Director Suresh Sangaiya Demise: அடுத்த சோகம்! ஒரு கிடாயின் கருணை மனு இயக்குனர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..
இயக்குனர் சுரேஷ் சங்கையா: ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுரேஷ் சங்கையா கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுரேஷ் சங்கையா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியான இந்த திரைப்படம் மக்களிடம் தனி இடம் பிடித்தது. அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் சத்திய சோதனை என்ற படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பு இருந்தது. இந்த திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுரேஷ் சங்கையா கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
RIP director Suresh Sangaih, who made the films Oru Kidaiyin Karunai Manu and Sathiua Sodhanai. pic.twitter.com/xnBfmKoPJT
— Siddarth Srinivas (@sidhuwrites) November 15, 2024