5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 – சூப்பர் அப்டேட் கொடுத்த செல்வராகவன்

Selvaraghavan: பல வருடங்களாக இந்த இரண்டு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு செல்வராகன் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து ரசிகரக்ளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை செல்வராகவன் கூறியிருக்கிறார். அது என்ன என்றால்,  புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் என 2 கதைகளை வெப் தொடர்களாக உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 – சூப்பர் அப்டேட் கொடுத்த செல்வராகவன்
செல்வராகவன்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Nov 2024 17:10 PM

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் தான் செல்வராகவன். இவர் இயக்கி தற்போது கோலிவுட்டின் கல்ட் சினிமா என்று கொண்டாடப்படும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களின் இடண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகி வைரலாகி வருகின்றது. தனுஷ் என்ற மாபெரும் கலைஞனை தமிழ் சினிமாவுக்கு உருவாக்கி தந்தவர் இயக்குநர் செல்வராகவன். இவர் தனது அற்புத படைப்புகளால் சினிமா துறையில் தனக்கென தனியொரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானார். இந்தப் படத்தில் தான் தனுஷ் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த படத்தை இயக்கியதும் செல்வராகவன் தான் என்றாலும், படத்தின் வியாபாரத்திற்காக தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா பெயரை படத்தின் இயக்குநர் என்று போட்டிருந்தனர். இளமைக்கால உணர்வுகளை முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு ஏற்றவாறு துள்ளுவதோ இளமை படத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்.

இதன் பிறகு காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என தொடர்ந்து வித்யாசமான படங்களை இயக்கி ரசிகர்களின் பேராதரவைப் பிடித்தார் செல்வராகவன். நடிகர் தனுஷ் இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில்கடந்த 2006-ம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கோலிவுட் சினிமாவில் கேங்ஸ்டர் படம் என்றால் ரசிகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவது புதுப்பேட்டை படம் தான். இந்தப் படத்தில் சோனியா அகர்வால், சினேகா, அழகம் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஒரு சாதாரண பள்ளி படிக்கும் பதின் வயது பையனின் வாழ்க்கையில் ஏற்படும் விபத்தால் அவர் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். அங்கு கேங்ஸ்டர்களுடன் சேர்த்து அவரும் பெரிய கேங்ஸ்டராக மாறுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே புதுப்பேட்டை படத்தின் கதை. இதன் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Also read… சினிமா துறையில் வேறுபாடுகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும் – தமன்னா

இதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி , ரீமா சென் , ஆண்டிரியா , பார்த்திபன் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். தஞ்சையில் இருந்து புலம் பெயர்ந்து போன சோழர்களைத் தேடிச் செல்கின்றது ஒரு குழு. சோழர்களை சென்றடையும் வழியில் அவர்கள் சந்திக்கும் சவால்களை தனது கற்பனைகளால் சுவாரஸ்யப் படுத்தியிருப்பார் செல்வராகவன்.

இந்த திரைப்படம் ரிலீசான போது ரசிகர்கள் அந்த அளவுக்கு கொண்டாடவில்லை என்றாலும் பல ஆண்டுகள் கழித்து இப்போது தமிழ் சினிமாவின் பெஞ்ச்மார்க் ஆயிரத்தில் ஒருவன் தான் என ஒவ்வொரு ரசிகர்களையும் சொல்ல வைத்துள்ளது தான் இப்படத்தின் மகிமை. படத்தின் இரண்டாம் பாகாம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Also read… ஓடிடியில் வெளியாகும் துல்கரின் ’லக்கி பாஸ்கர்’ படம் – எங்கு எப்போது பார்கலாம்

பல வருடங்களாக இந்த இரண்டு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு செல்வராகன் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து ரசிகரக்ளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை செல்வராகவன் கூறியிருக்கிறார். அது என்ன என்றால்,  புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் என 2 கதைகளை வெப் தொடர்களாக உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வெப் தொடர்களாக இந்த இரண்டு படங்களையும் எடுத்தால் நேரம் அதிகமாக கிடைக்கும் என்றும் அதனால் சொல்ல வேண்டிய கருத்தை படத்தின் மூலம் தெளிவாக கூற முடியும் என்றும் இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest News