Diwali Movies: ஹவுஸ்புல்லாகும் அமரன்.. மற்ற தீபாவளி படங்களின் நிலை என்ன? - Tamil News | diwali-movies-amaran brother bloody beggar lucky baskar movie box office collections details | TV9 Tamil

Diwali Movies: ஹவுஸ்புல்லாகும் அமரன்.. மற்ற தீபாவளி படங்களின் நிலை என்ன?

Deepavali 2024: நடப்பாண்டு தீபாவளி பண்டிகை கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒருபக்கம் தீபாவளிக்கு முன்பாக பட்டாசு, ஆடை விற்பனை ஜோராக நடந்த நிலையில் தீபாவளி நாளில் இருந்து தீபாவளிக்கு வெளியான படங்களின் வசூல் எகிற தொடங்கியுள்ளது. இந்த தீபாவளிக்கு அமரன், பிரதர், பிளடி பெக்கர், லக்கி பாஸ்கர் ஆகிய 4 படங்கள் களம் கண்டது. இதில் எந்த படம் வசூலை வாரிக்குவித்துள்ளது என காணலாம். 

Diwali Movies: ஹவுஸ்புல்லாகும் அமரன்.. மற்ற தீபாவளி படங்களின் நிலை என்ன?

கோப்பு புகைப்படம்

Updated On: 

02 Nov 2024 11:20 AM

தீபாவளி படங்கள்: பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான். அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வந்துவிட்டால் தமிழ் சினிமாவையும், ரசிகர்களையும் கையில் பிடிக்க முடியாது. என்னதான் வீட்டு கொண்டாட்டங்கள் ஒன்று இருந்தாலும் தியேட்டரில் வெளியாகும் புதுப்படங்களோ அல்லது ஏதேனும் ஓடிக்கொண்டிருக்கும் பழைய படங்களையோ பார்க்காவிட்டால் அந்த பண்டிகை நிறைவு பெறாது. அந்த வகையில் நடப்பாண்டு தீபாவளி பண்டிகை கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒருபக்கம் தீபாவளிக்கு முன்பாக பட்டாசு, ஆடை விற்பனை ஜோராக நடந்த நிலையில் தீபாவளி நாளில் இருந்து தீபாவளிக்கு வெளியான படங்களின் வசூல் எகிற தொடங்கியுள்ளது. இந்த தீபாவளிக்கு அமரன், பிரதர், பிளடி பெக்கர், லக்கி பாஸ்கர் ஆகிய 4 படங்கள் களம் கண்டது. இதில் எந்த படம் வசூலை வாரிக்குவித்துள்ளது என காணலாம்.

Also Read: Viral Video: சிறுவனை பலி வாங்கிய சைக்கிள் சாகசம்.. அதிர்ச்சியடைய வைக்கும் காட்சிகள்!

அமரன் படம்

இந்த தீபாவளிக்கு அனைவரின் எதிர்பார்ப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் அமைந்தது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை மிக பிரம்மாண்டமான பொதுச் செலவில் தயாரித்திருந்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த அமரன் படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படை கொண்டதாகும். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி, ராகுல் போஸ், சுனில் அரோரா, ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த அமரன் படம் முதல் நாளில் ரூ.42. 3 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே 2 ஆம் நாளில் இந்த படம் ரூ.20 கோடி வசூலைப் பெற்றிருக்கலாம் என sacnilk இணையதளம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தீபாவளிக்கு 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அமரன் படத்தைக் காண ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருப்பதால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படம் 4 நாட்களில் கண்டிப்பாக ரூ.100 கோடி வசூலை எட்டும் என்பது உறுதியாகியுள்ளது.

Also Read: Special Bus: தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களே..! இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

பிரதர்  

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி, சரண்யா பொன்வண்ணன், சீதா உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகி உள்ள படம் பிரதர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படம் ஜெயம் ரவியின் கேரியரில் இரண்டாவது தீபாவளி வெளியீட்டு படம் ஆகும். அக்கா – தம்பி உறவே மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. முதல் நாளில் இப்படம் 2.5 கோடியும் மற்றும் இரண்டாம் நாளில் ரூ.2.25 கோடி வசூலை பெற்றதாக கூறப்படுகிறது.

லக்கி பாஸ்கர்

இதே போல் தமிழில் தனுஷை வைத்து வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, சூர்யா ஸ்ரீனிவாஸ், ராம்கி உள்ளிட்ட பலரையும் வைத்து இயக்கியுள்ள படம் லக்கி பாஸ்கர். இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படம் தீபாவளி வெளியீடாக வெளியானது. முதல் நாளில் ரூ.90 லட்சமும், இரண்டாம் நாளில் ரூ.6.45 கோடியும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது., தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளடி பெக்கர்

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் கவின், அக்ஷயா ஹரிஹரன், ரெட்டின் கிங்ஸ்லி, பிரித்விராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் பிளடி பெக்கர். ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படமும் கலவையான விமர்சனத்தை தான் பெற்றுள்ளது. இந்த படம் முதல் நாளில் ரூ.2.2 கோடியும், 2 ஆம் நாளில் ரூ.1.80 கோடியும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 நாட்கள் முடிவில் தான் எந்தப் படம் ஜெயிக்கும், வசூலை அள்ளும் என்பது தெரிய வரும். காரணம் விடுமுறை என்பதால் பலரும் சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட மற்ற பொழுதுபோக்கு விஷயங்களிலும் கவனம் செலுத்துவார்கள் என்பதால் வசூல் நிலவரத்தை இப்போதைக்கு கணிக்க முடியாது என திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.

வெறும் வயிற்றில் வேப்ப இலைகள் சாப்பிடலாமா?
தினமும் பூசணி விதை சாப்பிட்டால் என்னாகும்?
தேன் சுவைக்கு மட்டுமல்ல.. உடலுக்கும் பல நன்மைகளை தரும்..!
பல விதங்களில் உடலுக்கு நன்மை தரும் பாகற்காய்..!