5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரஜினியின் ‘கூலி’ படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Coolie Movie Update: நடிகர் ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார். முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக லோகேஷ் கனகாராஜ் படம் என்றாலே படம் LCU கனெக்‌ஷன் இருக்கா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புவது வழக்கம். அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான லியோ படம் அதற்கு முன் வெளியாக விக்ரம் படம் ஆகியவை கனெக்‌ஷனில் உள்ளது வெளிப்படுத்தியது.

ரஜினியின் ‘கூலி’ படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
ரஜினி, லோகேஷ்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Jun 2024 12:14 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரஜினியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினிக்கு லுக் டெஸ்ட் செய்துள்ளதாகவும், மேலும் புது அப்டேட்டாக படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தில் தனது போர்சனை ரஜினி நடித்து முடித்துள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டது.

இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்து படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சி நடைபெற உள்ளன. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார். முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக லோகேஷ் கனகாராஜ் படம் என்றாலே படம் LCU கனெக்‌ஷன் இருக்கா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புவது வழக்கம். அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான லியோ படம் அதற்கு முன் வெளியாக விக்ரம் படம் ஆகியவை கனெக்‌ஷனில் உள்ளது வெளிப்படுத்தியது.

Also read… Maharaja Movie BTS : மகாராஜாவாக விஜய் சேதுபதி மாறியது இப்படித்தான்.. வீடியோ வெளியிட்ட படக்குழு!

அந்த படத்தை போல இதுவும் இருக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து எழ தொடங்கிய நிலையில் அதற்கு லோகேஷ் பதிலளித்துள்ளார். அதில் LCU படங்களில் இடம் பெற்ற நடிகர்கள் கூலி படத்தில் இருப்பார்கள் ஆனால் இது LCU படம் கிடையாது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் கூலி படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் தொடங்கும் என முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பதால் படம் கைவிடப்பட்டதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகின.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள புகைப்படம் அமைந்துள்ளது. அந்த வகையில் லோகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், கூலி படத்திற்காக ரஜினியின் லுக் டெஸ்ட் நடைபெற்றுள்ளது. மேலும் புது அப்டேட்டாக படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Latest News