Did you know: இந்தியாவில் 1000 கோடி ஹிட் கொடுத்த முதல் நடிகை இவரா..? பட்டியலில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் மிஸ்..!
Indian Cinema: ஒரு பெண் நடிகையின் படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் வாராத்திலேயே சாதனை படைத்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால், அப்படியான சாதனையும் இங்கு படைக்கப்பட்டுள்ளது. அந்த நடிகை யார்..? அவரின் படம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகில் பல படங்கள் தற்போது பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி பட்ஜெட்டை கடந்து வருகிறது. ஒரு திரைப்படம் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ய வேண்டுமானால், அதில் நல்ல கதையம்சம், புகழ்பெற்ற நடிகர்கள் என எல்லாருமே இருக்க வேண்டும். 1000 கோடி கிளப்பை பற்றி பேசும் போதெல்லாம், ஒரு புகழ்பெற்ற நடிகரின் படமாக இருக்கும். இருப்பினும், இப்படியான சூழ்நிலை இப்போது இல்லை.
ஒரு பெண் நடிகையின் படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் வாராத்திலேயே சாதனை படைத்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால், அப்படியான சாதனையும் இங்கு படைக்கப்பட்டுள்ளது. அந்த நடிகை யார்..? அவரின் படம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
யார் இந்த நடிகை..?
1000 கோடி மைல்கல்லை எட்டிய நடிகை பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகைதான். அவர் வேறு யாருமல்ல ரம்யா கிருஷ்ணன். சினிமா துறைகளில் பன்முகத் திறமைக்கு பெயர் பெற்றவர். இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் இருவர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலக வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்து பல விருதுகளை வென்றுள்ளார்.
தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் படையப்பா படத்தில் நீலமாரி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய புகழை பெற்றார். அதன்பிறகு, எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிளாக்பஸ்டர் படமான பாகுபலியில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்து தனது திரையுலக வாழ்க்கையில் புதிய உயரத்தை தொட்டார். தனது 45 வயதில் ரம்யா கிருஷ்ணன் ராஜமௌலியின் பாகுபலி படத்தில் நடித்து பல்வேறு புகழை அடைந்தார்.மேலும், இப்படம் பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தது மட்டுமின்றி, 1000 கோடி ரூபாயை தாண்டிய முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றது.
தமிழில் வெற்றிபெற்ற கே.எஸ்.ரவிக்குமார் – ரம்யா கிருஷ்ணன் கூட்டணி:
பிரபல தமிழ் திரைப்ப இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான ‘படையப்பா’, ‘பாட்டாளி’ ஆகிய படங்களில் ரம்யா கிருஷ்ணன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த இரண்டு படங்களிலும் ரம்யா கிருஷ்ணனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து, எஸ்.கே.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘பஞ்சந்திரம்’ படத்திலும் ரம்யா கிருஷ்ணன் ஒரு குறிப்பிட்ட கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்தார்.
ALSO READ: ரெடியான மணிகண்டனின் அடுத்த படம்.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
1984 ஆம் ஆண்டு ஒரு மலையாளப் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். முன்னதாக, ரம்யா கிருஷ்ணன் ஒரு தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தனது தமிழ், தெலுங்கு படங்கள் ஓடவில்லை. ஒரு காலத்தில் தன்னை தோல்வி நடிகை என்றே குறிப்பிட்டனர் என்று தெரிவித்தார். ஆனால், பாகுபலி படத்தில் சிவகாமியாக நடித்ததன் மூலம், மீண்டும் சினிமா துறையில் தனது முத்திரை பதித்தார். ரம்யா கிருஷ்ணனுக்கு முன், ‘பாகுபலி’ படத்தில் சிவகாமி கதாபாத்திரத்திற்கு ஸ்ரீதேவியை அணுகினர். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதேவிக்கு தேவையான நேரம் இல்லாததால், ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
பாகுபலி படத்திற்கு பிறகு தற்போது ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ.98 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர். ஒரு படத்திற்கு 3 முதல் 4 கோடி வரை வசூலிக்கிறார்.