சௌபின் சாகிருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன லோகேஷ்

கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர் உள்ளிட்டவர்களின் கேரக்டர் போஸ்டர்களையும் அடுத்தடுத்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

சௌபின் சாகிருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன லோகேஷ்

சௌபின், லோகேஷ்

Published: 

12 Oct 2024 17:03 PM

மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் சௌபின் சாகிர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் சௌபின் சாகிருக்கு லோகேஷ் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். கேரளாவின் மஞ்சும்மல் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த நிலையில், அவர்களில் ஒருவன், டெவில்ஸ் கிச்சன் என்கிற 900 அடிகள் கொண்டதாகக் கருதப்படும் மலைக்குகைக்குள் விழுந்துவிட, உடன் வந்த நண்பர்கள் போராடி அவனை மீட்ட உண்மைக் கதையைத் தழுவி மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டது. இயக்குநர் சிதம்பரம் படத்தை இயக்க, சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி உள்பட பலர் நடித்திருந்தனர். சௌபின் சாகிர் தனது பறவா தயாரிப்பு நிறுவனம் சார்பில் தனது நண்பர்களுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.

அபாயகரமான டெவில்ஸ் கிச்சன் குகை பகுதியில் கமல் தனது குணா படத்தை எடுத்த பிறகே அந்தக் குகை குறித்து வெளியுலகுக்கு தெரிய வந்தது. அன்று முதல் அக்குகை, குணா குகை என்று அழைக்கப்படுகிறது. குணாவில் இடம்பெறும், கண்மணி அன்போட… பாடல் காட்சி அங்கு வைத்துதான் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்து குணா குகைக்கு சென்றவர்கள்தான் மஞ்சும்மல் பாய்ஸ். இந்த நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ்.

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். தமிழ், தெலுங்கு , மலையாளம் என எல்லா மொழிகளிலும் சக்கை போடு போட்ட இப்படம் 200 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. குணா படத்தின் கண்மணி அன்போடு… பாடலோடுதான் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் டைட்டில் தொடங்கும். குழிக்குள் விழுந்த நண்பனை மேலே மீட்டு வருகையில், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்ற கமலின் குரல் ஒலிக்கும். குழிக்குள் விழுந்தவன் பிழைப்பானா, அவனை காப்பாற்ற முடியுமா என்று சீட்டின் நுனியில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு, குழிக்குள் விழுந்தவனை நண்பர்கள் மீட்கும் தருணம் உணர்ச்சிகரமானது. அந்த நேரத்தில் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்ற பாடல்வரி ஒலித்து திரையரங்கிள் உள்ள ரசிகர்களின் உணர்ச்சியை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

அந்த படத்திற்கு பிறகு சமூக வலைதளத்தில் அந்த பாடல் நண்பர்களுக்கான ஆந்தமாக மாறியது. அனைவரும் தங்களது நணபர்களுக்கு அந்த பாடலை டெடிகேட் செய்வது, ரீல்ஸ் போடுவது என சமூக வலைதளத்தின் உச்சத்திற்கு அந்த பாடல் சென்றது. இந்தப் படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களுக்கு அரியப்படும் நடிகராக மாறினார் சௌபின். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

Also read… Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் கப்பு முக்கியம்னு பெட்டுக்கு சண்டை… பஞ்சாயத்தை இன்னைக்கு பேசி முடிச்சுடலாம் – விஜய் சேதுபதி

தனது 171-வது படத்தில் கமிட்டாகி விறுவிறுப்பாக படத்தின் வேலையில் இறங்கியுள்ளார் ரஜினிகாந்த். நடிகர் ரஜினி நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ‘கூலி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக படத்தில் நடிக்கும் நடிகர்களின் அறிமுக போஸ்டர்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டது.

Also read… ’மெய்யழகன்’ படத்தின் மூன்று வார வசூல் எவ்வளவு தெரியுமா?

அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர் உள்ளிட்டவர்களின் கேரக்டர் போஸ்டர்களையும் அடுத்தடுத்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் சௌபின் சாகிருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “உங்களுடன் கூலி படத்தில் பணி புரிவது ஒரு அற்புதமான அனுபவம் சௌபின் சாகிர் சார். உங்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!