5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இயக்குநர் தனுஷ் குறித்து வெற்றிமாறனின் கருத்து… வைரலாகும் தகவல்!

Director Vetrimaaran: தனுஷ் தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி என பலர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷ் இதற்க்கு முன்பு எந்த படத்திலும், நடித்திராத கெட்டப்பான மொட்டை தலையுடன் நடித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இயக்குநர் தனுஷ் குறித்து வெற்றிமாறனின் கருத்து… வைரலாகும் தகவல்!
தனுஷ், வெற்றிமாறன்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Aug 2024 21:28 PM

இயக்குநர் வெற்றிமாறன் தனுஷின் டைரக்‌ஷன் குறித்து பேசியது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தனது சினிமா வாழ்க்கைக்கு அண்ணன் செல்வராகவன் ஆரம்ப புள்ளி என்றால் இயக்குநர் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி அவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான ’பொல்லாதவன்’ படம் தனுஷின் சினிமா வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது. இப்படத்தில் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் சண்டைபோட வேண்டும் என்பதற்காக வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறினார் தனுஷ். அவரை சிக்ஸ் பேக்ஸ் உடன் பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்உ புரூஸ் லீ போல இருப்பதாக சிலாகித்தனர்.

அதனை தொடர்ந்து வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வந்த ’ஆடுகளம்’, ’வட சென்னை’, ’அசுரன்’ என வெளியான அனைத்துப் படங்களும் சொல்லி அடித்தது போல சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணிக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

தனுஷ் தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி என பலர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷ் இதற்க்கு முன்பு எந்த படத்திலும், நடித்திராத கெட்டப்பான மொட்டை தலையுடன் நடித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

சிறு வயதிலேயே தனது பெற்றோரை தொலைத்த தனுஷ் கிராமத்தில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாததை உணர்ந்து தனது இரண்டு தம்பிகள் மற்றும் தங்கையுடன் சென்னையை வந்தடைகிறார். அங்கு செல்வராகவனை சந்திக்கும் தனுஷ் அவருடைய உதவியால் வேலை, வீடு என தனது தம்பிகள், தங்கையை பார்த்துக்கொள்கிறார் தனுஷ். சிறு வயதிலேயே பெற்றோரை தொலைத்ததால் தனது தம்பிகள், தங்கைக்கு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கிறார். அவர்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் அவர்களை காக்கும் அரணாக நிக்கிறார் தனுஷ்.

Also read… Cinema Rewind: ’தர்மதுரை’ படத்தில் சின்ன ரோல்தான்… ஆனால் – ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன விசயம்

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக தனது முதல் தம்பி சந்தீப்கிஷன் அந்த ஏரியாவில் பெரிய தாதாவாக இருக்கும் சரவணனின் மகனை கொலை செய்து விடுகிறார். அந்த தாதாவிடம் இருந்து தனது தம்பி மற்றும் குடும்பத்தை எப்படி காப்பாற்றினார் தனுஷ். அதன் பிறகு என்ன எல்லாம் நடந்தது என்பதே படத்தின் கதை. குடும்பம், பாசம், துரோகம், பழிவாங்கல் என வழக்கமான டெம்ப்ளேட்டுகள் தான் படத்தின் கதை என்றாலும் அதனை சுவாரஸ்யமாக கடத்தியுள்ளார் இயக்குநர் தனுஷ்.

இந்த நிலையில் இயக்குநர் தனுஷ் குறித்து அவரது ஆஸ்தான இயக்குநர் வெற்றிமாறன் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. அதில் “இது ஒரு இயல்பான முன்னேற்றம் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் அவர் இயக்குனர்களைச் சுற்றி வளர்ந்தவர். “அவரது தந்தை ஒரு இயக்குனர், அவரது சகோதரர் ஒரு இயக்குனர், அவருக்கும் வேகமாக கற்கும் புத்திசாலித்தனம் உள்ளது. எனவே, அவர் இயக்குனராக மாறுவது மிகவும் இயல்பானது என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

Latest News