Vignesh Shivan: அரசு கட்டிடத்தை விலைக்கு கேட்டாரா விக்னேஷ் சிவன்? நடந்தது என்ன?

விக்னேஷ் சிவன் நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே தனது மனைவியான நயன்தாராவுடன் இணைந்து பட தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் விக்னேஷ் சிவன் மேற்கொண்டு வருகிறார்.

Vignesh Shivan: அரசு கட்டிடத்தை விலைக்கு கேட்டாரா விக்னேஷ் சிவன்? நடந்தது என்ன?

அமைச்சரை சந்தித்த விக்னேஷ் சிவன்

Published: 

14 Dec 2024 12:45 PM

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்டதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பற்றி காணலாம். போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். நடிகை நயன்தாராவை ஏழு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவன் படங்கள் இயக்காவிட்டாலும் எப்போதும் பிஸியான மனிதராகவே வலம் வருகிறார்.

அடுத்தக்கட்ட வளர்ச்சி

அடுத்ததாக விக்னேஷ் சிவன் நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே தனது மனைவியான நயன்தாராவுடன் இணைந்து பட தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் விக்னேஷ் சிவன் மேற்கொண்டு வருகிறார். இப்படியான நிலையில் புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இயக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுவும் புதுச்சேரி அமைச்சரை நேரில் சந்தித்து கேட்டதாக வெளியான தகவல் பேசுபொருளாக மாறியது. சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு விக்னேஷ் சிவனை இணையவாசிகள் கிண்டலடித்தனர்.

Also Read: Aavin : ஆவினில் அறிமுகமாகிறது புதிய வகை பால்.. எப்போது தெரியுமா?

ஹோட்டல் பிசினஸ் ஐடியா

அடுத்ததாக ஹோட்டல் பிசினஸில் அடியெடுத்து வைக்க முடிவு எடுத்துள்ள விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் அதற்கான சரியான இடங்களை பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு இரவு 7 மணிக்கு புதுச்சேரிக்கு வருகை தந்த விக்னேஷ் சிவன் நேராக சட்டப்பேரவை வளாகத்திற்கு சென்றார். அங்கு அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சரான லட்சுமி நாராயணனை சந்தித்து ஹோட்டல் ஆரம்பிப்பது பற்றி பேசி உள்ளதாக சொல்லப்படுகிறது.

அப்போது கடற்கரை சாலையில் உள்ள சீகல்ஸ் என்ற ஹோட்டலை விக்னேஷ் சிவன் விளக்கி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் லஷ்மி நாராயணன் அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என்று கூறினார். அப்படி என்றால் ஒப்பந்த அடிப்படையில் ஆவது வாடகைக்கு தருவீர்களா? என கேட்டுள்ளார்.

புதுச்சேரி தான் அடுத்த டார்கெட் 

ஆனால் அங்கு ஏராளமான ஊழியர்கள் ஏற்கனவே பணியாற்றி வரும் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் ஹோட்டலை வழங்க முடியாது என அமைச்சர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் புதுச்சேரி கடற்கரை பகுதிகள் தனியார் வசம் உள்ளது. அதில் ஏதாவது ஒன்று தனது கிடைக்க வழிவகை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.. அதற்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு கடற்கரை பகுதிகளும் 2017 ஆம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டு ஏலத்தின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் தற்போது அதில் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்து விட்டாராம்.

Also Read: Mysskin: சூர்யாவை வைத்து படம் எடுக்க மாட்டேன்.. இயக்குநர் மிஷ்கின் அதிரடி!

ஆனாலும் விடாமல் அமைச்சரிடம் பேசிய விக்னேஷ் சிவன், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்த இடம் கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். இதற்கு புதுச்சேரியின் துறைமுக வளாகத்தில் பொழுதுபோக்கு மையம் ஒன்று 4 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கும் வகையில் கட்டி வைத்துள்ளோம். அதற்கு அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்துடன் ஜிஎஸ்டி சேர்த்து செலுத்தினால் நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என அமைச்சர் லட்சுமி நாராயணன் பதில் அளித்துள்ளார்.

இதன் பின்னர் விக்னேஷ் சிவன் துறைமுக வளாகத்தில் இருக்கும் பொழுதுபோக்கு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்னை சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் இடைத்தரகர்கள் சிலர் அரசு கட்டிடங்கள் விலைக்கு வருகிறது என சினிமா மற்றும் பிறர் துறை சார்ந்த பிரபலமிடம் கூறுவது இந்த குழப்பத்திற்கு காரணம் என நடிகர் பாண்டிய ரவி வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற செயல்களை சில நபர்கள் செய்து தர்ம சங்கடமான சூழலை திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்படுத்த வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும் - உங்களுக்கு தெரியுமா?
பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் சில முக்கிய பழக்கங்கள்!
கிறிஸ்துமஸ் கொண்டாட சிறந்த இடங்கள்!
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தர வேண்டிய அறிவுரைகள்!