5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Pushpa 2 The Rule: புஷ்பா 2 எப்படி இருக்கு? – ராஜமௌலி விமர்சனம்.. ரசிகர்கள் ஹேப்பி!

Allu Arjun: புஷ்பா படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாட்னா, சென்னை, கொச்சி மற்றும் மும்பையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்வுகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தளங்களிலும் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. 

Pushpa 2 The Rule: புஷ்பா 2 எப்படி இருக்கு? – ராஜமௌலி விமர்சனம்.. ரசிகர்கள் ஹேப்பி!
அல்லு அர்ஜூன், எஸ்.எஸ். ராஜமௌலி
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 03 Dec 2024 09:02 AM

புஷ்பா 2 படம்: நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 தி ரூல் படம் எப்படி இருக்கும் என பிரமாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ராஜமௌலி தெரிவித்துள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். புஷ்பா படத்தின் 2 ஆம் பாகம் நாளை மறுநாள் (டிசம்பர் 5)  உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் சுனில் குமார், ஃபஹத் பாசில், ஜெகபதி பாபு, ராவ் ரமேஷ், அனசூயா பரத்வாஜ், தனுஞ்சயா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையும், பின்னணி இசையும் அமைத்திருந்தார். இது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

ஆனால் சமீப காலமாக தேவி ஸ்ரீ பிரசாத் இசை சரியில்லை என ரசிகர்கள் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். படத்தின் டைட்டிலை மட்டுமே வைத்து இசையமைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சமீபத்தில் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப்பின் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆனால் பின்னணி இசையால் தியேட்டரில் அமைதியாக படம் பார்க்க முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து தேவி ஸ்ரீ பிரசாத் வசம் இருந்த அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இப்படியான நிலையில் புஷ்பா 2 படத்திற்கு பின்னணி இசையை தமன் மற்றும் சாம் சிஎஸ் ஆகிய இருவரும் வழங்கியுள்ளனர். இப்படி ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில்  புஷ்பா 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படமானது தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் வெளியாகவுள்ளது.  புஷ்பா 2 படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும், இந்த படத்தில் இருந்து  வெளியான 4  பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: நீல நிற புடவையில் நடிகை அனிகா… வைரலாகும் போட்டோஸ்

விறுவிறுப்பாக நடைபெறும் ப்ரோமோஷன்

இதனிடையே புஷ்பா படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாட்னா, சென்னை, கொச்சி மற்றும் மும்பையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்வுகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தளங்களிலும் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது.  நேற்று ஹைதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக ​முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிய நிலையில் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய அவர், “அனைவருக்கும் வணக்கம். புஷ்பா 1 படம் வெளியான போது நான் அல்லு அர்ஜூனிடம்  இந்த படத்தை வட இந்தியாவில் விளம்பரப்படுத்த வேண்டும் என சொன்னேன். அங்கு உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்திருந்தேன். ஆனால் இப்போது மூன்று வருடங்களுக்குப் பிறகு வெளியாகவுள்ள புஷ்பா 2 உலகம் முழுவதும் விளம்பரங்கள் தேவையில்லை என நினைக்கிறேன்.

உண்மையிலேயே இது ஒரு கிரேஸ். பொதுவாக நாம் எந்த ஒரு திரைப்பட நிகழ்வுக்கு சென்றாலும் அந்த படத்தின் விளம்பரத்திற்கு  பயன்படும் விஷயத்தை பேசுவோம். ஆனால் இந்த படத்திற்கு அது தேவையில்லை. அதேசமயம் வேடிக்கைக்காக உங்களுடன் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2, 3மாதங்களுக்கு முன்பு, ராமோஜி பிலிம் சிட்டியில் புஷ்பா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் அங்கு சென்றிருந்தேன்.

Also Read: “யூஐ” திரைப்படத்திலிருந்து வெளியான வார்னர் வீடியோ..!

அங்கு அல்லு அர்ஜூன் மற்றும் சுகுமாரிடம் பேசிக் கொண்டிருந்த போது, ​​சுகுமார் படத்தின் ஒரு காட்சியை எனக்கு காட்டிக் கொண்டிருந்தார். அந்தக் காட்சிதான் புஷ்பராஜின் அறிமுகக் காட்சி என சொன்னார். அதைப் பார்த்தபோதே படம் எப்படி இருக்கும் என்று புரிந்தது. உடனே தேவி ஸ்ரீ பிரசாத்தை அழைத்து எந்தளவு இசையை சிறப்பாக கொடுக்க முடியுமோ அதனை செய்யச் சொன்னேன்.

அந்த அறிமுக காட்சியைப் பார்த்து மாரடைப்பு வராதது தான் மிச்சம். அந்த அளவுக்கு அருமையாக வந்திருந்தது. மேலும் டிசம்பர் 4 மாலை முதல் இந்த படம் எப்படி இருக்கும் என்று உலகம் முழுவதும் தெரிந்துவிடும். படக்குழுவினர் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்” என ராஜமௌலி தெரிவித்தார்.

Latest News