ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான சசிகுமாருக்கு ஹேப்பி பர்த்டே
இயக்குநரகா மட்டும் இன்றி நடிகராகவும் இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரின் பல வசனங்கள் நட்பு, காதல், பிரிவு என எல்லா சூழலுக்கும் பொருந்தும் விதமாக இணையத்தில் தற்போதும் பரவி வருகின்றது.
மதுரையில் பிறந்து வளர்ந்தவரான சசிகுமார் இயக்குநர் பாலாவின் சேது படம், அமீரின் மெளனம் பேசியதே மற்றும் ராம் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். அதே போல சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார். இயக்குநர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பலமுகங்களைக் கொண்டவர் சசிக்குமார். முதல் படமான சுப்ரமணியபுரம் படத்திலேயே மாஸ் வெற்றி, தரமான காதல் கதையை சொல்லி தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர். காதல் என்றால் இப்படி தான் உயிரை கொடுத்து உதவ வேண்டும் என்கிற மனப்பான்மையை நமக்கு மீண்டும் நியாபகம் செய்தவர் சசிகுமார் என்றே சொல்லலாம். இவர் இயக்கிய படங்கள் சிலதே என்றாலும், அவை ஒவ்வொன்றிலும் பல வகையான ஆழ்ந்த கருத்துக்களை தவறாமல் வைத்து மக்களை தன் பக்கம் கவர்ந்திருந்தார்.
இயக்குநரகா மட்டும் இன்றி நடிகராகவும் இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரின் பல வசனங்கள் நட்பு, காதல், பிரிவு என எல்லா சூழலுக்கும் பொருந்தும் விதமாக இணையத்தில் தற்போதும் பரவி வருகின்றது.
2008-ல் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே பெருமை தேடித்தந்த சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகராக அறிமுகமானார். சசிகுமாரின் அறிமுகப் படமே ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 1980-களின் மதுரையை அப்படியே திரையில் மறு உயிர் கொடுத்திருந்தார். அதோடு அரசியல் அதிகாரப் போட்டி, நட்பு, காதல், குடும்ப கெளரவம், அதுசார்ந்த வன்மம், துரோகம் ஆகியவற்றை வைத்து மனத்தைப் பதைபதைக்கச் செய்யும் கதையைக் கூறியிருந்தார்.
தமிழ் சினிமாவில் தலைசிறந்த படங்களில் ஒன்று என்று கொண்டாடப்பட்டது ‘சுப்பிரமணியபுரம்’. மிகப் பெரிய வணிக வெற்றியையும் ட்ரெண்ட் செட்டர் அந்தஸ்தையும் பெற்றது. அதன் பிறகு பல படங்கள் மதுரையைக் கதைக்களமாக வைத்து உருவாக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது.
அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த ‘பசங்க’ சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதையும் சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருதையும் வென்றது. அதே ஆண்டில் சசிகுமார் தயாரித்த மற்றொரு படம் வெளியாகியது. அதுதான் ‘நாடோடிகள்’. சமுத்திரக்கனி இயக்கிய இந்தப் படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்திருந்தார். நண்பனின் காதலுக்காக இப்படி தான் உயிரை கொடுத்து உதவ வேண்டும் என்கிற மனப்பான்மையை நமக்கு மீண்டும் நியாபகபடுத்தியது சசிகுமாரின் நடிப்பு.
Also read… ரஜினி, அஜித், மோகன்லால், மம்முட்டியிடம் உள்ள பொதுவான குணங்கள் – மஞ்சு வாரியர் பகிர்ந்த தகவல்
நட்பின் மேன்மையைக் கலகலப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் சித்தரித்த இந்தப் படம் தமிழகத்தின் அனைத்து சென்டர்களிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது, பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்தப் படத்தின் வெற்றி சசிகுமாரை ஒரு நாயகனாக நிலைநிறுத்தியது. அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் பெரிதும் பேசப்பட்ட படம் அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனின் ‘சுந்தரபாண்டியன்’ படத்தைத் தயாரித்து அதில் நாயகனாகவும் நடித்தார். இந்தப்ப் படத்தில் சசிகுமார் பேசிய ‘குத்துனது நண்பனா இருந்தா செத்தா கூட சொல்லக்கூடது’ என்ற வசனம் இன்றும் இணையத்தில் ட்ரெண்டிங்கிள் உள்ளது. அடுத்ததாக முத்தையா இயக்குநராக அறிமுகமான ‘குட்டிப்புலி’ திரைப்படம் தாய்ப்பாசத்தையும் ஆண் வீரத்தையும் முன்னிலைப்படுத்தி வெற்றி பெற்றது.
Also read… Meiyazhagan Movie Review: ’மெய்யழகன்’… நிஜமாவே அவ்வளவு அழகானவன் – விமர்சனம் இதோ!
தொடர்ந்து வெற்றிவேல்’, ‘கிடாரி’, பேட்ட, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘கொம்பு வெச்ச சிங்கமடா’, ‘ராஜவம்சம்’, ‘பரமகுரு’, ‘எம்ஜிஆர்மகன்’ எனப் பல படங்களில் நாயகனாக நடித்து தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் சசிகுமார். ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு சசிகுமார் நடிப்பில் அனைத்து சென்டர்களிலும் நல்ல வரவேற்பை பெற்ற படம் அயோத்தி. சசிகுமாருக்கு நல்ல ஒரு கம் பேக் படமாக அமைந்த இப்படம் சுப்ரமணியபுரம், நாடோடிகள் வரிசையில் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு படமாக அமைந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் இவரது நடிப்பில் திரையரங்கில் வெளியான நந்தன் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
காதல், சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்ஷன் என அனைத்துக்கும் பொருத்தமான நடிப்பை வழங்கும் திறமைபெற்றவர் தொடக்கத்தில் தான் தயாரிக்கும் படங்களில் மட்டுமே நடித்துவந்தவர் மற்ற படங்களில் நடிப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் பன்முகதன்மை கொண்ட சசிகுமாருக்கு ரசிகர்கள் சார்பாக ஹேப்பி பர்த்டே…