Amaran: கண்கலங்க வைக்கும் காட்சிகள்.. அமரன் படம் எப்படி இருக்கு தெரியுமா? - Tamil News | Diwali 2024 audience had high expectations for the movie Amaran staring Sivakarthikeyan and Sai Pallavi | TV9 Tamil

Amaran: கண்கலங்க வைக்கும் காட்சிகள்.. அமரன் படம் எப்படி இருக்கு தெரியுமா?

Amaran Review: அமரன் படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியான போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. நீண்ட நாட்களாக அவரின் தோற்றம் வெளிவராத நிலையில், தற்போது வெளியாகி உள்ள பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

Amaran: கண்கலங்க வைக்கும் காட்சிகள்.. அமரன் படம் எப்படி இருக்கு தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Published: 

30 Oct 2024 11:37 AM

அமரன் படம்: நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படம் தீபாவளி வெளியீடாக நாளை (அக்டோபர் 31) திரைக்கு வர உள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சாய் பல்லவி, ராகுல் போஸ், புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீ குமார், கீதா கைலாசம் என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் தியேட்டர் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

Also Read: Ajithkumar: ஒன்றிணைந்து செயல்படுவோம்.. அஜித்தை அழைத்த உதயநிதி ஸ்டாலின்!

இந்தப் படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியான போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. நீண்ட நாட்களாக அவரின் தோற்றம் வெளிவராத நிலையில், தற்போது வெளியாகி உள்ள பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த படம் தீபாவளி வெளியீடாக வரவுள்ளது என அறிவிப்பு வெளியானவுடன் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ந்தனர்.  இதனிடையே படத்தின் ஷூட்டிங் முடிந்து இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக கடந்த வாரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் ப்ரோமோஷன்கள் முழுவீச்சில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் நடிகைன்ச் சாய் பல்லவி அஞ்சலி செலுத்தினார்.

Also Read: தீபாவளி ரிலீஸ் படங்கள்.. களமிறங்கும் 4 படைப்புகள்… ஜெயிக்கப்போவது யார்?

தொடர்ந்து டெல்லியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு இந்த படம் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. படம் பார்த்த ராணுவத்தினரும், அவர்களது குடும்பத்தினரும் கண்ணீர் சிந்திய வீடியோக்கள் இணையத்தைன் வைரலாக்கியது. கண்டிப்பாக இந்த படம் ராணுவ வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமையும் என்றும், சிவகார்த்திகேயன் கேரியரில் பெஸ்ட் படமாக இருக்கும் எனவும் படம் பார்த்த திரையுலகைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

முகுந்த் வரதராஜன்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தமிழ் பெற்றோருக்கு பிறந்தவர் தான் முகுந்த் வரதராஜன். இவர் ராணுவத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் 2006 ஆம் ஆண்டு லெப்டினட் ஆக 22 ஆவது ராஜ்புத் பிரிவில் சேர்ந்தார். 2009 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான இந்து ரெபேக்கா வர்கீஸை திருமணம் செய்து கொண்ட முகுந்துக்கு இல்லற வாழ்வின் அடையாளமாக அஸ்ரேயா என்ற பெண் குழந்தை உள்ளது. 2012 ஆம் ஆண்டு மேஜராக பதவி உயர்வு பெற்ற அவர் ராஷ்டிரிய ரைஃபிள் படையில் ஜம்மு காஷ்மீரின் சோபியா மாவட்டத்தில் பணியாற்றி வந்தார்.

அந்த மாவட்டம் அக்கால கட்டத்தில் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்த இடமாகும். அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு மக்கள் குடியிருப்பில் தீவிரவாதிகளின் தலைவனான அல்தாப்  வாணி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் தனது படைகளுடன் மேஜர் முகுந்த் விரைந்தார். குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால் சிறிய படையோடு பெரிய ஆயுதங்கள் இன்றி சென்றார். வீட்டின் வெளியே தனது படையை நிற்க சொல்லிவிட்டு நண்பர் சிப்பாய்  விக்ரம் சிங்குடன் உள்ளே நுழைந்தார்.

மூன்று பயங்கரவாதிகள் இருந்த நிலையில் அவர்களும் சரமாரியாக சுட மூன்று பேரும் உயிரிழந்தனர். இந்த மோதலில் விக்ரம் சிங் மட்டுமல்லாமல் மேஜர் முகுந்தும் வீரமரணம் அடைந்திருந்தார். அவரது வீரத்தை போற்றும் வகையில் 2017 ஆம் ஆண்டு ராணுவத்தின் மிக உயரிய விருதான அசோகா சக்ரா விருது முகுந்து வரதராஜனுக்கு வழங்கப்பட்டது. இதனை இந்து ரெபேக்கா வர்கீஸ் பெற்றுக் கொண்டார். நாட்டுக்காக சேவை செய்யும் தனக்கு என்ன நேர்ந்தாலும் தைரியத்தோடு இருக்க வேண்டும் என முகுந்த் சொன்ன வார்த்தைக்காக அவரின் இறுதி சடங்கு கூட இந்துவின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டுவிட்டதா? இதை பண்ணுங்க
குக்கரில் இந்த உணவுகளை மட்டும் சமைக்காதீங்க
படுத்தவுடன் தூங்குவதற்கான டிப்ஸ்கள் - முயற்ச்சி செய்து பாருங்கள்!
ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும் - ஏன் தெரியுமா?