சூர்யாவை மனதில் வைத்து பாகுபலி படம்.. இயக்குநர் ராஜமௌலி சொன்ன விஷயம்! - Tamil News | Director Rajamouli To Reveal Baahubali Story Was Written For Actor Surya | TV9 Tamil

சூர்யாவை மனதில் வைத்து பாகுபலி படம்.. இயக்குநர் ராஜமௌலி சொன்ன விஷயம்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சூர்யா. நடிகர் சிவகுமார் மகனான இவர் சிறுவயது முதலே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தற்போது இவரின் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக சுமார் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகிவரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து தற்போது ரிலீஸிற்கு தயாராகி வரும் நிலையில் தற்போது படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வருகிறது .

சூர்யாவை மனதில் வைத்து பாகுபலி படம்..  இயக்குநர் ராஜமௌலி சொன்ன விஷயம்!

இயக்குநர் ராஜமௌலி

Updated On: 

08 Nov 2024 13:26 PM

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளிலும் உலகளாவிய திரையரங்குகளில் சுமார் 9000க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஒரே நாளில் வெளியாக உள்ளதாம். யுவி க்ரியேஷன் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் இணைந்து உருவாக்கிய இப்படத்தில் நடிகர் சூர்யாவிற்குக் கதாநாயகியாக திஷா பதானி நடித்துள்ளார் இவர்களுடன் பாபி தியோல் , யோகி பாபு , ரெடின் கிங்ஸ்லி , ஆனந்தராஜ் , நடராஜன் சுப்ரமணியம் , கோவை சரளா மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் எனப் பல திரை பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். 2021ம் ஆண்டு இப்படத்தின் உருவாக்கத்தைப் பற்றி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 3 ஆண்டுகள் தொடர்ந்து தற்போது வருகின்ற நவம்பர் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகி உள்ளது.

தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மக்கள் சந்திப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கு ப்ரோமோஷனில் பேசிய தெலுங்கு முன்னணி இயக்குநரான ராஜமௌலி, நடிகர் சூர்யாதான் பாகுபலி திரைப்படம் உருவானதற்கான முதல் இன்ஸ்பரேஷன். பாகுபலியை பான் இண்டியா படமாக எடுக்கலாம் என்பதற்கு சூர்யாவே இன்ஸ்பிரேஷனாக இருந்தார் என்றும்   பேசியுள்ளார்.

இதையும் படிங்க :லோகேஷ் கனகராஜின் LCU -ல் மொத்தம் எத்தனை படங்கள் தெரியுமா?

இயக்குநர் ராஜமௌலி தெலுங்கு இயக்குநர்களில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர். ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களை இயக்குவதால் மூலமாகத் தனது இயக்குநர் வாழ்க்கையை ஆரம்பித்த இவர். பின் முதன் முதலாக இவர் இயக்கிய திரைப்படம் ஸ்டூடன்ட் நபர் 1 என்ற 2001ல் வெளியான தமிழ் மொழிமாற்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தந்து சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். இப்படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் காஜாலா என இரு பிரபல நடிகர்களை வைத்து இயக்கினார்.

இப்படம் இவருக்கு ஓரளவு வெற்றி திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சிம்ஹாட்ரி , சாய்,சத்ரபதி மற்றும் மகதீரா போன்ற திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமானார். தனது வித்தியாசமான திரைக்கதை அமைப்பதின் மூலம் திரையுலகில் பிரபலமான இவர் நான் ஈ மற்றும் மாவீரன் என்ற சிறப்புத் திரைப்படங்களைத் தமிழிலும் மொழிபெயர்த்தார்.

இந்த திரைப்படங்களுக்குத் தமிழ் சினிமாவிலும் மிகுந்த வரவேற்புகள் கிடைத்தது. அதிலும் நான் ஈ என்ற திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிங்க : NGK படத்தில் நடிக்கவே முடியல’ நடிகை சாய் பல்லவி சொன்ன விஷயம்..!

இந்த திரைப்படங்களின் வெற்றியினை தொடர்ந்து இவரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக 2015ல் வெளியான திரைப்படம் பாகுபலி. புனைகதைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் எனப் பல தென்னிந்திய மொழிகளில் வெளியான இப்படம் இவருக்கு பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக அமைந்தது.

சுமார் 180 கோடி செலவிட்டு வெளியான இந்த திரைப்படம் உலகளாவிய வசூலில் சுமார் 650 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து உலக சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளியிட்டார் இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் தற்போது SSMB29 என்று  பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை இயக்கி வருகிறார். 1000 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகி வரும் என்றும் கூறப்படும் இப்படத்தில் முன்னணி கதாநாயகனாக மகேஷ்பாபு நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கங்குவா தெலுங்கு மொழி ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமௌலி பாகுபலி திரைப்படம் முதலில் நடிகர் சூர்யாவை மனதில் வைத்து கதையை அமைத்ததாகவும், இந்த திரைப்படத்தில் நடிக்க அவர் வாய்ப்பை இழக்கவில்லை என்றும், பாகுபலி திரைப்படத்தில் அவர் பணியாற்றும் வாய்ப்பை நான் தான் மிஸ் செய்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கங்குவா படத்தின் கதை இதுதான்… சூர்யா விளக்கம்!

 

 

தேங்காய் எண்ணெய் குடித்தால் இவ்வளவு பலன்களா?
சாப்பிட்ட உடனே வயிற்று வலியா? இதை பண்ணுங்க
குழந்தைகள் வாழ்வில் ஹீரோவாக தெரியும் அப்பா! - ஏன் தெரியுமா?
வாழ்க்கையை வளமாக மாற்ற எளிய டிப்ஸ் இதோ!