நயன்தாராவுடனான கருத்து வேறுபாடு குறித்து த்ரிஷா ஓபன் டாக்!

Trisha about Nayanthara: முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அஜித், விஜய், ரஜினி, கமல், ஆர்யா,சூர்யா என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் திரிஷா. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நாயகியாக கலக்கி வருகின்றார் த்ரிஷா. இதற்கிடையில் த்ரிஷா ஒரு சில தொடர் தோல்வி படங்களில் நடித்திருந்தாலும் அவ்வப்போது மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்து தரமான கம்பேக் கொடுத்து வருகின்றார்.

நயன்தாராவுடனான கருத்து வேறுபாடு குறித்து த்ரிஷா ஓபன் டாக்!

நயன்தாரா, த்ரிஷா

Updated On: 

24 Oct 2024 12:48 PM

நடிகை நயன்தாராவுடன் கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான் என த்ரிஷா பேசியதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. நடிகர்கள் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி என்ற படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரே ஒரு காட்சியில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை த்ரிஷா. அதன் பிறகு இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் நாயகியாக உருவெடுத்தார். அதைத்தொடர்ந்து விக்ரம் உடன் சாமி, விஜய் உடன் கில்லி, மாதவன் உடன் லேசா லேசா, திருப்பாச்சி, சூர்யாவுடன் ஆறு, சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா என தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து தமிழில் தவிர்க்க முடியாத முன்னணி நாயகியாக முன்னேறினார். அதன் பிறகு ரசிகர்களால் சவுத் குயின் என அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் தான் த்ரிஷா.

முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அஜித், விஜய், ரஜினி, கமல், ஆர்யா,சூர்யா என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் திரிஷா.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நாயகியாக கலக்கி வருகின்றார் த்ரிஷா. இதற்கிடையில் த்ரிஷா ஒரு சில தொடர் தோல்வி படங்களில் நடித்திருந்தாலும் அவ்வப்போது மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்து தரமான கம்பேக் கொடுத்து வருகின்றார்.

பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களை ரொம்பவே கவர்ந்த சில கதாபாத்திரங்களில் குந்தவையும் ஒன்று. எனவே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் திரிஷா அந்த வெயிட்டேஜை தாங்குவாரா என ரசிகர்களில் சில கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்விக்கு அவர் தனது நடிப்பால் பதில் சொல்லியிருந்தார். இரண்டு பாகங்களிலுமே அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது.

Also read… சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

த்ரிஷா நடிப்பில் கடைசியாக லியோ படம் வெளியானது. அடுத்ததாக விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களும் வரவிருக்கின்றன. இந்தச் சூழலில் திரிஷா கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதில் தனக்கும் நயன்தாராவுக்கும் ஏற்பட்ட பிரச்னை குறித்து ஓபனாக பேசியிருக்கிறார். அதில், ‘எனக்கும் நயன்தாராவுக்கும் பிரச்னை ஏற்பட்டது என்பது உண்மைதான். அது தொழிலால் வந்தது அல்ல. தனிப்பட்ட முறையில் வந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டோம். இப்போது நட்புடனேயே இருக்கிறோம்’ என்றார். முன்னதாக, குருவி படத்தில் முதலில் நயன்தாரா நடிக்கவிருந்ததாகவும்; அதனை திரிஷா தட்டி பறித்ததால் இருவருக்கும் பிரச்னை உருவானது என்றும் ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!