ரஜினிக்கும் வில்லனாகும் பிரபல ஹீரோ? கூலி பட அப்டேட்! - Tamil News | did actor nagarjuna playing Villain Role Rajinis Coolie Movie | TV9 Tamil

ரஜினிக்கும் வில்லனாகும் பிரபல ஹீரோ? கூலி பட அப்டேட்!

Published: 

26 Jul 2024 18:12 PM

Coolie Movie Update: நடிகர் ரஜினி நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ‘கூலி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. தற்போது ஹைதராபாத்தில் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஜினிக்கும் வில்லனாகும் பிரபல ஹீரோ? கூலி பட அப்டேட்!

ரஜினி

Follow Us On

நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் பிரபல ஹீரோ வில்லனாக நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகின்றது. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக லால் சலாம் (கெஸ்ட் ரோல்) படம் வெளியானது. படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக வேட்டையன் படத்தில் கமிட்டானார் ரஜினி. இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜெய் பீம் படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தவர் ஞானவேல் என்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் டைட்டில் டீசரும் நல்ல வரவேற்பையே பெற்றது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்தப் படத்தில் தனது போர்சனை ரஜினி நடித்து முடித்துள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. படம் தற்போது வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தனது 171-வது படத்தில் கமிட்டாகி விறுவிறுப்பாக படத்தின் வேலையில் இறங்கியுள்ளார் ரஜினிகாந்த். நடிகர் ரஜினி நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ‘கூலி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

தற்போது ஹைதராபாத்தில் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் சௌபின் ஷாகிர் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவியது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Also read… OTT Movies: இந்த வீக் எண்ட் என்ன படம் பார்க்கலாம்? ஓடிடி லிஸ்ட் இதோ!

இந்த நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க வைக்க ஷாருக்கான், ரன்வீர் சிங் ஆகியோரிடம் லோகி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கூலி படம் பற்றி புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் நாகார்ஜுனாவை வில்லனாக நடிக்க வைக்க லோகேஷ் திட்டமிட்டிருக்கிறார் என்றும்; அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

பொதுவாக லோகேஷ் கனகாராஜ் படம் என்றாலே படம் LCU கனெக்‌ஷன் இருக்கா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புவது வழக்கம். அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான லியோ படம் அதற்கு முன் வெளியாக விக்ரம் படம் ஆகியவை கனெக்‌ஷனில் உள்ளது வெளிப்படுத்தியது. அந்த படத்தை போல இதுவும் இருக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து எழ தொடங்கிய நிலையில் அதற்கு லோகேஷ் சமீபத்தில் பதிலளித்துள்ளார். அதில் LCU படங்களில் இடம் பெற்ற நடிகர்கள் கூலி படத்தில் இருப்பார்கள் ஆனால் இது LCU படம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version