5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: அந்த கடனை அடைக்க 15 வருஷம் ஆச்சு…. செல்வராகவனின் வேதனை வார்த்தைகள்

Aayirathil Oruvan: இந்த திரைப்படம் ரிலீசான போது ரசிகர்கள் அந்த அளவுக்கு கொண்டாடவில்லை என்றாலும் பல ஆண்டுகள் கழித்து இப்போது தமிழ் சினிமாவின் பெஞ்ச்மார்க் ஆயிரத்தில் ஒருவன் தான் என ஒவ்வொரு ரசிகர்களையும் சொல்ல வைத்துள்ளது தான் இப்படத்தின் மகிமை. அந்த வகையில் சோழ தேசத்தை பற்றி இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் இன்றும் ரசிகர்களால் பிரமிக்கும் அளவுக்கு மிகச்சிறந்த படமாக தமிழ் சினிமாவில் உள்ளது. 

Cinema Rewind: அந்த கடனை அடைக்க 15 வருஷம் ஆச்சு…. செல்வராகவனின் வேதனை வார்த்தைகள்
செல்வராகவன்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Aug 2024 16:10 PM

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் செல்வராகவன் தான் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்காக வாங்கிய கடனை அடைக்க 15 வருடங்கள் ஆனது என்று கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. தனுஷ் என்ற மாபெரும் கலைஞனை தமிழ் சினிமாவுக்கு உருவாக்கி தந்தவர் செல்வராகவன். இவர் தனது அற்புத படைப்புகளால் தனக்கென தனியொரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமான இவர், அந்த படத்தின் தான் தனுஷை ஹீரோவாக அறிமுகம் செய்தார். இந்த படத்தை இயக்கியதும் இவர்தான் என்றாலும், படத்தின் வியாபாரத்துக்காக தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா பெயர் படத்தின் இயக்குநராக இடம்பிடித்தது. முதல் படமே இளமைக்கால உணர்வுகளை ரசிகர்களுக்கு ஏற்றவாறு காட்சிப்படுத்தி துள்ளுவதோ இளமை படத்தை வெற்றி பெற செய்தார்.

இதன் பிறகு காதல் கொண்டேன்,  7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என தொடர்ந்து வித்யாசமான படங்களை இயக்கி ரசிகர்களின் பேராதரவைப் பிடித்தார் செல்வராகவன். இதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி , ஆண்டிரியா , ரீமா சென் , பார்த்திபன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். தஞ்சையில் இருந்து புலம்பெயர்ந்து போன சோழர்களைத் தேடிச் செல்கிறார்கள் ஒரு குழுவினர். சோழர்களை சென்றடையும் வழியில் அவர் சந்திக்கும் சவால்களை தனது கற்பனைகளால் சுவாரஸ்யப் படுத்தியிருப்பார் செல்வராகவன்.

இந்த திரைப்படம் ரிலீசான போது ரசிகர்கள் அந்த அளவுக்கு கொண்டாடவில்லை என்றாலும் பல ஆண்டுகள் கழித்து இப்போது தமிழ் சினிமாவின் பெஞ்ச்மார்க் ஆயிரத்தில் ஒருவன் தான் என ஒவ்வொரு ரசிகர்களையும் சொல்ல வைத்துள்ளது தான் இப்படத்தின் மகிமை. அந்த வகையில் சோழ தேசத்தை பற்றி இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் இன்றும் ரசிகர்களால் பிரமிக்கும் அளவுக்கு மிகச்சிறந்த படமாக தமிழ் சினிமாவில் உள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் அதில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இயக்குநர் செல்வராகவன் சில ஆண்டுகள் முன்பாக போஸ்டர் வெளியிட்டிருந்தார். ஆனால் இந்த படத்தை தயாரிக்கு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் முன்வரவில்லை. தொடர்ந்து படம் குறித்த எந்த தகவலும் வெளி வரவில்லை.

Also read… Movies List: விஜய் ஆண்டனி டூ யோகி பாபு… இந்த வாரம் திரையரங்கில் வரிசைக் கட்டும் முன்னணி நடிகர்களின் படங்கள்!

சமீபத்தில் இயக்குநர் மோகன் ஜி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், ”கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடுங்கள்.. இன்னும் இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன தயாரிப்பு நிறுவனமோ..” என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தயாரிப்பு குறித்து இயக்குநர் செல்வராகவன் முன்னதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு தயாரிப்பாளர் 60 சதவீத பணம் மட்டுமே செலவு செய்ததாகவும் அதையும் படத்தின் ரிலீஸ் அப்போதே அவர் சம்பாதித்து விட்டதாகவும், மீதி உள்ள 40 சதவீதத்தை செல்வராகவனே செலவு செய்ததாகவும் அந்த கடனை அடைக்க அவருக்கு 15 வருடங்கள் ஆனது என்றும் செல்வராகவன் தெரிவித்துள்ளார் அந்த வீடியோவில்.

Latest News