5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

”இந்த இரண்டு வார்த்தைகளை எழுதும் போது கற்பனை கூட செய்யவில்லை”… இது உங்க மேஜிக்.. ரகுமானை புகழ்ந்த தனுஷ்!

Dhanush about AR Rahman: குடும்பம், பாசம், துரோகம், பழிவாங்கல் என வழக்கமான டெம்ப்ளேட்டுகள் தான் படத்தின் கதை என்றாலும் அதனை சுவாரஸ்யமாக கடத்தியுள்ளார் இயக்குநர் தனுஷ். படத்தில் ’அடங்காத அசுரன்’ பாடலில் வரும் ‘உசுரே நீ தானே நீ தானே’ என்ற வரிகள் ஏ.ஆர்.ரகுமானின் குரலில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த பாடல் காட்சியாக எப்படி இருக்கும் என்பதை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு செம்ம ட்ரீட் கொடுக்கும் வகையில் முக்கியமான இடத்தில் இந்த வரிகள் ஏ.ஆர்.ரகுமானின் குரலில் ஒலித்த போது திரையரங்கே அதிர்ந்தது.

”இந்த இரண்டு வார்த்தைகளை எழுதும் போது கற்பனை கூட செய்யவில்லை”… இது உங்க மேஜிக்.. ரகுமானை புகழ்ந்த தனுஷ்!
தனுஷ் மற்றும் ஏ.ஆர்.ரகுமான்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 06 Nov 2024 11:25 AM

ராயன் படத்தில் இருந்து சூப்பர் ஹிட் அடித்த ‘அடங்காத அசுரன்’ பாடலுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானை பாராட்டித் தள்ளியுள்ளார் தனுஷ். தனுஷ் தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி என பலர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷ் இதற்க்கு முன்பு எந்த படத்திலும், நடித்திராத கெட்டப்பான மொட்டை தலையுடன் நடித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் கடந்த 26-ம் தேதி வெளியான நிலையில் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் குறித்து தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராயன் படம் ஒருபுறம் வெற்றிகரமான ஓடிக்கொண்டு இருக்க, தயாரிப்பாளர் சங்கமோ தனுஷ் மீது மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, ” நடிகர் தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார். ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நீண்ட காலங்கள் அவர் படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்த சூழலில் தற்போது மீண்டும் ராயன் படத்தின் மூலம் தனது இயக்குநர் வேலையை தொடங்கியுள்ளார் தனுஷ்.

சிறு வயதிலேயே தனது பெற்றோரை தொலைத்த தனுஷ் கிராமத்தில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாததை உணர்ந்து தனது இரண்டு தம்பிகள் மற்றும் தங்கையுடன் சென்னையை வந்தடைகிறார். அங்கு செல்வராகவனை சந்திக்கும் தனுஷ் அவருடைய உதவியால் வேலை, வீடு என தனது தம்பிகள், தங்கையை பார்த்துக்கொள்கிறார் தனுஷ். சிறு வயதிலேயே பெற்றோரை தொலைத்ததால் தனது தம்பிகள், தங்கைக்கு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கிறார். அவர்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் அவர்களை காக்கும் அரணாக நிக்கிறார் தனுஷ்.

Also read… சிகிச்சைக்காக அமெரிக்க செல்லும் ஷாருக்கான்… என்ன காரணம்?

குடும்பம், பாசம், துரோகம், பழிவாங்கல் என வழக்கமான டெம்ப்ளேட்டுகள் தான் படத்தின் கதை என்றாலும் அதனை சுவாரஸ்யமாக கடத்தியுள்ளார் இயக்குநர் தனுஷ். படத்தில் ’அடங்காத அசுரன்’ பாடலில் வரும் ‘உசுரே நீ தானே நீ தானே’ என்ற வரிகள் ஏ.ஆர்.ரகுமானின் குரலில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த பாடல் காட்சியாக எப்படி இருக்கும் என்பதை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு செம்ம ட்ரீட் கொடுக்கும் வகையில் முக்கியமான இடத்தில் இந்த வரிகள் ஏ.ஆர்.ரகுமானின் குரலில் ஒலித்த போது திரையரங்கே அதிர்ந்தது.

இந்நிலையில் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ராயன் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார், மேலும் தனது பதிவில் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடீயோவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மலேசியாவில் நடத்திய இசை நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ. அந்த வீடியோவில் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 1995ஆம் ஆண்டில் இருந்து தற்போது ரிலீஸ் ஆகியுள்ள ராயன் படம் வரை தான் இசை அமைத்த பாடல்களின் பின்னணி இசைகளை கோர்த்து ஒரு வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து எழுதியுள்ள நடிகர் தனுஷ், “நான், ‘உசுரே நீதானே.. நீ தானே’ என்ற இரண்டு வார்த்தைகளை எழுதும்போது அது இந்த அளவிற்கு ஒரு ஐகானிக் வரிகளாக மாறும் என நினைத்துப் பார்க்கவில்லை. உங்களது மெல்லிசையாலும், குரலாலும் அது மில்லியன் கணக்கான இதயங்களை வென்று ஒரு ஐகானிக் பாடலாகிவிட்டது. உண்மையில் இது மெய் சிலிர்க்க வைக்கிறது ரஹ்மான் சார்…” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

Latest News