடன் வருகை தந்து படிக்கும் வழக்கம் உள்ளது. இப்படியான நிலையில் மக்கள் அதிகம் பார்க்கும் ஒரு திரைப்படத்தில் இப்படி போன்ற காட்சி அமைக்கும்போது மேற்கொண்டு பள்ளிக்கூடம் குறித்து தமிழ்நாடு முழுவதும் தவறான கண்ணோட்டம் ஏற்படும்.

Also Read: Tirupati: திருப்பதி பிரம்மோற்சவம்.. கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!

இதன் மூலம் சமூகத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி மீதும்,  அதில் படிக்கும் மாணவர்கள் மீதும் தவறான பார்வை உண்டாகும். மேலும் தமிழ்நாடு அரசு அளித்து வரும் தரமான கல்வி மாணவர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படும். இதனால் அரசுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அவப்பெயர் அமைக்கும் வகையில் காட்சி அமைத்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தரம் குறைந்தவர்கள் என்று மக்கள் அதிகம் பார்க்கும் திரைப்படத்தில் காட்சி அமைத்த இயக்குநர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு,  மேலும் அந்த திரைப்படத்தின் காட்சி ஒன்று நிராகரிக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் வேட்டையன்படம் அவரது 170வது திரைப்படமாகும். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன்,  மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ஃபகத் ஃபாசில், ரானா டகுபதி, ரித்திகா சிங், கிஷோர் என பலரும் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி இருக்கும் வேட்டையன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகியுஉள்ளது. இதில் இந்தியில் அமிதாப்பச்சன் டப்பிங் பேசிய நிலையில், மற்ற மொழிகளுக்கு இன்னொருவரை டப்பிங் பேச வைத்து அந்த குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் அமிதாப்பச்சன் குரலாக மாற்றியுள்ளனர்.

ஏற்கனவே ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படத்தின் வன்னியர் சமுதாய மக்களின் அடையாளமான அக்னி கலசம் இடம்பெற்ற காட்சி மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இந்நிலையில் தற்போது அரசு பள்ளி தொடர்பான காட்சி சர்ச்சையாகியுள்ள நிலையில் இதுதொடர்பாக படக்குழு என்ன முடிவெடுக்கப் போகிறது. வேட்டையன் படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News