5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விரைவில் முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல்? வருத்தத்தில் ரசிகர்கள்!

Ethirneechal Serial : 2022 பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் சத்யப்ரியா, வேல ராமமூர்த்தி, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சமூக செயற்பாட்டாளராக ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் இந்த சீரியலிலும் நடித்து வருகிறார்.

விரைவில் முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல்? வருத்தத்தில் ரசிகர்கள்!
எதிர்நீச்சல்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 03 Jun 2024 11:07 AM

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் எதிர்நீச்சல் விரைவில் முடிவுக்கு வருவதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முன்னணி சேனல்கள் அனைத்திலுமே தவறாமல் ஒளிபரப்பாகி வருகின்றன சீரியல்கள். சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் போல அன்பு செலுத்தி வருகிறார்கள் பார்வையாளர்கள். பிரபல சேனல்களில் மதிய நேரங்களில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இல்லத்தரசிகளையும், மாலை பிரைம் டைமிங்கில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து TRP ரேட்டிங் லிஸிட்டில் இடம்பிடித்து வருகின்றன. பல தொலைக்காட்சிகள் பல விதமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. ஆனால் எப்போதும் போட்டி என்னவோ சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் தான், இந்த இரண்டு சேனல்களின் தொடர்களுக்கு மவுசு அதிகம் என்றே கூறலாம்.

சன் டிவியில் நடிகை தேவையானி நடிப்பில் வெளியான கோலங்கள் என்ற சீரியல் பட்டித்தொட்டி எங்கும் மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த சீரியலில் தொல்காப்பியன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் திருச்செல்வம். இவர்தான் கோலங்கள் சீரியலின் இயக்குநரும் கூட. அந்த சீரியலின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் திருச்செல்வம் கடந்த 2022-ம் ஆண்டு எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கத் தொடங்கினார்.

2022 பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் சத்யப்ரியா, வேல ராமமூர்த்தி, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சமூக செயற்பாட்டாளராக ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் இந்த சீரியலிலும் நடித்து வருகிறார்.

Also read… விக்ராந்த் மாஸ்ஸி நடிப்பில் இணையத்தில் கவனம் பெறும் ‘பிளாக்அவுட்’ பட ட்ரெய்லர்!

ஆணாதிக்கம் மிக்க அண்ணன் – தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்பதும், அதை அந்தப் பெண்கள் எதிர்கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் கதைகளம்.

குணசேகரனால் அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள் இப்போது தைரியமாக தங்களது எதிர்காலத்தை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளார்கள். 700க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகிய இந்த தொடர் கதை, வசனம், திரைக்கதை மூலம் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.  இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தில் தொடரின் கிளைமேக்ஸ் என கூறப்படுகிறது. இது தொடர்பான சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது எதிர்நீச்சல் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest News