TVK Vijay: விஜய்க்கு ஆளக்கூடிய தகுதி வந்துவிட்டது.. இயக்குநர் பிரவீன் காந்தி புகழாரம்!
Director Praveen Gandhi: கடவுளை முன்னிறுத்தாமல் விஜய் செயல்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியடைய செய்த விஷயமாகும். அவர் தனது உரையில் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்து மட்டும் மாறுபடுகிறோம். கடவுளை வணங்குவது அவரவர் தனிப்பட்ட விஷயமாகும் என தெரிவித்தார். ஆனால் பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசியுள்ளார்.இந்து மதத்தில் மட்டும் தான் பெண்களை தெய்வமாக வணங்குகிறோம். நதிகளுக்கு பெண்கள் பெயர் சூட்டி அழகு பார்க்கிறோம்.
தமிழக வெற்றிக் கழகம்: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும் இருந்து விஜயின் ரசிகர்களும் தொண்டர்களும் வருகை தந்திருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் கட்சி தொடங்குவதாக விஜய் அறிவித்தபோது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அதேசமயம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி அறிமுக நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கட்சியின் முதல் மாநில மாநாடு குறித்த அறிவிப்பு வெளியானது. ஒரு மாதத்துக்கு முன்னால் இருந்தே போஸ்டர், சுவர் விளம்பரம், பேனர்கள் என திரும்பும் திசையெங்கும் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அனல் பறந்த மாநாடு
மாநாடு நடைபெறும் அன்று காலை 6 மணிக்கு தொண்டர்கள் வரத் தொடங்கினர். மாலை 4 மணிக்கு தான் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகாலை முதலில் கூட்டம் கூட்டமாக தமிழக வெற்றி கழக தொண்டர்கள் படை எடுத்ததால் ஒட்டுமொத்த மீடியாவின் கவனமும் விக்கிரவாண்டி நோக்கி இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் விஜயின் முதல் அரசியல் பேச்சுக்காக காத்திருந்தனர். எதிர்பார்ப்புக்கு ஏற்றது போலவே தனது முதல் அரசியல் பேச்சில் தெளிவாக கருத்துக்களை எடுத்துரைத்தார். பாஜகவை தனது கொள்கை ரீதியாக எதிரி என்றும், திமுகவை அரசியல் ரீதியாக எதிரி என்றும் பெயர் குறிப்பிடாமல் அறிவித்தார். இதனை தொடர்ந்து பாஜக மற்றும் திமுக முன்னணி நிர்வாகிகள் அனைவரும் விஜய்யை சரமாரியாக விமர்சித்தனர்
பிரவீன் காந்தி புகழாரம்
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் பிரவீன் காந்தியிடன், தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “விஜய் தனியாளாக விக்கிரவாண்டியில் ருத்ர தாண்டவமாடி விட்டார் என சொல்லலாம். அதில் என்றும் மாற்றுக் கருத்து கிடையாது.மாநாடு நடந்த வி.சாலை இனிமேல் விஜய் சாலை என அழைக்கப்படும். விஜய்யை பொறுத்தவரை அவர் ரொம்ப அமைதியானவர், எது என்றாலும் ஒதுங்கி போவார் என எதிர்பார்த்தார்கள். அவருக்கு முன்னாடி வைக்கப்பட்ட பெரிய கேள்வி என்னவென்றால் அரசியலில் யார் எதிரி என்பது தான்?. ஆனால் மாநாடு நடைபெற்ற அன்று மாலை 4 மணி வரை விஜய் மேல் இருந்த பார்வை என்பது வேறு. 6 மணிக்கு மேல் நடந்தது வேறு. விஜய்க்கு ஆளப்போகும் தகுதியானது வந்து விட்டது. அரசியலில் யாரை எதிர்க்க வேண்டும்? எதற்காக எதிர்க்க வேண்டும்? என தெரிவித்து விட்டார்.
Also Read:Bank Jobs: டிகிரி போதும்.. மாதம் ரூ.80,000 சம்பளம்… வங்கியில் சூப்பரான வேலை!
இங்கு யாரும் தனிப்பட்ட எதிரிகள் கிடையாது. ஆனால் அரசியல் என வந்துவிட்டால் இங்கு எதிரியாக பார்க்கிறார்கள். ஆட்சி நாற்காலியில் திமுக, இல்லாவிட்டால் அதிமுகவை உட்கார வைப்போம். 4வது ஒருவர் வந்தால் உட்கார வைக்க மாட்டோம் என சொல்வது எவ்வகை நியாயம்?அரசியல் என்பது மக்கள் சேவை என்னும்போது இங்கு ஏன் மற்றவர்களை எதிரியாக பார்க்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது. அரசியலுக்கு படித்தவர்கள் வர வேண்டும். மற்றவர்களையும் அரசியலில் இயங்க அழைக்க வேண்டும். மக்களோடு மனதுக்கு பிடித்த ஒருவராக விஜய் உள்ளார்.
காமராஜர், அண்ணா ஆகியோரும் இந்த வழியில் தான் வந்தவர்களாக இருக்கிறார்கள். கடவுளை முன்னிறுத்தாமல் விஜய் செயல்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியடைய செய்த விஷயமாகும். அவர் தனது உரையில் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்து மட்டும் மாறுபடுகிறோம். கடவுளை வணங்குவது அவரவர் தனிப்பட்ட விஷயமாகும் என தெரிவித்தார். ஆனால் பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசியுள்ளார்.இந்து மதத்தில் மட்டும் தான் பெண்களை தெய்வமாக வணங்குகிறோம். நதிகளுக்கு பெண்கள் பெயர் சூட்டி அழகு பார்க்கிறோம். பெண்களை மதிக்கும்பொருட்டு தான் மற்ற பண்டிகைகளை ஒருநாள் கொண்டாடுகிறோம்.பெண்களை போற்றும் வகையில் அம்பிகைக்குரிய நவராத்திரி விழாவை கொண்டாடுகிறோம்.
மேலும் விஜய் மாநாட்டில் மது குடிப்பது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றது. இதையெல்லாம் மாற்று கட்சியினர் உள்ளே நுழைந்து செய்திருக்கலாம் எனவும் இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார்.