பழம்பெரும் நடிகரின் பயோபிக்கில் நடிக்கிறாரா தனுஷ்?
முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோ பிக்கில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளது குறித்த தகவல்கள் வெளியானது. இதனை தொடர்து தற்போது பழம்பெரும் நடிகர் சந்திரபாபுவின் வாழக்கை வரலாற்று படத்திலும் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.
நடிகர் தனுஷ் இசையமைபாளர் இளையராஜாவின் பயோ பிக்கில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முன்னதாகவே வெளியான நிலையில் தற்போது மேலும் ஒரு பயோ பிக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது பிரபல பழம்பெரும் நடிகரின் வாழ்க்கை வரலாறு என்றும் தெரிவிக்கப்படுகின்றது. நடிகர் தனுஷ் தற்போது தனது 52-வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். முன்னதாக இந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை தனுஷின் வுண்டர் பார் நிறுவனமும் டான் பிசர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன், அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்திற்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பது மட்டும் இன்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராகவும் இருக்கிறார்.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தின் மூலம் தனுஷ் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர்கள் ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நீண்ட காலங்கள் தனுஷ் படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்தார்.
Also read… விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? இணையத்தை கலக்கும் தகவல்
இந்த நிலையில் சமீபத்தில் ராயன் படத்தின் மூலம் தனது இயக்குநர் வேலையை தொடங்கினார் தனுஷ். தனது 50-வது படமான அதை இயக்கி நடித்து இருந்தார் தனுஷ். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது தனது 52-வது படமான இட்லி கடையை இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சுற்றி நடைப்பெற்று வருகின்றது. படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைப்பெற்று வருகின்றது.
Also read… Cinema Year Ender: 2024-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய மொழி படங்களின் லிஸ்ட் இதோ!
சமீபத்தில் ‘இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் தனுஷின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த போட்டோவில் தனுஷ் மிகவும் இளமையாக தோற்றமளித்தார். இந்த நிலையில் நடிகர் தனுஷின் அடுத்த படம் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலகி வருகின்றது.
அதன்படி முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோ பிக்கில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளது குறித்த தகவல்கள் வெளியானது. இதனை தொடர்து தற்போது பழம்பெரும் நடிகர் சந்திரபாபுவின் வாழக்கை வரலாற்று படத்திலும் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.