தளபதி 69 உறுதி… இயக்குநர் எச்.வினோத் கொடுத்த சூப்பர் அப்டேட்! - Tamil News | Director H Vinoth confirms his collaboration with Vijay in thalapathy 69 movie | TV9 Tamil

தளபதி 69 உறுதி… இயக்குநர் எச்.வினோத் கொடுத்த சூப்பர் அப்டேட்!

Thalapathy 69 Movie Update: கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளன. நாளை இந்தப் படத்தில் ட்ரெய்லர் வெளியாகும் என்று நேற்று சுதந்திர தினம் அன்று நடிகர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் அறிவித்திருந்தார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தளபதி 69 உறுதி... இயக்குநர் எச்.வினோத் கொடுத்த சூப்பர் அப்டேட்!

இயக்குநர் எச்.வினோத், விஜய்

Updated On: 

16 Aug 2024 08:27 AM

தளபதி 69 படத்தை தான் இயக்க உள்ளது குறித்து இயக்குநர் எச்.வினோத் கொடுத்த அப்டேட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்துக்கு இசையமைத்த யுவன், அதன் பின்னர் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்திருக்கிறார். சென்னை, ரஷ்யா, திருவனந்தபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகியிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருவதால் இந்தப் படமும் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள்.

கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளன. நாளை இந்தப் படத்தில் ட்ரெய்லர் வெளியாகும் என்று நேற்று சுதந்திர தினம் அன்று நடிகர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் அறிவித்திருந்தார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Also read… பிக்பாஸ் தமிழ் சீசன் 8: முதல் போட்டியாளராக களமிறங்க போவது இவரா?

கூடுதலாக விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக இயக்குநர் எச்.வினோத் பேசியது அமைந்துள்ளது. சமீபத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சியின் விருது விழா சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட இயக்குநர் எச். வினோத் தளபதி 69 படம் குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளார். அதன்படி ”அஜிதுக்கு ஒரு இயக்குநர் பிடித்து விட்டால் தொடர்ந்து அவருடன் படங்களில் பணியாற்றுவார். நடிகர் விஜய் வைத்து நான் இயக்கவிருக்கும் புதிய படம் அனைத்து தரப்பு மக்களையும், குழந்தைகளையும் இளைஞர்களையும் கவரும் விதமாக இருக்கும்.” என்றார். இதன் மூலம் தளபதி 69 படத்தை அவர் இயக்க உள்ளது உறுதியாகியுள்ளது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!