5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கவினின் ‘ஸ்டார்’ படத்தின் ரியல் பாக்ஸ் ஆபிஸ் எவ்ளோ தெரியுமா? இயக்குநர் சொன்ன உண்மை!

Star Movie Collection: ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால், இப்படத்துக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களில் நல்ல ஓபனிங் இருந்தது. மேலும் முதல் நாள் முதல் காட்சி அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டன. கவினின் முந்தைய டாடா படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் ஸ்டார் படமும் தற்போது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

கவினின் ‘ஸ்டார்’ படத்தின் ரியல் பாக்ஸ் ஆபிஸ் எவ்ளோ தெரியுமா? இயக்குநர் சொன்ன உண்மை!
’ஸ்டார்’ படம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jul 2024 16:10 PM

நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ படத்தின் உணமையான பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எவ்வலவு என்பதை இயக்குநர் இளன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சாதாரண மனிதனின் அசாதாரணமான கனவு பற்றிய இப்படத்தை அழகாக எடுத்துக்காட்டி இருந்தார் இயக்குனர் இளன். சிறு வயதில் இருந்தே சினிமாவில் நாயகனாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் கவின். அவருடைய தந்தையின் ஆசையும் அதுவே. பள்ளி, கல்லூரி என எங்கு சென்றாலும் நடிப்பின் மீது மட்டுமே ஆர்வமாக இருக்கிறார். திடீரென்று விபத்து ஏற்பட, கவினின் முகத்தில் காயம் ஏற்படுகிறது. இதனால் அவருடைய சினிமா வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் கதைக்களமாக உள்ளது. கவின் நடிப்பில் கடந்த மே 10-ம் தேதி ’ஸ்டார்’ படம் திரையரங்குகளில் வெளியானது. ’பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

சீரியல்கள் மற்றும்  பிக்பாஸ்  நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர்  நடிகர் கவின். லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து டாடா திரைப்படத்தில் கவின் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கினார். இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ், ‘முதலும் நீ முடிவு நீ’ ஹரிஷ் மற்றும் கே.பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால், இப்படத்துக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களில் நல்ல ஓபனிங் இருந்தது. மேலும் முதல் நாள் முதல் காட்சி அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டன. கவினின் முந்தைய டாடா படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் ஸ்டார் படமும் தற்போது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

Also read… OTT Movies: ஜூலை மாதம் ஓடிடியில் வரிசைக் கட்டும் படங்கள்!

இப்படத்தில் கவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டினர்.  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ளது. ஸ்டார் படத்திற்கு சென்சார் போர்டு “யு” சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதன்படி படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

சமீபத்தில் இயக்குநர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டார் படத்தின் இயக்குநர் இளன் ஸ்டார் திரைப்படம் நல்ல வசூலை பெற்றது என்றும் 26 கோடி வரை வசூல் செய்ததாக கூறியுள்ளார். 12 கோடி ரூபாய் முதலீட்டில் உருவான அந்த படம் 26 கோடி ரூபாய் வசூல் செய்தது தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது என்றும் கூறினார்.