5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவ.27-ல் தீர்ப்பு!

18 வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்த நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு மனம் ஒத்து பிரிவதாக அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்சியை ஏற்படுத்தியது. அவர்களை இணைக்கும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவியது.

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவ.27-ல் தீர்ப்பு!
தனுஷ் – ஐஸ்வர்யா
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Nov 2024 16:22 PM

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த விவாகரத்து வழக்கில் நவம்பர் 27-ல் தீர்ப்பு வழங்க உள்ளதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இயக்குநர் கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியின் கடைக்குட்டி மகனாக 1983-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி பிறந்தவர் நடிகர் தனுஷ். வெங்கடேஷ் பிரபுவான இவரை நடிகர் தனுஷ் என மாற்றியது அவரது அண்ணன் இயக்குநர் செல்வராகவன் தான். கடந்த 2002-ம் ஆண்டு ’துள்ளுவதோ இளமை’ படம் மூலம் திரைத்துறைக்கு நடிகராக அறிமுகமானார்.  ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானபோது ஒல்லியான உடம்புடன் ஒருவன் ராணுவ உடை அணிந்து கொண்டு ஒட்டு மீசையுடன் வந்து நிற்கிறான் என்று பல கேலிகளுக்கு ஆளான ஒருவர் ஹாலிவுட் வரை பிரபலமானது பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. இரண்டாவதே தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ படம் தனுஷை தமிழ் ரசிகர்களின் மனதில் நடிகராக பதியவைத்தது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனைத்து படங்களும் ஹிட் அடித்த நிலையில் அதனை தொடர்ந்து தனுஷ் இயக்குநர் வெற்றி மாறன் உடன் கூட்டணி வைத்தார். இந்த இரண்டு கூட்டணிகளும் தனுஷின் சினிமா வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார் தனுஷ். இந்த தம்பதிகளுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் 18 வருட தாம்பத்திய வாழ்க்கையில் இருந்து விலகுவதாக 2022-ம் ஆண்டு அறிவிப்பை வெளியிட்டனர்.

Also read… விஜயின் தளபதி 69 படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர்?

இதனை தொடர்ந்து பல சர்ச்சைகளும் கிசுகிசுகளும் இணையத்தில் உலா வந்துகொண்டே இருந்தது. மேலும் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினியை எப்படி சந்தித்தேன் என்பது குறித்த பேட்டியில் பேசியது எல்லாம் இணையத்தில் வைரலானது. அதில் தனுஷ் பேசியதாவது “என்னுடைய காதல் கொண்டேன் படத்தின் முதல் நாள் காட்சியை திரையரங்கில் நாங்கள் குடும்பமாகச் சென்று பார்த்தோம்.

இடைவேளையில், படம் ஹிட் ஆகிவிடும் என்று தெரிந்ததால் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு கொண்டாடினோம். படம் முடிந்ததும் நாங்கள் கிளம்ப இருந்தபோது திரையரங்கு உரிமையாளர் ரஜினிகாந்த் சாரின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யாவிடம் என்னை அறிமுகப்படுத்தினார். ஒருவருக்கு ஒருவர் வணக்கம் சொல்லிவிட்டு கிளம்பினோம். அடுத்த நாள், ஐஸ்வர்யா ரஜினி எனது நடிப்பை பாராட்டி ஒரு பூங்கொத்து அனுப்பினார்.

அதனை தொடர்ந்து ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது என்று தெரிவித்திருந்தார். தனுஷை விட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2 வயது மூத்தவர் என்பது திருமணத்தின் போது பேசுபொருளானது. அதே நேரம் சினிமா பிரபலங்களில் பலர் தங்களை விட மூத்த வயது பெண்ணை திருமணம் செய்தது இயல்பான ஒன்றாக பார்க்கப்பட்டது.

Also read… Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் பல்லக்குகாக ஏற்படும் சலசலப்பு… வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் 18 வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்த நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு மனம் ஒத்து பிரிவதாக அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்சியை ஏற்படுத்தியது. அவர்களை இணைக்கும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் இரண்டு வருடங்களாக இவர்களின் விவாகரத்து வழக்கு விசாரணை அவ்வப்போது நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதில் உறிதியாக உள்ளதாகவும் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 27-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Latest News