Amaran Collection:விஜய்யை முந்தும் சிவகார்த்திகேயன்.. எப்படிதெரியுமா?
Amaran Collection :தமிழ் சினிமாவில் தற்போது முன்னிலை வகிக்கும் முக்கிய நடிகர்தான் சிவகார்த்திகேயன். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான இவர் தனது விடாமுயற்சியால் தற்போது வெள்ளித் திரையிலும் கலக்கி வருகிறார். இவர் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் அமரன் படம் வசூலை குவித்து வருகிறது.
சிவகார்த்திகேயன்: தமிழ்த் திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து பின் நகைச்சுவை நடிகராக, கதாநாயகனாக, தயாரிப்பாளராக முன்னிலை வகிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முதலில் போட்டியாளராகப் பங்குபெற்று பின் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராகித் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் மூலம் தமிழக மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். முதல் திரைப்படத்தில் ஓரளவு பெற்றி பெற்று பின் இரண்டாவது இயக்கிய திரைப்படத்தில் பெரும் பாராட்டு பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்ட படைப்பாக உருவான திரைப்படம் அமரன். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்த இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் நடித்திருந்தனர்.
சிறந்த கதைக்களத்துடன் வெளியான இந்த திரைப்படம் முதல் நாளிலே உலகளாவிய வசூலில் சுமார் ரூ42.3 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளியான அமரன் திரைப்படமானது தமிழ் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் மற்றும் ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் வசூலை முறியடித்து வருகிறது. அதிலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விஜய்யின் லியோ திரைப்படத்தின் வசூலைத் தெலங்கானாவில் மிஞ்சுவதற்குக் இன்னும் சில கோடிகள் மட்டும் தான் உள்ளது.
இதையும் படிங்க:’மூக்குத்தி அம்மன் 2’ இயக்காததற்கு இதுதான் காரணம்.. விஷயத்தை கூறிய ஆர்.ஜே. பாலாஜி
தெலுங்கானாவில் லியோவின் வசூலை முறியடிக்கப் போகும் அமரன்..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ம் தேதி உலகமெங்கும் வெளியான திரைப்படம் அமரன். இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலையும், மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்புக்குரியதாகவும் அமைந்த முதல் திரைப்படம் இதுவாகும். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த வரதராஜன் ராணுவ வாழ்க்கையை மையமாகக் கொண்டு இயக்கப்பட பயோபிக் திரைப்படமாகும்.
இந்த திரைப்படம் வெளியாகி 3 வாரங்களைக் கடக்க உள்ள நிலையில் இந்த திரைப்படம் உலகளாவிய வசூலில் சுமார் ரூ292.55 கோடிகளைத் தாண்டிய நிலையில் இந்த திரைப்படம் தெலங்கானாவில் மட்டும் சுமார் ரூ 41 கோடியை வசூல் செய்துள்ளது. நடிகர் விஜயின் லியோ திரைப்படம் சுமார் ரூ 45 கோடியை வசூல் செய்த நிலையில் இன்னும் சில வாரங்களில் லியோவின் வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:நடிகை நயன்தாராவின் “ராக்காயி” படத்தின் டைட்டில் டீசர்!
அமரன் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும்..
தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகர்களுக்கு எந்த அளவிற்குப் படத்தில் முக்கியம் இருக்கிறதோ அதைவிட ஒரு படி மேலாக நடிகை சாய் பல்லவிக்கு அமரன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் கிடைத்தது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பு ஒரு புறம் இருந்தாலும் நடிகை சாய் பல்லவியின் நடிப்பிற்காகவே பலரும் இந்த திரைப்படத்தை விரும்பி பார்த்தனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம்வந்த சாய் பல்லவி தற்போது பாலிவுட் திரைப்படத்திலும் நடிகையாக அறிமுகமாக உள்ளார். இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாக உள்ள “ராமாயணம் பாகம் 1” 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடிகளா?
நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் அமரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடிவருகின்றன. சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில் ரூ 250 கோடிகளைத் தாண்டிய வெற்றிப் படம் அமரன் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. ரசிகர்களும், திரையுலகைச் சார்ந்தவர்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல இயக்குநர்கள் அவரை அணுகி திரைப்படங்களில் நடிப்பதற்குப் பேசிவருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
தற்போது இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் “SK23” என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும், தொடர்ந்து சுதா கொங்கரா பிரசாத் இயக்கத்தில் “புறநானூறு” திரைப்படத்திலும் மற்றும் ரவிகுமார் இயக்கத்தில் “அயலான் 2” திரைப்படத்திலும் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.