5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் அப்டேட்

இயக்குநர் முருகதாஸ் தற்போது சல்மான் கானின் சிக்கந்தர் படத்தை இயக்குவதில் பிசியாக இருக்கிறார். இந்தப் படம் வருகின்ற ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு இருப்பதால் இந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் SK23 படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் அப்டேட்
சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத்Image Credit source: twitter
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Dec 2024 07:17 AM

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK23  படத்தின் டைட்டில் டீசர் எப்போது வெளியாக உள்ளது என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் சிவகார்த்தியேகன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் அமரன். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இதில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவரது மனைவி இந்து ரெபேக வர்கீஷாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார்.

படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படம் என்பதால் அதனை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கூட்டணி வைத்தார் சிவகார்த்திகேயன்.

SK23 என தற்காலிகமாக அழைக்கப்படும் அந்தப் அப்டத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் வரை முடிவடைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் 10 சதவீத படப்பிடிப்பு முடிந்தவுடன் பொங்கலுக்கு படத்தில் தலைப்புடன் டீசரை வெளியிட படக்குழு திட்டம்மிட்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

Also read… நான் விக்னேஷ் சிவனை திருமணமே செய்திருக்க கூடாது… வைரலாகும் நயன்தாரா பேச்சு

இயக்குநர் முருகதாஸ் தற்போது சல்மான் கானின் சிக்கந்தர் படத்தை இயக்குவதில் பிசியாக இருக்கிறார். இந்தப் படம் வருகின்ற ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு இருப்பதால் இந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் SK23 படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

Also read… Cinema Year Ender: 2024-ல் வசூல் சாதனை படைத்த படங்களை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

அதே வேலையில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்திற்காக இயக்குநர் சுதா கொங்குரா உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல நடிகர் ஜெயம் ரவி கமிட்டாகியுள்ளார். மேலும் அதர்வா இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்டிஹ்ல் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் அந்தப் படத்தின் பணிகளில் தற்போது மும்முரமாக இறங்கியுள்ளதாகவும் விரைவில் மீண்டும் SK23 படத்தின் படப்பிடிப்பை சிவகார்த்திகேயன் முடித்துவிட உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். பொங்கலுக்கும் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News