Cinema Rewind: மலையாள சினிமா மக்களின் ரசனையை மாற்றியுள்ளது – ஏ.ஆர்.முருகதாஸ் - Tamil News | Director AR Murugadoss talks about malayalam cinema | TV9 Tamil

Cinema Rewind: மலையாள சினிமா மக்களின் ரசனையை மாற்றியுள்ளது – ஏ.ஆர்.முருகதாஸ்

Published: 

06 Aug 2024 14:32 PM

Director AR Murugadoss: தீனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ’ரமணா’. ஒரு மாஸ் நடிகரின் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தையும் உருவாக்கியது ‘ரமணா’. அதோடு மிகப்பெரிய க்ளாஸிக் சினிமாவாக விஜயகாந்த்துக்கு அமைந்தது ரமணா. ரமணா படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் கஜினி படம் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார் முருகதாஸ். தமிழில் சக்கைப்போடு போட்ட கஜினி படத்தை பின்னர் இந்தியில் ஆமிர்கானை வைத்து ரீமேக் செய்து அங்கும் வெற்றிவாகை சூடினார்.

Cinema Rewind: மலையாள சினிமா மக்களின் ரசனையை மாற்றியுள்ளது - ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ்

Follow Us On

இந்திய சினிமா வரலாற்றில் மலையாள சினிமா மக்களின் ரசனையை மாற்றியுள்ளதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகின் ஸ்டார் இயக்குநர் என இவரை சொல்லலாம். சமூகப்பொறுப்புகளை கமர்சியல் கதையில் நுழைத்து வணிக ரீதியாக படங்களை வெற்றி பெற வைப்பதில் இவர் கில்லாடி. அவர்தான் இயக்குநர் ஏ.ஆர்.முருககாஸ். இயக்குநர் பிரவீன் காந்த்திடம் ரட்சகன் திரைப்படத்திலும், எஸ்.ஜெ.சூர்யாவிடம் குஷி திரைப்படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதில் கிடைத்த அனுபவத்தால் 2001ல் அஜித் நடிப்பில் ’தீனா’ திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார் முருகதாஸ். தனது படங்கள் அனைத்திலும் சமூக பிரச்சனைகளை பேசி, மாஸ் ஹிட் டைரக்டர் என பெயர் வாங்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். பிறகு எஸ்.ஜே.சூர்யா பரிந்துரை செய்ததன் பேரில் அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கினார்.

முதல் படமே செம ஹிட் ஆனது. அஜித்திற்கும் மிகப் பெரிய பிரேக் கொடுத்ததுடன், ரசிகர்கள் கொண்டாடும் தல என்ற பட்டத்தையும் தீனா படம் தான் பெற்றுக் கொடுத்தது. படத்தின் ஒன்லைன். ஆக்‌ஷனோடு சுவாராஸ்யமான காதல் காட்சிகள், உணர்ச்சிமிகுந்த செண்டிமெண்ட் காட்சிகள் என அறிமுக படத்திலேயே ஆடியன்ஸை கவனிக்க வைத்தார் முருகதாஸ்.

Also read… Thangalaan Movie : தங்கலான் ஆடியோ ரிலீஸ் விழா.. பார்வதி முதல் பா.ரஞ்சித் வரை பேசிய முக்கிய விஷயங்கள்!

தீனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ’ரமணா’. ஒரு மாஸ் நடிகரின் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தையும் உருவாக்கியது ‘ரமணா’. அதோடு மிகப்பெரிய க்ளாஸிக் சினிமாவாக விஜயகாந்த்துக்கு அமைந்தது ரமணா. ரமணா படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் கஜினி படம் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார் முருகதாஸ். தமிழில் சக்கைப்போடு போட்ட கஜினி படத்தை பின்னர் இந்தியில் ஆமிர்கானை வைத்து ரீமேக் செய்து அங்கும் வெற்றிவாகை சூடினார்.

கஜினியின் பெரும் வெற்றியால் தமிழ், தெலுங்கு தாண்டி கஜினி ஹிந்தியிலும் அமீர்கானை வைத்து இயக்கி வெற்றி பெற்றார் முருகதாஸ். சஞ்சய் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவிற்கு அவரது திரை வாழ்வின் திருப்புமுனை சினிமாவாக அமைந்தது முருகதாஸின் ‘கஜினி’. பிறகு தமிழில் ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்கார், தர்பார் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார். தனது படங்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு சமூக பிரச்சனையை பற்றி பேசுவது முருகதாசின் ஸ்டைல்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனின் 23-வது படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்திய சினிமாவில் மலையாள சினிமா மக்களின் ரசனையை மாற்றியுள்ளது என்று முருகதாஸ் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் பேசியதாவது, ஓடிடி வருகை வந்த பிறகு எல்லா மொழி படங்களையும் வீட்டில் இருந்தே பார்க்க முடிகிறது. இதனால் சினிமா ரசிகர்களின் ரசனை மாறியுள்ளது. இந்த மாற்றத்திற்கு மலையாள சினிமாவின் பங்கு அதிகமாக உள்ளது என்றும் இயக்குநர் ஏ. ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
Exit mobile version