கொக்கிகுமாரும்.. புதுப்பேட்டை படமும்… தனுஷ் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தைகள்!
Pudhupettai 18th Anniversary: ஒரு சாதாரண பள்ளி படிக்கும் பையன் வாழ்க்கையில் ஏற்படும் விபத்தால், வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுகிறார். அங்குள்ள கேங்ஸ்டர்களுடன் சேர்த்து அவரும் பெரிய கேங்ஸ்டராக மாறுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே புதுப்பேட்டை படத்தின் கதை. பல வருடங்களாக ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு தனுஷ் மற்றும் செல்வராகன் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது என்றால், அது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தான்.
தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் 2006-ம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் கேங்ஸ்டர் படம் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது புதுப்பேட்டை தான். சினேகா, சோனியா அகர்வால், அழகம் பெருமாள் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் வெளியாகி நேற்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகிறது.
ஒளிப்பதிவினை அரவிந்த் கிருஷ்ணாவும், எடிட்டிங்கினை கோலா பாஸ்கரும் செய்திருந்தனர். இப்படத்தினை லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் கே. முரளிதரன், வி.சுவாமிநாதன், ஜி.வேணுகோபால் ஆகியோர் தயாரித்து இருந்தனர். வசனங்களை எழுத்தாளர் பாலகுமாரனோடு சேர்ந்து, செல்வராகவன் எழுதியிருப்பார். பாக்ஸ் ஆபிஸில் ஆவரேஜ் வரவேற்பினைப் பெற்றாலும் தற்போது இப்படம் கல்ட் கிளாஸிக்காக கொண்டாடப்படுகிறது.
இப்படத்தின் இசையினை யுவன் சங்கர் ராஜாவும் பாடல்கள் அனைத்தையும் நா.முத்துக்குமாரும் எழுதியிருப்பார். இப்படத்தில் வரும் ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது, வரீயா போன்ற பாடல்கள் இன்றும் பலரது ஃபேவரைட்டாக உள்ளன.
ஒரு சாதாரண பள்ளி படிக்கும் பையன் வாழ்க்கையில் ஏற்படும் விபத்தால், வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுகிறார். அங்குள்ள கேங்ஸ்டர்களுடன் சேர்த்து அவரும் பெரிய கேங்ஸ்டராக மாறுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே புதுப்பேட்டை படத்தின் கதை. பல வருடங்களாக ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு தனுஷ் மற்றும் செல்வராகன் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது என்றால், அது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தான்.
Also read… சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல நடிகை!
படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் இயக்குநர் செல்வராகவன் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போதும், ரசிகர்களுடன் கலந்துரையாடும்போதும் புதுப்பேட்டை 2 பற்றிய பேச்சு எழுந்துவிடும்.
18 years of kokki Kumar. An actor gets few iconic roles in his entire career. Kokki Kumar is one such. Thank you @selvaraghavan for blessing me with kokki Kumar. I only wish I had done it better. Nevertheless , kokki Kumar is an emotion.
— Dhanush (@dhanushkraja) May 26, 2024
இந்த நிலையில், புதுப்பேட்டை படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி, நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு நடிகருக்கு திரை பயணத்தில் சில கதாபாத்திரங்கள் மட்டும்தான் அழுத்தமானதாக அமையும். இதுபோன்ற கதாபாத்திரம் தான் கொக்கி குமார். இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்த செல்வராகவனுக்கு நன்றி. நான் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று மட்டுமே விரும்பினேன். கொக்கி குமார் ஒரு எமோஷன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.