ரஜினியின் கூலி டீசர் சர்ச்சை… விளக்கமளித்த வெங்கட் பிரபு!
Venkat Prabhu: வெங்கட் பிரபு திடீரென சர்ச்சை ஒன்றில் சிக்கி இணையத்தில் வைரலாகி வருகிறார். அதுகுறித்து வெங்கட் பிரபு விளக்கமும் அளித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’(கோட்). இதில் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்துவருகிறது. அங்கு ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் வெங்கட் பிரபு திடீரென சர்ச்சை ஒன்றில் சிக்கி இணையத்தில் வைரலாகி வருகிறார். அதுகுறித்து வெங்கட் பிரபு விளக்கமும் அளித்துள்ளார்.
‘யாரடி நீ மோகினி’ படத்தில் தனுஷின் நண்பராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயம் ஆனவர் கார்த்திக் குமார். தற்போது ஸ்டாண்ட் அப் காமெடியனாக வலம் வரும் இவர் சமீபத்தில் சினிமாவில் வரும் மாஸ் படங்களின் ட்ரெய்லர்கள் வீடியோக்கள் அனைத்தும் ஒரே மாதிரியாகதான் உள்ளது என்று கிண்டலடித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், இப்போது வரும் மாஸ் படங்களின் டிரெய்லர்கள் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கின்றன. அந்த நடிகர்கள் ஏற்கெனவே நடித்த பழைய படங்களில் இருந்து வசனங்கள் வைக்கப்படுகின்றன. மக்கள் வித்தியாசமாக எதிர்பார்க்கின்றனர்” என்று கூறியிருந்தார்.
Also read… Video: ”சண்டையில சாவுறது தான் வீரம்” – வெளியானது அர்ஜூன் தாஸின் ‘ரசவாதி’ பட ட்ரெய்லர்!
அந்த வீடியோவை, இயக்குநர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் டைட்டில் டீஸர் சமீபத்தில் வெளியான இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி அவர் ரஜினியின், ‘கூலி’ பட டீஸரைதான் சொன்னார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். பலர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அவர் பதில் அளித்துள்ளார் வெங்கட் பிரபு.
Breaking News 🚨 : Director @vp_offl reposted an Instagram story in which @Dir_Lokesh is being Mocked for #Coolie Title Teaser , Then Atlee …. Now Lokesh … pic.twitter.com/AfN201kqGn
— Let’s X OTT GLOBAL (@LetsXOtt) April 28, 2024
அதில் “இது கமர்சியல் திரைப்படங்களை எடுக்கும் எங்களைப் போன்றவர்கள் பற்றியது தான். கார்த்திக் கூறுவதும் உண்மைதான். நாங்கள் எங்களுடைய இந்த கமர்சியல் பாணியில் இருந்து வெளியேறி வேறுவிதமாக படங்களை எடுத்தால் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?” என்று அவர் கூறியுள்ளார்.