5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“பிரேம்ஜி திருமணம் செய்யும் பொண்ணு மீடியாவா?” – வெங்கட் பிரபுவின் வைரல் போஸ்ட்!

Venkat Prabhu: வெங்கட்பிரபு கதை இல்லாமல் கூட படம் இயக்குவார். ஆனால், அவரது தம்பி இல்லாமல் படம் இயக்க மாட்டார் என்று அனைத்து தரப்பினரும் கிண்டலடித்து வந்தனர். 44 வயதை கடந்த பிரேம்ஜி திருமணம் செய்யாமல் சுற்றித்திரிந்தார். ஆனால், கடந்த ஜனவரியில் ஆங்கில வருடப்பிறப்பில் இந்த ஆண்டு கண்டிப்பாக திருமணம் செய்யப்போகிறேன் என்ற தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். 

“பிரேம்ஜி திருமணம் செய்யும் பொண்ணு மீடியாவா?” – வெங்கட் பிரபுவின் வைரல் போஸ்ட்!
பிரேம்ஜி, வெங்கட் பிரபு
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 05 Jun 2024 12:59 PM

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் பிரேம்ஜியின் திருமண பத்திரிகை இணையத்தில் வைரலான நிலையில் இயக்குநரும் பிரேம்ஜியின் அண்ணனுமான வெங்கட் பிரபு தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் பிரேம்ஜி திரையுலக வாரிசு நடிகர் என்றாலும் என்றும் இவரது அண்ணன் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் இவருக்கென தனி ரசிகர்கள் இருக்கத்தான் செய்தனர். வெங்கட்பிரபு கதை இல்லாமல் கூட படம் இயக்குவார். ஆனால், அவரது தம்பி இல்லாமல் படம் இயக்க மாட்டார் என்று அனைத்து தரப்பினரும் கிண்டலடித்து வந்தனர். 44 வயதை கடந்த பிரேம்ஜி திருமணம் செய்யாமல் சுற்றித்திரிந்தார். ஆனால், கடந்த ஜனவரியில் ஆங்கில வருடப்பிறப்பில் இந்த ஆண்டு கண்டிப்பாக திருமணம் செய்யப்போகிறேன் என்ற தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு, நடிகர் பிரேம்ஜிக்கும், இந்து என்ற பெண்ணுக்கும் ஜூன் 9 ஆம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் வைத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடக்கவுள்ளதாக பத்திரிக்கை ஒன்று வெளியானது.

இந்நிலையில் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும் அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்! எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. “பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார் -சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா? இதை எல்லாவற்றையும் விட “பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?” என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்கனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்!

Also read… Weapon Movie: ’வெப்பன்’ படத்திலிருந்து ஆசைக்கு அளவேது வீடியோ பாடல் இதோ!

இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார். எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்!. BTW, The Goat அப்டேட் விரைவில்..!” என தெரிவித்துள்ளார்.

Latest News