5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பாலிவுட் நடிகருடன் இணையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்?

Director Lokesh Kanagaraj: கூலி படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் தொடங்கும் என முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பதால் படம் கைவிடப்பட்டதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் அமைந்தது. அந்த வகையில் லோகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதில், கூலி படத்திற்காக ரஜினியின் லுக் டெஸ்ட் நடைபெற்றுள்ளது. மேலும் புது அப்டேட்டாக படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

பாலிவுட் நடிகருடன் இணையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்?
லோகேஷ் கனகராஜ்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Aug 2024 13:00 PM

பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர் கானை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். மாநகரம் படத்தில் துவங்கிய இவரது பயணம் தொடர்ந்து கைதி, மாஸ்டர், லியோ என பட்டையை கிளப்பி வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜயின் லியோ படத்தை தொடர்ந்து தற்போது ரஜினியுடன் கூலி படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக லோகேஷ் கனகாராஜ் படம் என்றாலே படம் LCU கனெக்‌ஷன் இருக்கா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புவது வழக்கம். அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான லியோ படம் அதற்கு முன் வெளியாக விக்ரம் படம் ஆகியவை கனெக்‌ஷனில் உள்ளது வெளிப்படுத்தியது.

அந்த படத்தை போல இதுவும் இருக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து எழ தொடங்கிய நிலையில் தற்போது அதற்கு லோகேஷ் பதிலளித்துள்ளார். அதில் LCU படங்களில் இடம் பெற்ற நடிகர்கள் கூலி படத்தில் இருப்பார்கள் ஆனால் இது LCU படம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கூலி படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் தொடங்கும் என முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பதால் படம் கைவிடப்பட்டதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் அமைந்தது. அந்த வகையில் லோகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதில், கூலி படத்திற்காக ரஜினியின் லுக் டெஸ்ட் நடைபெற்றுள்ளது. மேலும் புது அப்டேட்டாக படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

Also read… ”வேட்டையாடவே வெறியோட சுத்துறான்”… வேட்டையன் ரிலீஸ் தேதி இதோ

கூலி படத்தின் ஷூட்டிங் அடுத்தடுத்து சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. கூலி படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி நடிக்க உள்ள கைதி 2 படத்தை இயக்க உள்ளதாக முன்னதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்போது ஹிந்தி நடிகர் அமீர் கான் உடன் அடுத்த ப்ரொஜெக்ட்டுக்காக பேச்சுவார்த்தையில் இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. மைத்ரி மூவிஸ் நிறுவனம் தான் அந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய படமாக இந்த படத்தை எடுக்க இருக்கிறார்கள். பேச்சுவார்த்தையில் படம் உறுதியானால் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

Latest News