‘லப்பர் பந்து’ படத்தில் விஜயகாந்த் பாடல் வைத்தது ஏன்? – இயக்குநர் விளக்கம்

காமெடி மட்டும் இன்றி காதல், பிரிவால் ஏற்படும் வலி, உறவுகளுக்கு இடையேயான சிக்கல் சாதியால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை மிகவும் எளிமையாக மக்களுக்கு புரியும் வகையில் கூறியிருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் ஒரு நல்ல படத்தை பார்த்துவிட்டு வருகிறோம் என்ற மன திருப்தியை உணர முடியும். படம் பார்த்த அனைவருக்கும் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு விஜயகாந்தின் ‘நீ பொட்டு வைத்த’ பாடல் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி செய்துவிட்டார் இயக்குநர்.

லப்பர் பந்து’ படத்தில் விஜயகாந்த் பாடல் வைத்தது ஏன்? - இயக்குநர் விளக்கம்

லப்பர் பந்து

Published: 

25 Sep 2024 10:41 AM

’லப்பர் பந்து’ படத்தில் விஜயகாந்த் பாடலை வைத்தது ஏன் என்பதற்கான காரணத்தை இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து தெரிவித்துள்ளார். அது தற்போது கோலிவுட் வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. ‘கனா’, ‘எஃப்ஐஆர்’ படங்களில் இணை இயக்குநராகவும், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் வசனகர்த்தாவுமான தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’. ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விளையாட்டுடன் சரியான கதையும், வசனங்களும் இடம்பெறும் படங்கள் மக்களிடையே விரைவாக சென்றுவிடும். அந்த அடிப்படையில் உருவான ‘லப்பர் பந்து’ படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகின்றது. லப்பர் பந்துகள் ரூ. 15-க்கு விற்பனையான ஒரு காலகட்டத்தில் படத்தின் கதை தொடங்குகிறது. கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்ட சிறுவனாக அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் இருக்கும் ஹரிஷ் கல்யாண் பள்ளியை கட் அடித்துவிட்டு கிரிக்கெட் ஆட செல்கிறார். ஜாலி ஃப்ரெண்ட்ஸ் டீம் என்ற அணியில் இருக்கும் டிஎஸ்கே, தாழ்த்தப்பட்ட சாதியை காரணம் காட்டி ஹரிஷ் கல்யாணை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால் அந்த அணியின் கேப்டனாக இருக்கு காளி வெங்கட் என் அணி ஜெயிக்கனும் அதனால் இவன் விளையாடுவான் என்று ஹரிஷ் கல்யாணை டீமில் சேர்த்துக்கொள்கிறார். வேண்டா வெறுப்பாக இதற்கு ஒத்துக்கொள்கிறார் டிஎஸ்கே.

அப்போது நடைபெறும் போட்டியில் எதிரணியில் பெயர்போன கிரிக்கெட் ப்ளேயராக இருக்கிறார் கெத்து பூமாலை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அட்டகத்தின் தினேஷ். விஜயகாந்த் பாட்டு பின்னணியில் ஒலிக்க கெத்து மட்டையை கையில் எடுத்தார் என்றால் எல்லா பந்தும் மைதானத்திற்கு வெளியேதான். கெத்து பயப்படும் ஒரே நபர் அவரது மனைவி. வேலைக்கு செல்வதாக சொல்லிக்கொண்டு கிரிக்கெட் விளையாட செல்கிறார் கெத்து. பெரும் பில்டப் உடன் அந்த பகுதியின் சச்சின் போல கொண்டாடப்படும் அட்டகத்தி தினேஷ் பேட்டிங்கில் வெளுத்து வாங்குகிறார். கெத்து என்கிற பூமாலையான அட்டக்கத்தி தினேஷின் பேட்டிங்கில் அவருடைய பலவீனத்தை சரியாக ஹரிஷ் கல்யாண் கணித்தாலும், அவருக்கு பவுலிங் வாய்ப்பு கிடைக்காமல் போகவே அங்கிருந்து விரக்தியுடன் கிளம்பி விடுகிறார்.

அதனை தொடர்ந்து லப்பர் பந்து ரூ. 35-க்கு விற்கப்படும் காலத்தில் கதை செல்கிறது. அட்டக்கத்தி தினேஷ் மகள் சஞ்சனாவும் ஹரிஷ் கல்யாணும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இடையில் சின்ன  மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி ஒரு கட்டத்தில் சண்டையில் முடிகிறது. பார்க்கிங் படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ மோதல் கடைசி வரை படத்தை பார்க்க வைத்தது போல இந்த படத்திலும் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் இடையே அந்த ஈகோ விஷயமும் பக்காவாக க்ளிக் ஆகியிருக்கிறது.

Also read… ’வேட்டையன்’ படத்தில் நடிக்க ரஜினிக்கு இவ்வளவு சம்பளமா? வைரலாகும் தகவல்

காமெடி மட்டும் இன்றி காதல், பிரிவால் ஏற்படும் வலி, உறவுகளுக்கு இடையேயான சிக்கல் சாதியால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை மிகவும் எளிமையாக மக்களுக்கு புரியும் வகையில் கூறியிருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் ஒரு நல்ல படத்தை பார்த்துவிட்டு வருகிறோம் என்ற மன திருப்தியை உணர முடியும். படம் பார்த்த அனைவருக்கும் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு விஜயகாந்தின் ‘நீ பொட்டு வைத்த’ பாடல் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி செய்துவிட்டார் இயக்குநர். அதுகுறித்து பேசியுள்ள இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து கூறியதாவது, “நாம எல்லாரும் விஜயகாந்த்தின் ரசிகர்கள்தான். நானும், நடிகர் தினேஷும் நடிகர் விஜயகாந்த்தின் மிகப் பெரிய ரசிகர்கள். அதிலும் நான் தீவிர ரசிகன். அதனால், நான் எடுக்கும் முதல் படத்தில் கண்டிப்பாக விஜயகாந்த் சாரை கொண்டாடவேண்டுமென்று நினைத்தேன். அதனால்தான் லப்பர் பந்து படத்தில் அவருடைய பாடல்களை வச்சி, அவரைக் கொண்டாடினேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது தற்போது கோலிவுட் வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?