தோற்றத்தை வைத்து எடைபோடாதீங்க… உருவ கேலி செய்தவருக்கு அட்லியின் நெத்தியடி பதில்
நடிகர் விஜய்க்கு தொடர்ந்து 3 படங்களை ஹிட் கொடுத்த அட்லிக்கு அடுத்த ஆஃபர் பாலிவுட்டில் இருந்து வந்தது. அதன்படி நடிகர் ஷாருக்கான் உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அட்லியை தேடி வந்தது.
சமீபத்தில் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் அட்லியிடம் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அவரது உருவத்தை கேலி செய்யும் விதமாக ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு அட்லி கொடுத்த மாஸ் பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கோலிவுட் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று கொண்டாட்ப்படுபவர் இயக்குநர் ஷங்கர். இவரது உதவி இயக்குநர்கள் பலர் தற்போது முன்னணி இயக்குநர்களாக சினிமாவில் கலக்கிக்கொண்டுள்ளனர். அந்த வரிசையில் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் அட்லி. இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரண்டு படங்களிலும் அட்லி உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் இயக்குநராக தடம் பதித்தார் அட்லி.
நடிகர்கள் ஆர்யா, ஜெய், நஸ்ரியா, நயன்தாரா, சந்தானம், சத்யராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தது. இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார். காதல் தோல்விக்குப் பின்பு அமையும் வாழ்க்கையும் நல்லா தான் இருக்கும் என்பதை கருவாகக் கொண்டு இந்தப் படத்தை எடுத்திருப்பார் இயக்குநர் அட்லி.
இந்தப் படத்திற்கு முன்பு நடிப்பிற்கு சிறிது காலம் நடிக்காமல் இருந்த நயன்தாராவிற்கு ராஜா ராணி படம் ஒரு கம்பேக் என்றே ரசிகர்கள் கூறிவந்தனர். முதல் படமே அட்லிக்கு சூப்பர் ஹிட் கொடுத்ததைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜயுடன் கூட்டணி வைத்தார் இயக்குநர் அட்லி. இவர்களது கூட்டணியில் உருவான தெறி படமும் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைய அடுத்தடுத்து மெர்சல், பிகில் என இரண்டு படங்களையும் விஜயை வைத்தே எடுத்தார் இயக்குநர் அட்லி. இதுகுறித்து இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டலடித்தபோது ‘என் அண்ணனுக்கு நான் தான்டா செய்வேன்’ என்று அப்போதும் மாஸ் ரிப்ளை கொடுத்தார் அட்லி.
Also read… கிறிஸ்துவ முறைப்படி கல்யாணம்…கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் போட்டோஸ்
நடிகர் விஜய்க்கு தொடர்ந்து 3 படங்களை ஹிட் கொடுத்த அட்லிக்கு அடுத்த ஆஃபர் பாலிவுட்டில் இருந்து வந்தது. அதன்படி நடிகர் ஷாருக்கான் உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அட்லியை தேடி வந்தது. அதனை தொடர்ந்து இயக்குநர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கினார் அட்லி.
பாலிவுட் திரையுலகையே மிரள வைக்கும் அளவிற்கு படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் 1000 கோடியை தாண்டியது. இந்தப் படத்தில் தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி என பல தமிழ் நடிகர்களை நடிக்க வைத்திருப்பார் இயக்குநர் அட்லி. இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் திரையுலகிலேயே கவணம் செலுத்த தொடங்கிவிட்டார் அட்லி.
இந்த நிலையில் தற்போது தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் என்ற படத்தை தயாரித்துள்ளார் அட்லி. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் தற்போது படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்தியில் பிரபல டிவி நிகழ்ச்சியான கபில் சர்மா நிகழ்ச்சிக்கு அட்லி மற்றும் பேபி ஜான் படக்குழுவினர் சென்றுள்ளனர்.
Kapil Sharma subtly insults Atlee’s looks?
Atlee responds like a boss: Don’t judge by appearance, judge by the heart.#Atlee #KapilSharma pic.twitter.com/oSzU0pRDS4
— Surajit (@surajit_ghosh2) December 15, 2024
அங்கு அட்லியின் தோற்றம் குறித்து கபில் சர்மா கிண்டலடிக்கும் விதமாக கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அட்லி, ”தோற்றத்தை வைத்து எடைபோடாதீங்க. மனது எப்படி இருக்கிறது என பார்த்து எடைபோடுங்க” என்று மாஸாக பதிலளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.